Skip to content

செக்ஸ் வேதாகமம் சர்ச்- யோகா என்ற பெயரில் அருவருப்பான கிறிஸ்துவம்

ஜூன் 11, 2011

செக்ஸ் கலந்த புதுவிதமான யோகா பயிற்சி ?

யோகா பயிற்சி மையத்தில் ஆபாச சிடிக்கள் சிக்கியதையடுத்து, வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர்
தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு செக்ஸ் கலந்து புதுவிதமாக யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக, தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புதுவிதமான யோகா பயிற்சி அளிப்பதற்காக நெதர்லாந்து, ருமேனியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து 3 பெண்கள் உட்பட 7 பேர் வந்துள்ளனர். பயிற்சிக்காக சென்னை வந்துள்ள டென்மார்க்கைச் சேர்ந்த கணவன்& மனைவியான மிகாய் ஸ்பென்ஸ், அடினா ஆகியோர், ஏற்கனவே ஆபாச படத்தில் நடித்தவர்கள் என்றும் புகார் தெரிவிக்கப் பட்டது.

வழக்குப்பதிவு செய்தபோலீசார்,  7 வெளிநாட்டினரையும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அந்த 7 பேரும் யோகா மையத்தை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து, அங்கு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த ஏராளமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்தும் ஆபாச சிடிக்கள் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், யோகா மையத்துக்கு பூட்டு போட்டனர். தலைமறைவான வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலாங்கரை மையத்தில் ‘தாந்திர கிளவ்’ யோகா

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த யோகா மையம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பெயரில் இயங்கி வருகிறது. சென்னைக்கு வந்து கடந்த 2 ஆண்டுகள் தான் ஆகிறது. தேனாம்பேட்டையில் வாடகை வீட்டில் செயல்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி விட்டோம். அவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இந்த மையத்தில் பயிற்சி அளிக்கும் 7 பேரும் தனித்தனியாக வெப்சைட் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதன்மூலம் விளம்பரப்படுத்தி மையத்துக்கு வாடிக்கையாளர்களை இழுக்கிறார்கள். செக்ஸ் கலந்த யோகா பயிற்சிக்கு ‘தாந்திர கிளவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் சேரும்போது முதலில் ஒரு மாதத்துக்கு இலவசமாக கற்றுத் தரப்படும். அதற்கு அடுத்த மாதத்தில் இருந்துதான் பணம் வசூலிக்கப்படுகிறது. 12 மாதங்கள் பயிற்சி எடுத்த பிறகுதான் ‘தாந்திர கிளவ்’ யோகா கற்றுத் தரப்படுகிறது. அதுவும் நீலாங்கரை மையத்தில்தான் சொல்லித் தரப்படும். தற்போது, அந்த 7 பேரும் வெளிநாட்டிற்கு தப்பி விடாமல் இருக்க பாஸ்போர்ட்டை முடக்க முயற்சித்து வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Labels: 

யோகா என்ற பெயரில் ஆபாசத்தை கடை விரிக்கும் கும்பல் குறித்த அதிர்ச்சி செய்தி!

தற்பொழுது ஆரோக்கியம் என்ற பெயரில் நம் சமுதாய இளம் வயது மாணவ, மாணவியரிடம் புகுந்துள்ள புதிய வார்த்தை யோகா. இந்த யோகப் பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என போதிக்கப்பட்டு வருகிறது. இதில் சேருவதில் நம் இளம் பருவத்தினரிடையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்த யோக ஆபாச, மானக் கேட்டினை உருவாக்கும் விஷயம் என்பதை கீழ்காணும் இந்நேரம் டாட் காம் செய்தி தெரிவிக்கிறது.

அது மட்டும் அல்லாது, இறைவனை ஒருவனாக மட்டும் முழுக்க முழுக்க நம்பும் ஒரு முஸ்லிமின் நம்பிக்கையை பொடி பொடியாய் தகர்க்கும் செயல்பாடும் ஆகும்.

ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில் பயிற்றுவிக்கும் Movement for Spiritual Integration in Absolute (MISA) மிசா எனும் இவ்வமைப்பு இந்தியா முழுவதும் தன் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மிசா அமைப்பு டென்மார்கில் நாதா எனும் பெயரிலும் அமெரிக்காவில் தாரா எனும் பெயரிலும் இந்தியாவில் சத்யா எனும் பெயரிலும் பதிவு செய்துள்ளது. இதன் ஆசிரியர்கள் டென்மார்க், ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதோடு இதன் தலைமை பயிற்றுவிப்பாளர்களான மிஹாய் ஸ்டோய்ன் மற்றும் அடினா ஸ்டோய்ன் ஆபாச படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தலைவரான ரோமானியாவை சேர்ந்த கிராகிரயன் பிவோலாரு ஆபாச படங்களில் நடித்ததற்காக பல முறை சிறைக்கு சென்றவர் என்பதோடு ஸ்வீடனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளவர்.

மிசா அமைப்பினர் நடித்துள்ள ஆபாச வீடியோக்கள் பற்றி கேட்கப்பட்ட போது அதன் தற்காலிக தலைவரான் மிஹாய் மிசா தன் சித்தாந்தத்தை பரப்பும் ஆரம்ப கட்ட பரிசோதனை முயற்சியே என்று பதிலளித்தார். எங்களின் ஆன்மிக தேடலின் உச்சகட்டம் சிவனையும் சக்தியையும் ஒன்று சேர்ப்பதே. அப்போது தான் மனிதன் உச்சபட்ச ஆன்மிக நிலையை அடைய முடியும் என்று கூறிய மிஹாய் இந்தியாவில் அதற்கான தேவை நிறைய இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமானவர்கள் தம் அமைப்பில் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூர் போலி சாமியார்கள் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்தே தமிழகம் விடுபடாத நிலையில் இவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழக கலாசாரத்துக்கு நல்லது.

நன்றி : இந்நேரம்.காம்.

20110607e_013101006-sex-churhc.jpg?w=448&h=878

Advertisements
2 பின்னூட்டங்கள்
  1. kasi permalink

    அட மூடர்களே! வெளிநாட்டவர் அனைவரும் கிறிஸ்துவர்கள் அல்ல. இந்த செக்ஸ் யோகா ஒரு வாடகை வீட்டில் நடந்ததாக செய்திதாள்களில் இருக்கிறதையும் வெளியிட்டு கிறிஸ்துவத்தை இதில் ஏன் சம்பந்தப்படுத்தி இப்படி ஒரு அசிங்கமான தலைப்பின் கீழ் இந்த செய்தியை வெளியிடவேண்டும்? எப்படியாவது கிறிஸ்துவத்திற்கு கெட்டபெயரை உண்டாக்கவேண்டும் என்ற வெறியோடு நீ செயல்படுவதை மக்கள் புரிந்துகொள்ளாமலா போவார்கள்?

  2. karma permalink

    The hidden Tantra practice was misused by some people. Sex is a part of Tantric and Tantric is not doing sex. Here these people are cheaters to make money. Nothing to do with Christians here.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: