பொருளடக்கத்திற்கு தாவுக

லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது! பரபரப்பு வீடியோ!


லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் கைது பரபரப்பு வீடியோ!

3481635e-c472-401a-b02b-85c7ef4a999f_S_secvpf லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்.

உல்லாசம்

கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

எனக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் சலவைத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியில் பணியாற்றினார். அவர் எனது மனைவியிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார் கொடுத்தேன். அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்தனர். அப்போது இருவருக்கும் கள்ளத்தனமான தொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர்.

உத்தரவிட வேண்டும்

இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில் அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில் விட்டுவிட்டனர்.

எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்

விடுதியில் உல்லாசமாக கிறிஸ்தவ மத போதகர் இருந்த போது அதிரடியாக உள்ளே நுழைந்த போலிஸார் கைது செய்த போது எடுத்த வீடியோ !

.https://videopress.com/v/X0KSQ4J1?hd=0&autoPlay=0&permalink=0&loop=0

http://angusam.com/2015/10/17/kanyakumari-recreation-christian-pastor-arrested/

மாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது


செய்யாறு அப்துல்லாபுரம் பாஸ்டர் ஸ்டீபன்குமார் மாணவியைக் கற்பழித்து கொலை மிரட்டல்

திருப்பத்தூர்: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  மைனர் பெண்ணிடம் உல்லாசம் இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17வயது பெண். இவர் மிட்டூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கிருந்து பிளஸ்1 படித்து வந்தார். மாணவி மிட்டூரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அந்த மாணவியுடன் அந்த சர்ச்சில் மத போதகராக இருக்கும்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அப்துல்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (எ) தீபக்குமார்( 47) என்பவர் நட்புடன் பழகி வந்தாராம். மேலும் அந்த பெண்ணை அவர் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்.அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம். அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மைனர்பெண் விஜயகுமாரிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விஜயகுமார், இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மைனர்பெண், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மதபோதகர் விஜயகுமாரை கைது செய்தார். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82898#sthash.e7OLVCBq.dpuf

http://www.maalaimalar.com/2015/10/15165619/Priest-arrested-for-girlfriend.html

http://www.dinamalar.com/news_detail.asp?id=1365358

திண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து


இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து சிலைக்கு படைத்து விடிய, விடிய விருந்து

http://www.dinamalar.com/news_detail.asp?id=1310865

பதிவு செய்த நாள்

04ஆக
2015
22:38

Tamil_News_large_1310865

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் 2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பாதிரியார் ஆரோக்கியசாமி தலைமை யில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

ஊர் பொதுமக்கள் சார்பாகவும், சங்கங்கள், குடும்பங்கள், வெளியூர் பொதுமக்கள் சார்பாக செபஸ்தியாருக்கு ஆடு, கோழி, அரிசி காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கோழிகள், 800 ஆடுகள், 130 மூடை அரிசி கிடைத்தது. அனைத்து மதத்தினரும் ஆடு, கோழி, அரிசியை காணிக்கையாக செலுத்தினர். இதில் வந்த மாடு மற்றும் சில பொருட்கள் உடனடியாக ஏலம் விடப்பட்டு, அந்த தொகை சர்ச் நிதியில் சேர்க்கப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.சமபந்தி விருந்து: நேற்று மாலை 6 மணிக்கு சமபந்தி விருந்து துவங்கியது. முதல் கட்டமாக 800 கோழி, 135 ஆடுகள் அறுக்கப்பட்டு பொது விருந்து விடிய, விடிய நடந்தது. இன்று பகல் 1 மணி வரை நடக்கிறது. பகல் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் சேவியர் ராஜ், ஊர் பொதுமக்களும் செய்துஉள்ளனர்.

கிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது


20150708a_003101003

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூர் அருகே மாடம்பாக்கம் ஜெயவந்த்புரத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதனை ரசுல் ராஜ் (53) என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகம் அருகில் இவரது மாமியார் கனகஜாய் (65) வீடு உள்ளது. இந்த வீட்டில் சட்டவிரோதமாக 3 வயதிற்குட்பட்ட 4 குழந்தைகள் அடைத்து வைத்து இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள், கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, 4 வயதில் 3 பெண், ஒரு ஆண் குழந்தை இருப்பது தெரிந்தது. அந்த குழந்தைகளை, அதிகாரிகள் மீட்டனர். மேலும் ஒரு குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் தெரியவந்த பகீர் தகவல்கள்: பெண் சிசு கொலைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களுக்கு இந்த காப்பகத்தினர் செல்வார்கள். அங்கு, பெண் குழந்தைகளை நாங்கள் எங்கள் காப்பகத்தில் சிறப்பாக வளர்ப்போம். வெளிநாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு தத்து கொடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கு வளமான வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

பெண் குழந்தையை கொல்ல மனமில்லாத சில பெண்கள், அந்த குழந்தைகளை இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒப்படைத்துள்ளனர். இதற்காக உசிலம்பட்டியில் பெண் சிசு கொல்லுவதை தடுக்கும் சிறப்பு முகாம் நடத்தினர். அதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அனுசரித்து நடந்தனர். இதுபோன்ற முகாம்களை நடத்த தமிழகத்தில் யாருக்கும் அரசு அனுமதி வழங்க வில்லை. குழந்தை வேண்டாம் என்றால் தொட்டில் குழந்தை திட்டத்தில்தான் போட வேண்டும்.

ஆனால், இவர்கள் இந்த குழந்தைகளை இலவசமாக வாங்கி வந்து, பெரிய பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதிகளுக்கு பல லட்சம் விலை நிர்ணயித்து விற்றுள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே, சட்டவிரோதமாக குழந்தைகளை காப்பகத்தில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து ரசுல் ராஜ், அவரது மனைவி ஜெயகுமாரி (48), மாமியார் கனகஜாய் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

TamilDailyNews_3452526330948

கிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்


கிறிஸ்துவ இனவெறி- கருப்பின மக்கள் பாதுகாக்க சர்ச் உள்ளே துப்பாக்கிகள்CHN_2015-07-03_maip12_8 c187c-61359714

கிறிஸ்துவ இனவெறி- கருப்பின பெண்ணிற்கு 73 வருடம் கழித்து கேட்ட நூலக அனுமதி அட்டை

14b8b-chn_2015-07-04_maip9_20

நவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்


‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர் நவீன் ஜோசப் ராஜா !

தூத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டை கிராமம் கைப்பந்து விளையாட்டுக்கு பெயர் போனது.

வீட்டுக்கு ஒரு கைப்பந்து வீரர் இந்த கிராமத்தில் இருப்பார்கள். இதே கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 28). சர்வதேச கைப்பந்து வீரரான இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். நவீன் மீது  மீது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பிரியங்கா (வயது 26) என்ற இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரடியாக சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பெங்களூர், கிர்லாஸ்கர், லட்சுமி நகரில் பெற்றோருடன் வசிக்கிறேன். எனது தந்தை தொழில் அதிபர். நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள். எம்.பி.ஏ படித்துள்ள நானும் கைப்பந்து வீராங்கனைதான். என்னைப்போல நவீனும் சர்வதேச கைப்பந்து வீரர். அப்படிதான் எனக்கு அவர்  பழக்கமானார். திடீரென்று என்னிடம் வந்த, நவீன் என்னை காதலிப்பதாக சொன்னார். அவரது காதலை நான் முதலில் ஏற்கவில்லை. ஆனால், நவீன் என்னை பல நாட்கள் பின் தொடர்ந்து  காதலிப்பதாக சொன்னார். ஒருகட்டத்தில் எனது காலில் விழுந்து கெஞ்சினார்.

பிளேடால் கைகளை கீறினார்

ஒருநாள் திடீரென்று தனது கைகளில் பிளேடால் வெட்டி, ரத்தத்தை எடுத்து அதில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதி காட்டினார். அவரது காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக  கூறினார்.. அவரது காதலின் ஆழத்தை பார்த்து, எனது மனம் மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் காதலர்களாக மட்டுமல்ல கணவன்–மனைவியாக  உலாவந்தோம்.

சாமி படத்தின் முன் சத்தியம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நவீன் வீட்டில் நான் பல நாள் தங்கி உள்ளேன். அவரது தந்தையிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் எனது குடும்பத்தினரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாமி படத்தின் முன்பு சத்தியம் செய்து, என்னை அவரது மனைவி என்று எனது குடும்பத்தினரிடம் நவீன் உறுதியாக சொன்னார். எனது நெற்றியில் குங்குமம் வைத்தும் சத்தியம் செய்தார். வாரத்தில் கடைசி நாட்கள் நவீன் பெங்களூர் வந்து எனது வீட்டில் தங்குவார்.

சுண்டங்கோட்டைக்கு சென்றோம்

என்னை அவரது சொந்த ஊரான சுண்டங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது சகோதரி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். அவரது ஊர்க்காரர்களிடம் என்னை அவரது மனைவி என்றே  அறிமுப்படுத்தினார். அவரது பெற்றோர் உறவினர்கள் என்னிடம் அன்புடன் பழகினார்கள். நவீனுக்கு என்னை ஊரறிய திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும் அதற்கு , 300 சவரன் நகைகளுடன் ஆடி சொகுசு கார், சென்னையில் ஒரு பங்களா வீடு வாங்கித்தர வேண்டும் என்று கூறினர். நான் எனது பெற்றோருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. எனவே அவர்களுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்தை எனக்கு தருவார்கள் என்று அவர்களிடம் கூறினேன்.

குறுக்கே வந்த போலீஸ் அதிகாரி மகள்

இந்த நிலையில், எனக்கு தெரியாமல், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவரின் மகளை நவீனுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்து விட்டனர். திருமணத்திற்காக  பேசி பத்திரிக்கையும் அடித்துவிட்டனர். வரும் 13 ஆம் தேதி கோவையில் திருமணம் நடக்கவுள்ளது. நவீனிடம் கேட்டபோது, என் பெற்றோர் பார்த்த பெண்ணை பெற்றோருக்காக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்.  காதலுக்காக உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சர்வசாதாரணமாக கூறினார்.

அதுமட்டுமல்லாமல் என்னை ஒதுங்கிக்கொள்ளும்படி அவரது பெற்றோர், சிலருடன் பெங்களூர் வந்தே  என்னை மிரட்டினார்கள். நவீனுக்கு அவரது மகளை திருமணம் செய்து வைக்க போகும் கோவை போலீஸ் அதிகாரி என்னை போனில் மிரட்டினார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.

நவீன்தான் என்றைக்கும் எனது கணவர். அவர் எனக்கு கிடைக்காவிட்டால், கற்பனையில் கூட நான் இன்னொருவரை கணவராக ஏற்கமாட்டேன். அவர் என்னை ஏற்காவிட்டால், அவர் எனக்கு செய்த துரோகத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பிடித்து விசாரணை
இந்த புகார் மனு மீது கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், மாம்பலம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா விசாரணை நடத்தி வருகிறார். நவீன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நவீனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிடாமல், டி.ஜி.பி. அலுவலக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்ததாக கூறப்படுகிறது.

கிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்