Skip to content

சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்


திங்கள் 29, ஜூன் 2015 5:21:04 PM (IST)

csi_arpattam
தூத்துக்குடியில் சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக்கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக் கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம் சார்பாக தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை இறையியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் தியான்சந்த் கார் தலைமை வகித்து கண்டனஉரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன், தமிழக திருச்சபைகளில் உள்ள பேராயர்களில் மிகவும் நேர்மையானவர், உண்மையானவர், கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்து பணிசெய்யக் கூடியவர். திருச்சபையின் நிர்வாகத்திலும், ஊழியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபைகளின் அநீதிக்கு துணை போகவில்லை என்ற காரணத்தால் தென்னிந்திய திருச்சபையின் சினாட் அமைப்பு, திருச்சபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் ஜெபச்சந்திரனை பணி நீக்கம் செய்து 2.5 ஆண்டுகள் ஆகியுள்ளன.
மேலும் ஆளுங்கட்சி சர்வாதிகாரம் இவர் மீது பொய் வழக்கை போட்டு இவரை பணி செய்யவிடாமல் அலைக்கழித்து வருகின்றனர். இந்த படுபாதக செயலுக்கு சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதம் உடந்தையாக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க மிஷன் கொடுத்த 35 கோடியில் 25 கோடியை ஊழல் செய்து வழக்கில் சிக்கியவர் இந்த மாடரேட்டர்.
மதுரை பேராயத்தில் பேராயராக போட்டியிட்டு பேனலில் கூட வரமுடியாத ஜேசுசகாயம் என்பவரிடம் லஞ்சப்பணத்திற்கு விசுவாசமாக பேராய கமிஷரி என்ற பெயரில் அவரை பணியமர்த்தி திருச்சபைக்கு எதிராக நிர்வாகம் செய்து வருகிறார். தேர்தலில் பணி நியமனங்களில் தமிழர்களை தரம் தாழ்ததி தமிழ் விரோத போக்கையும் கட்டவி்ழ்த்து உள்ளார். எனவே பேராயர் ஜெபச்சந்திரனை உடனடியாக பணியமர்தத வேண்டும். சினாட் மாடரேட்டர் ஊழல் குற்றவாளி தேவாசீர்வாதம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
இதில், பெடரல் சர்ச் ஆப் இந்தியா தலைவர் மரியராஜ், கிங்ஸ் சர்ச்சஸ் இந்தியா தலைவர் எட்வர்டு ராஜன், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் டேனியல் ஞானசேகரன், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் தேவதாஸ், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சாத்ராஜ், மாமல்லன், சாலமோன் ஜார்ஜ், பாஜக எம்.ஆர். கனகராஜ், பாமாக வழக்கறிஜர் பிரிவு ரசல்,  உட்பட சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Advertisements

பைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்


விவிலியம் கதைகளின்படி, உலகம் படைத்த நாள் முதல் அனைத்தையுமே பதித்து வைத்துள்ளதாம். அதன்படி பொ.மு. 4000 வாக்கில் உலகம் படைக்கப்பட்டது.

இதை பாதிரி நம்மிடம் உள்ள மிகப்பழைய எபிரேய பைபிள் பொ.கா. 9ம் நூறாஆண்டின் மசோடரிக் ஏட்டின் அடிப்படை, கிரேக்க செப்துவகிந்துபடி நின்னும் ஒரு 1500 ஆண்டு பின் தள்ளலாம்.

பைபிள்படி  பொ.மு.2300 வாக்கில் முழு உலகமும் பிரளய வெள்ளத்தில் மூழ்க, நோவா என்பவர் மட்டும் காப்பாற்றப்பட அவர் வாரிசுகளெ உலக மக்கள், அவர்களின் பிரிவுகள் விவிலியத்தில் உள்ளபடி . 

ஆதியாகமம் 9

பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்

18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும். 20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் மது சாரயம் செய்து குடித்தான். அவன் குடிபோதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாய் விழுந்து கிடந்தான்.   22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள். 24 மது சாரயம் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன், “கானான் சபிக்கப்பட்டவன்.     அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான். 26 மேலும், “சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.     கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான். 27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.     தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.     இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.

 Tutu -LANS

ஆதியாகமம் 10

5 மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது. 19.கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது. 20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.

31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள். 32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.

ஆப்பிரிக்க மக்களை இந்தக் கதைகள் மூலம் நீங்கள் அடிமையாய் படைக்கப் பட்டனர் என  இனவெறியும் கொண்டு, கிறிஸ்துவர் கொடுமை செய்ததை, பிஷப் ஹெக்கின் காணொளிகளில் காணலாம்.

பைபிள்படி ஐரோப்ப, அமெரிக்க வெள்ளையர்கள் (ஆரியர்கள்) இஸ்ரேலின் தெய்வம்படி கர்த்தருக்கு மிகவும் வேண்டியர்கள்- யாப்பேத் வாரிசுகள் கோதுமை நிற யூதர்கள், அரேபியர், ஆசியர் திராவிடர் வெள்ளையருக்கு கீழ்பட்டவர்கள். சேம் வாரிசுகள் ஆப்பிரிக்க கருப்பர் வெள்ளையருக்கு அடிமைகள் – கானான் வாரிசுகள்.

இயேசு கிறிஸ்து என ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கும், பழைய ஏற்பாடு காலத்தில் ஜெருசலேமை தலமையாக ஏற்ற யூத மதம் இருந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

சாக்கடல் சுருள்களின்படி, இஸ்ரேலின் சிறு கடவுள் யாவே தன் ஒரே இருப்பிடம் எனத் தேர்ந்தது கெர்சிம் மலையைத் தான். அதாவது ஜெருசலேமை முக்கியத்துவம் காட்டும் பழைய ஏற்பாடுபடி யூதேயா-இஸ்ரேல் அது கூறும் காலத்தில் இருந்ததே இல்லை. பொ.மு.150க்கும்ப்ப் பின் தான் ஒரு அரசியல் உரிமை நிலைநாட்ட புனையப்பட்டதே பழைய ஏற்பாடு ஆகும்.

http://en.wikipedia.org/wiki/Mount_Gerizim

The Torah commanded the Israelites on first entering Canaan to celebrate the event with a ceremony of blessings and cursings respectively on Mount Gerizim and Mount Ebal,[4][5] The masoretic text of the Tanakh says the Israelites later built an altar on Mount Ebal, constructed from natural (rather than cut) stones, to place stones there and whiten them with lime,[2] to make peace offerings on the altar, eat there, and write the words of this law on the stone.[6] The Samaritan Pentateuch version of Deuteronomy, and a fragment found at Qumran,[7] holds that the instruction actually mandated the construction of the altar on Mount Gerizim, which the Samaritans view is the site of the tabernacle, not Shiloh.[8][9] Recent Dead Sea Scrolls work supports the accuracy of the Samaritan Pentateuch’s designation of Mount Gerizim rather than Mount Ebal as the sacred site.[10]

உலகம் பொ.மு. 4000 வாகீல் தான் படைக்கப்பட்டது என விஞ்ஞானம் தரும் பழைய ஏற்பாடு முழுமையும் ஜெருசலேம் ஆலயத்தை சீயோன் எனும் முறை கொண்டது.

ஆனால் பொ.மு.100 வாக்கிலான சாக்கடல் சுருள்களில் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே கெர்சிம் மலையைத்தான் தன் ஆலயம் எனத் தேர்ந்தெடுத்தார் என்கிறது.

இந்தியாவிலும் ஆரிய திராவிடர் எனப் பொய்களைப் பரப்பும் சர்ச், பைபிளின் வசனங்களின் எனவெறி வசனம் மூலம் ஆப்பிரிக்க மக்களை கொடுமை செய்தது உண்மை வரலாறு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்


Devapriya Solomon's photo.

திருச்சி லுத்தரன் சபையின் ஊழல்-கலவர அபாயம் -கொலைக் கூலிப்படை

சென்னை : கடவுளிடம் மன்னிப்பு கேட்பதே தண்டனையாகும் என்று உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.திருச்சி தமிழ் எவாஞ்சலிகல்  லூதரன் சர்ச் பிஷப் டாக்டர் மார்டின் தொடர்ந்த வழக்கில், சர்ச் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக, நீதிபதி கனகராஜை நியமித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாமல் பிஷப் கடந்த ஆண்டு ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுக்குழுவைக் கூட்டி சினாடுக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்துவிட்டார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சார்லஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பிஷப் மீது வைக்கப்பட்டுள்ளது. அவர் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


அவர் பிஷப் என்கிற புனிதமான பதவியில் இருப்பதால், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளிடம் மன்னிப்பு கோரவேண்டும். மேலும், அவர் நடத்திய பொதுக்குழு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சினாடுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியில் அமரலாம். இந்த உத்தரவு  வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து பிஷப் தாக்கல் செய்த அப்பீல் மனு பொறுப்பு தலை மை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே, மனுதாரரை கடவுளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு தரும் தண்டனையாகவே கருதப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


https://christianityindia.wordpress.com/2014/03/05/tamil-evangelical-lutheran-church-involved-in-legal-warangles/
தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!
மார்ச் 5, 2014
 –

தலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி


தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை
ஆங்கில விமர்சனம்: பிரான்சிஸ் ——-—-தமிழாக்கம்: லா.ரோஹிணி 
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு தலித்துகளும் வனவாசிகளும்படும் துயரமும் துன்பமும்.
எந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள்  துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
தன்னுடைய “வேண்டப்படாத பாதிரி” என்னும் சுயசரிதையில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகி உள்ளார். அவருடைய எழுத்துக்கள் அவருக்கு  என உள்ள தனிப்பாணியை வெளிப்படுத்து கின்றன. இதுவரை பல மக்களுக்கும் தெரியாத உண்மைகளை, உதாரணமாக  சர்சுகளில் பாதிரியார்கள் வாழ்க்கை, சர்ச் வாழ்க்கை- என பல விஷயங்களை தலித் பாதிரியார் வில்லியம் அவர்கள் விவரித்துள்ளார். இந்த தலித்பாதிரியார் பேனாவை கையில் எடுத்தால் அவர் வார்த்தை ஜாலம் செய்வது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உண்மையை போட்டு உடைப்பதுதான் அவர் அணுகு முறை ஆகும். மிகுந்த உணர்ச்சியோடு  அவர் நீண்ட தூரம் சென்று சர்சுகளில் நடக்கும் கேவலங்களை தோல் உரித்துக் காட்டுகின்றார்.
டில்லி ஆர்ச்பிஷப் தலித்பாதிரியார் வில்லியம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு பதில் எழுதும்போது “சர்ச்சின் நன்கு சுவர்களுக்குள் நடக்கும் மிகப் பெரிய” ஜாதி பாரபட்சம் குறித்து தலித்பாதிரியார் வில்லியம் அவர்கள் விரிவாக குறிப்பிடு கிறார். அவர் பின்வருமாறு ஆர்ச் பிஷப்புக்கு பதில் அனுப்பி உள்ளார்.
“நான் ஒரு தலித் பாதிரியார். பிச்சைக்காரன் அல்ல. சர்ச் சபையில் இடம் கொடுங்கள் என்று நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மங்களூரில் இருந்து வரும் உயர் ஜாதி பாதிரியாராக நான் இல்லை. அப்படி இருந்து இருந்தால் நீங்கள் என்னை கௌரவமாக நடத்தி இருப்பீர்கள். பைபிளை பிரச்சாரம் செய்ய எனக்கு உங்களுடைய அனுமதியோ அல்லது நீங்கள் கொடுக்கும் பதவியோ தேவை இல்லை. என்னுடைய எஜமானர் ஏசுதான். நீங்கள் அல்ல. நான் இயேசுவின் அடிமை. உங்கள் அடிமை அல்ல. சர்ச் சபையில் பதவி வகிக்காமல் இருந்தாலும் கூட இதுவரை நான் செய்த சாதனைகள் எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. நான் ஒரு தலித்பாதிரியார் எனவே கத்தோலிக் தலித்துகளின் கௌரவத்தை காப்பாற்றுவது எனது கடமை ஆகும்.”
இவ்வளவும் பிட்டுவைத்துவிட்டு தலித்பாதிரியார் வில்லியம் தனது கடிதத்தில் மேலும் தொடர்கிறார்.
உள்ளூரில் தலித்பாதிரியராக இருக்கும் எனக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக ஏன் சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை? ஆனால் இந்த மாதிரி பதவிகளை டெல்லி கத்தோலிக் சபையில் “மற்ற பாதிரிகளுக்கு” நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எவருமே இந்த பதவிகளுக்கு தேவையான தகுதிகளை பெற்று இருக்க வில்லை. என்னுடைய திறமைகள் குறைவாக இருப்பதால் எனக்கு சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை என்று உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லி உள்ளீர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்டதாகும். என்னுடைய குறைகள் என்ன என்றும் நீங்கள் சொல்லவில்லை, அவைகளை நீங்கள் நிரூபிக்கவும் இல்லை.
வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் இந்த சுய சரிதை “சர்ச்சுக்குள் நடக்கும் மர்மங்களை”  நீ பெரியவனா நான் பெரியவனா என்று நடக்கும்  தனி மனிதப் போராட்டங்களை அம்பலப்படுத்துகின்றன. சர்சுகள் நடத்தப்படும் விஷயம் குறித்து அந்த புத்தகம் பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தலித் பாதிரியார்களுக்கு தலித் மக்களுக்கு சர்சுகளில் இழைக்கப்படும் கொடுமைகளை அவருடைய சுயசரிதை புத்தகம் பட்டியல் இடுகிறது. இந்த சுயசரிதை புத்தகம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சுர்சுகளைப் பற்றி  மக்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணங்கள், கருத்துகள் எவ்வளவு தவறானவை, யதார்த்தத்திற்கு மாறானவை என்பதை வெளி கொணர்கிறது. சர்சுகளில் உள்ள செல்வாக்கு பெற்ற சிலர் எவ்வாறு “நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் ” என்பதையும் தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிப்படுத்துகிறது .”
டொமினக் இமானுவேல் என்னும் மற்றொரு பாதிரியைப் பற்றி எழுதும்போது தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பிற மொழிகளில் டப்  செய்ய அந்த படத்தை டொமினிக் தயாரித்தார். இதற்கான வரவு செலவுகள் அவரிடம் உள்ளன. அதை டில்லி கத்தோலிக்  அசோசியேஷன்  வலைதளத்தில் அவரை போட சொல்லுங்கள். வரவு செலவு கணக்குகளை அவர் வலைதளத்தில் பிரசுரித்துதான் தீரவேண்டும். இந்த படத்தை தயாரிக்கும் போது “சத்பாவனா” என்ற இயக்கத்தின் பேரும் அதில் சேர்க்கப்பட்டது ஏன் இப்படி செய்யப்பட்டது? இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார்? சத்பாவன  இயக்கம் இந்த படத்தை தயாரிக்க பணம்  கொடுத்ததால் அதன் பெயர் சேர்க்கப்பட்டது என்று டொமினக்  சிலரிடம் கூறியுள்ளார். இது எனக்கு தெரிய வந்துள்ளது.
இதில் இருந்தெல்லாம் என்ன தெரிகிறது? சர்ச்சுக்கு வரும் வரவு செலவுகளுக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். இதற்க்கான பெரிய தேவை உள்ளது. இது முற்றிலும் உண்மையான கோரிக்கை ஆகும். இம்மாதிரியே தான் எழுதிய சுச சரிதையில் ஒரு இடத்தில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பாதிரியார் ஒரு சுவாரஸ்யமான  சம்பவத்தை குறிப்பிடுகின்றார். அந்த சம்பவத்தால்தான் அவரது சுயசரிதைக்கே “வேண்டப்படாத பாதிரியார்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சம்பவம் என்ன தெரியுமா?
“நான் ஒரு வேண்டப்படாத, விரும்பப்படாத பாதிரியார். ஏன் என்றால் நான் ஒரு உள்ளூர் தலித்பாதிரியார். ஒரு நாள் நான் வேறு ஒரு பாதிரியருடன் மிகவும் சூடாக விவாதித்துக் கொண்டு இருந்தேன். விவாதம் மிகவும் உச்ச கட்டத்திற்கு போனது. அப்போது அந்த பாதிரியார் என்னைப் பார்த்து “நீங்கள் வேண்டப்படாத பாதிரியார் ” என்று சொன்னார். அதையே தன் சுயசரிதைக்கு தலைப்பாக வைத்து விட்டார்.
தலித்பாதிரியாரின் இந்த புத்தகம் தலித்சகோதரர்களைக் குறித்து சிந்திக்குமாறு ஹிந்து சமூகத்தையும் தூண்டுகிறது. தலித்துகள் சமூக மரியாதையை, சமமான நடத்தையை எதிர்பார்த்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று சொல்லப் படுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகு தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக தலித்துகள் நம்புகின்றனர். ஆனால் சர்ச் அமைப்பில் “பாரபட்சம் காட்டுவது” என்பது மிகவும் நாசூக்காக நடக்கிறது. எனவே கிறிஸ்துவர்களாக மாறிய பிறகும் கூட தலித்துகளுக்கு  நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலை காரணமாக வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி போன்ற தலித்கிறிஸ்துவ பாதிரியார்களின் நிலைமை இன்னும் மோசமாக பரிதாபமாக போகிறது. அவரைப் போன்றவர்களுக்கு பாதிரியார்களாக தொடர்வது அனேகமாக இயலாது என்ற நிலைமை உருவாகிறது.
தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பலர் கனவில் கூட சொல்ல பயப்படும் அல்லது ஒப்புக் கொள்ள அஞ்சும் பல விஷயங்களை துணிச்சலாக தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார். மதமாற்றம் என்னும் கொடுமையான எதார்த்தம் உள்ளதை அவர் ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதுகிறார்.
“தலித் ஹிந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தனர். ஏழைகளாக இருக்கின்றனர். ஏன் என்றால் உயர்ஜாதி ஹிந்துக்களால் அவர்கள் சுரண்டப் பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான வேலைகளை, பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இப்போதும் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக  மதம்மாறிய பிறகும் தலித் கிறிஸ்துவர்கள் கத்தோலிக் சர்ச்சின் அதிகாரிகளால் சுரண்டப்பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகும்  ஹிந்து   தலித்துகளின்  நிலைமை மேன்மை அடையவில்லை. முன் இருந்த மாதிரியேதான் மோசமாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் இருந்த போது தலித் ஹிந்துக்கள் உயர்ந்த நிலைக்கு வர உயர்ஜாதி ஹிந்துக்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. தலித்கத்தோலிக்கர்களின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடைந்த தாக இருக்கவில்லை. இப்போதும் மேம்பாடு அடையவில்லை. தலித் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைத்தரம், சர்ச்சிலோ, வட இந்தியாவிலோ, கிறிஸ்தவர் களாக மதம்மாறிய பிறகு கூட மோசமாகத்தான் இருந்தது. இப்போதும் மோச மாகத்தான் இருக்கிறது.
மேலும் தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் புத்தகம் சர்சுகளில் இருக்கும் இன்னும் சில பாரபட்சங்களைக் குறித்தும்  விவரம் தருகிறது. சர்சுகளில் “தென்னிந்தியர்கள் ஆதிக்கம்” அதிகமாக இருப்பதாக அவர் சொல்கிறார். டில்லி ஆர்ச் டியோசாஸ்  தென்னிந்தியர்கள் குறித்தே அதிக கவனம் மற்றும் அக்கறை காட்டுவதாக தலித்பாதிரியார் குறிப்பிடுகிறார். கத்தோலிக் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் தென்னிந்தியர்கள்தான்  இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயத்தில் உள்ளூர் வாசிகளுக்கும், தலித்துகளுக்கும் சர்ச்களில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவ தில்லை. தங்களுடைய கத்தோலிக்க எஜமானர்களுக்கு அவர்கள் ஏறக் குறைய அடிமைகள் மாதிரிதான் உள்ளனர்.
பிரச்சனைகள் பல மட்டங்களில் உள்ளன. சர்ச்சின் வலிமை, யேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள மிக அதிகமான தலித்துகள் மற்றும் வனவாசி மக்களையே சார்ந்து உள்ளது. ஆனால் சர்ச்சின் கட்டமைப்பு உயர் ஜாதி, பணக் காரர்களை சார்ந்ததாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். இது மாற்றப் படாத தால்தான்  “போராட்ட அலைகள்” எழும்பத் தொடங்கி உள்ளன. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரியின் புத்தகம் “ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கம்” குறித்து பேசுகிறது. இந்த அமைப்பு தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள் குறித்து வலிமையாக அணுகுகிறது. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  அவர்கள் தன்னைக் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  விடை அளிக்க சரியான இடத்தைத்தான் தெரிவு செய்துள்ளார்.
தலித்துகளும் வனவாசிகளும் “வெள்ளை அங்கிகளுக்கு பின்னால்” பல “கருப்பு பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு உள்ளனர்”. இதை எல்லாம் சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்களில் பணி செய்வோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் “வேண்டப்படாத பாதிரியார்” மிகவும் உபயோகமாக இருக்கும். “மதமாற்ற அரசியல்” பற்றி தெரிந்து கொள்ள புரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும். தலித்துகளும், வனவாசிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றம் வரும், சாத்தியமாகும். வெறும் மதமாற்றம் அவர்களின் நிலையை எந்த விதத்திலும் உயர்த்தாது. இந்த எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.http://organiser.org//CAT/In%20Focus_82918.aspx? NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N

திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து


   
குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது

 36 ‘ சட்ட அறிஞர்-போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ‘ என்று கேட்டார்.37 அவர், ‘ உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்  உன் இஸ்ரேலின் ஆண்டவராகிய கர்த்தரிடம் அன்பு செலுத்து. ‘ 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 

பைபிளின் கொள்கை- அதற்கு தனி சிறு எல்லை தெய்வம் கர்த்தர். முழு உலகுக்கு இல்லை

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

சாப்பிடுமுன் கை கழுவுதல் மிக மிக அவசியம். பல வியாதிகளைத் தடுக்கும்.

இயேசுவோ கை கழுவ வேண்டாம் எனத் தடுத்து தேவையில்லை என்பார். ஒரு சாதரண அறிவு குட்ட இல்லாதவர்

லூக்கா11:37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ‘ பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா!Matthew 15:2
“Why do your disciples break the tradition of the elders? They don’t wash their hands before they eat!”
Mark 7:2
and saw some of his disciples eating food with hands that were defiled, that is, unwashed.
Mark 7:3
(The Pharisees and all the Jews do not eat unless they give their hands a ceremonial washing, holding to the tradition of the elders.
Luke 11:37
When Jesus had finished speaking, a Pharisee invited him to eat with him; so he went in and reclined at the table.

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன?

http://pagadhu.blogspot.in/2014/02/blog-post_19.html

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
 இயேசு சீடருக்கு சொன்னது
மத்தேயு10:5 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.கானானியப் பெண்ணிடம் 

மத்தேயு15: 24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம்  மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் மற்றவ்ர்களுக்கு அல்ல ‘  என்றார். 26 இயேசு  மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.

யூதரல்லதோரை நாய் எனக் கேவலாமாய் கீழ்த்தரமாய் விமர்சித்தார் இயேசு.

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
 மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ‘ 
இயேசு தன் ஐம்புலன் களை அடக்கவே இல்லை

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மு.வ உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

 மாற்கு8:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
மத்தேயு8:19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ‘ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ‘ என்றார்.20 இயேசு அவரிடம், ‘ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ‘ என்றார்.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ‘ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ‘ என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ‘ நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் ‘என்றார்.
மாற்கு15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.

 இயேசு கடவுளும் இல்லை- நல்லவரும் இல்லை

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.’
மு.வ உரை:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு.வரதராசனார் உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
மு.வரதராசனார் உரை:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
ஏசு தன் வாள்நாளில் உலகம் அழியும் எனத் தெளிவாக பலமுறை புலம்பினார்.  

  • Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.
    Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.

  

ஏசு மிகச் சாதரண மனிதன் மட்டுமே. எபிரேயரான அவரைப் பற்றி அவரை பார்க்கவே இல்லாத நபர்கள் கிரேக்க மொழியில் புனைந்த புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை மிகைப் படுத்தி கடவுளக்குவது பயனற்ற வேலை

பாதிரியார் ஜிம் ஜோன்ஸ்- கிறிஸ்துவ சோஷலிஸ சர்ச்- 909 பேர் சர்சில் தற்கொலை -காணொளி


அமெரிக்கப் பாதிரியார் ஜிம் ஜோன்ஸ்- கிறிஸ்துவ சோஷலிஸ சர்ச்- 909 பேர் சர்சில் தற்கொலை
      
  

தோமா -செயின்ட் தாமஸ்- புனித தோமையர்


கிறிஸ்துவப் புராண புத்தகக் கட்டான புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் சீடர்களில் ஒருவர் எனப்படும் தோமா (புனித தோமையர்)  எனும் செயின்ட் தாமஸ்.(புனித தோமையர்).  இவர் பெயரை திதுமு என நான்காவது சுவி சொல்கிறது. இவர் பற்றிய சில செய்திகளை நான்காவது சுவியில் மட்டுமே உள்ளது.
தோமா என்றால் அரெமிய மொழியிலும், திதிமு என்றால் கிரேக்க மொழியிலும் இரட்டையர் எனப் பொருள்.
இதை பைபிளியல் அறிஞர் கூறுவது                                                                                         //”The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of Aramaci Theoma whose Greek translation is Didymus, meaning “Twin”, Most probably his original name was Judas, and the Parenthesis and the versional variants could ave scribal classification.                                                                                                                                       How could an Apostle be known by an epithet or adjective such as “Twin” // –Person and Faith of Apostle Thomas in the Gospels- George Kaniarakath.
தோமா நடபடிகள் நூலின்படி தோமா மேரியின் வயிற்றில் ஏசுவோடு ஒட்டிப்பிறந்த இரட்டையர்.ஏசுவுடைய சகோதர சகோதரிகள் என சுவிசேஷங்களில் உள்ளது கீழே
மாற்கு6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா,சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
சீடர்களில் தோமா தவிர, ததேயு என ஒரு சுவிசேஷத்தில் உள்ளதை மற்றவர் யூதா என்பார், மேலும் யூதாஸ் ஸ்காரியோத்து என்று ஒரு நபர். சர்ச் பாரம்பரியப்படி இவர்கள் ஏசுவைப் போலவே பார்க்க இருப்பர் எனில் இரட்டையர் என ஆகும், தோமா -யூதா-யூதாஸ் ஸ்காரியோத்து மூவரும் ஒருவராகவே இருக்கலாம் எனவும் சில பைபிளியலாளர் கருதுவர்.
ஏசுவின் சீடர்கள் 12 பேர் பற்றியோ, பவுல் இவர்களின் வாழ்வைப் பற்றியோ நம்பிக்கைக்குறிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லைவெறும் செவிவழிக் கதைகள் என ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) புனிதர்களின் பற்றிய கலைக்களஞ்சியம் சொல்கிறது.
//As with other Apostle, there are tradition of great unreliability after the descent of the Holy Ghost at Pentecost.// Page-213, Butler’s Lives of Saints; Vol-December.
கேரளா சர்ச் வெளியீடு- புனித தோமா கிறிச்ஸ்துவர் கலக்களஞ்சியம் கூறுவது-//” 2ம் நுற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஹிராக்ளியன் என்ற சர்ச் பிதா,  தோமாவினை இவர் தாத்தா நேரடியாக அறிந்தும் இருக்கலாம், ஏசு சீடர்களுள் மத்தேயு, பிலிப்பு, தோமா, மற்றும்   லேவி எனும் ததேயு நால்வரும் ஜெருசலேமில் இயற்கையான மரணத்தில் இறந்தார் என்கிறது. இதை சர்ச் பிதா அலெக்சாண்டிர்யாவின் க்ளெமெண்ட்டும் மறுக்கவில்லை//
Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas’s carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.
St. Thomas Christians Encyclopedia,Vol-2, Editor- Rev.George Menachery;  Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubter’s point of View by Rev H.COMES.
தோமா பற்றிய இந்தக் கட்டுரையில் தோமாவிற்கு பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், மலாக்க, திபேத் மற்றும் சீனாவில் இவருக்கு கல்லறைகள் உள்ளது.
There are six tombs for St. Thomas worldwide: one in Brazil, a second in Germany, a third in Japan, a fourth in Malacca, a fifth in Tibet, and a sixth in China. These were created as part of converting the natives to Christian fold based on the principles of incultration. In all these places myths of St. Thomas’s arrival is prevalant.
இவற்றையெல்லம் தாண்டி, தோமா இந்தியா வந்ததாகக் கதையை கிறிஸ்துவ சர்ச் பரப்பி வருகிறது. இவற்றிற்கு முதல் நிலை ஆதாரம் எனப்படும் நூல்  ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae]. ஆனால் இது 3ம் நூற்றாண்டின் முற்பகுதியுடையது எனப்படும், இதன் பிற்கால கிரேக்க, சிரிய மொழியின் ஏடுகள் உள்ளது.
தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
இப்புத்தகம் தரும் கதைப்படி, தோமா, ஏசுவுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர். ஏசு மறைவிற்குப்பின் சீடர்கள் சீட்டு குலுக்கிட, தோமாவிற்கு இந்தியா வர, எனக்கு மொழி தெரியாது என மறுக்க, ஏசு காட்சி தந்தும் மறுக்க, பின்னர் ஏசு தோமாவை ஒரு அடிமையாக கோந்தபோரஸ் மன்னனின் தூதர் ஹப்பனிடம் 30 வெள்ளிக்கு விற்றார். அவர் தன்னை ஒரு ஆசாரி எனச் சொல்ல, மன்னன் அரண்மனை தந்த பணத்தினை மக்களுக்கு வினியோகம் செய்திட, சிறையில் அடைக்கப்பட, பின் மன்னரின் அண்ணன் க்கெட் மரணமடைய, சொர்கத்தில் மன்னருக்கு அரண்மனை தயாரை இருப்பதை கண்டு, அதை வாங்க வர, மன்னன் கோந்தபோரஸ் கிறிஸ்துவராகத் தானும் தன் மக்கள் பலரையும் கிறிஸ்துவராகிட, அங்கே தோமா இயங்கி வந்தார். பக்கத்து நாடான மாஜ்தாய் மன்னன் ஆளும் நாட்டிற்கு சென்றார். மன்னன் இல்லதபோது அவரது மனைவி சரிஷியாவையும் மகன் வாஸனையும் அவர் மதம் மாற்றினார். சூனியம் செய்கிறார் எனப் பார்த்து மன்னர் மரண தண்டனை தர,  மலை மேல் அழைத்து  வீரர்கள்சென்று அடிக்க மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
மன்னர் மகன் நோய் வந்திட, மன்னர் தோமா கல்லறை சென்று எலும்பைத் தேட, கல்லறைக் காலி, தோமா சீடர்கள், அடக்கம் செய்த உடனே உடலை எடிச்சவிற்கும் பின் மேற்கத்திய நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்றனர்.
மாஜ்தாய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மாஜ்தாய்  நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, thou art come into a desert country, for we live in the desert; being like to brute beasts in our conversation, but now shall we be saved by thy hands; I beseech thee, therefore, take thought of me, and pray for me, that the compassion of the God whom thou preachest may come upon me, and I may become his dwelling place and be joined in prayer and hope and faith in him, and I also may receive the seal and become an holy temple and he may dwell in me.
மேலுள்ள கதையில் உள்ள கொண்டோபரஸ் என்றபடி ஒரு மன்னன்,  இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை பொ.மு. முதல் அல்லது பொ.கா. முதல் நுற்றாண்டில் ஆண்டார் என ஏற்க சில ஆதரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதைத் தாண்டி இந்தியா வந்ததாக தோமா நடபடிகளில் இல்லை.
ஆவணங்கள் இப்படி இருக்க இந்திய சர்ச்சுகள் தொடர்ந்து தோமா வந்தார் எனக் கதை செய்கிறது. இது பற்றி பல்வேறு புத்தகங்கள் புனையப்பட்டுள்ளன.
இதையெல்லம் மீறி சென்னை சாந்தோம் சர்ச், மிகப் பெரும் பொருள் செலவில் தோமா வந்தார், முதல் நுற்றண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் தோமா தொடர்பால் எழுதியதே திருக்குறள் எனப் பரப்ப, பல ஆவணங்களை தயார் செய்து வருகிறது.ஆசாரிய பால் கணேஷ், என்பவரை வைத்து பேராயர் ஆர்ச்பிஷப் அருளப்பா,பலவேறு போலி ஓலைசுவடி தயாரிக்கப் பணம் தந்தார். தன் கார் தந்தார். தன் வீட்டு முகவரியில் இவருக்கு பாஸ்போர்ட் பெற்று அன்றைய போப்பரசரிடம் அழைத்துச் சென்றார். ஆர்ச்பிஷப் ஐரோப்பாவில் இருந்தபோது ஆசார்ய பால் கணெஷ் மீது சர்ச்சினர் புகார் தந்திட, கைதானவரோடு, சர்ச் பணத்தில் வாங்கிய வீடு மற்றும் சிலவற்றை வைத்துக் கொண்டு வேறேதும் சொல்ல்க்கூடாது என்னும் கோர்ட்டிற்கு வெளியேயான உடன்படிக்கை செய்து சிறையிலிருந்து வரவிட்டது.. மேலும் தெய்வநாயகம் என்ற மெட்ராஸ் கிறிஸ்டிஅன் கல்லூரி பேரச்சிரய்ருக்கு மிகுந்த பணம் தந்து 10க்கும் மேற்பட்ட புத்தகம் வெளியிட உதவியது. தெய்வநாயகத்தின் ஆய்வினை ஒரு மதிப்பு வரவேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தில்தமிழ்கிறிஸ்துவத் துறை என்ற அமைப்பை சர்ச்சின் 100% பணத்தில் இன்றுவரை சர்ச் நடத்திவருகிறது.  தோமா திருவள்ளுவர் தொடர்பைப் பற்றி 100 கோடி செலவில் சினிமாப்படம் தயாரிப்பதாகச் சொன்ன சாந்தோம் சர்ச் தமிழ் மக்கள் எதிர்ப்பால் அதை நிறுத்தியது.
தோமா இந்தியா வந்ததாகக் கதை கட்டும் பலவற்றையும் நாம் தொடர்ந்து ஆராய்வோம்.