Skip to content

பெனிஹின் DGS.தினகரனும் மோகன் சி.லாசரஸ் அந்நியபாஷை ஊழிய மாய்மாலம்.

ஜனவரி 7, 2011

பெனிஹின் ஊழியரைப்பற்றி ஏற்கனவே ஜாமக்காரனில் எழுதினேன். அவர் பிரசங்கம் மிக அற்புதம். ஆனால் அவர் ஊழியம் பொய். அந்த பொய் அவர் பேசிய அந்நியபாஷையிலிருந்து ஆரம்பித்தது. அந்த அந்நியபாஷை அவருக்குள் இருக்கும் பொய்யின் ஆவியிலிருந்து ஆரம்பித்தது. அந்த பொய்யின் ஆவி கேத்தரின் குல்மார் என்ற அவரின் குருவாகிய பென்ஹின் செத்துப்போன ஆவியின் பெயரில் பிசாசின் ஆவி செயல்பட்டதிலிருந்து தொடங்கப்பட்டதாகும்.

paulawhite-bennyhinn.jpgஅதன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் மேடை மேஜிக்குகள் அரங்கேறின. ஊதி வீழ்த்துவது, ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் பொய்யான அற்புதங்களால் ஜனங்களை கவர்வது, அதன்மூலம் பல கோடிகள் காணிக்கை சேர்ப்பது. ஜனங்கள், ஊழியர்கள், பிஷப்மார்கள் யாவரும் ஏமார்ந்துபோனார்கள். அதுமட்டுமல்ல, அவரைப்போல இந்திய ஊழியர்களும் ஊதி ஜனங்களை வீழ்த்த தொடங்கினார்கள், அந்நியபாஷை பேசினார்கள், பிரசங்கத்தின் நடுநடுவே அந்நியபாஷை பேசாவிட்டால் தனக்கு பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால். உள்ளே இருக்கும் பொய் ஆவியை ஜனங்களுக்கு மறைக்க அந்நியபாஷை பேசினார்கள். ஜனங்களும் ஏமார்ந்தார்கள். இப்போதும் எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் பொய்யின் ஆவியை மறைக்க பரிசுத்த ஆவியானவர் தனக்குள் உண்டு என்ற பொய்யை மக்கள் நம்ப அடிக்கடி நடுநடுவே அந்நியபாஷையில் பேசுகிறார்கள்.

அடுத்து ஜெப எண்ணெய் வந்தது, ஜெபித்த கைகுட்டை, சிலுவை, தேவதூதன் சிலை இவைகளை பெனிஹின் விற்க தொடங்கினார். அதையே காப்பியடித்து சகோ.DGS.தினகரனும், இந்தியாவில் ஆரம்பித்து வைத்தார். ஜெபத்தில் பெயர் அழைக்க தொடங்கினார், தங்க சிலுவை விற்க ஆரம்பித்தார். உடன்படிக்கை பெட்டி விளம்பரப்படுத்தினார், பிள்ளைகளுக்கு ஜெபிக்க 2000 ரூபாய் வசூலித்தார்.

அதையே நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களும் பின்தொடர்ந்து ஜெபத்தில் பொய் தீர்க்கதரிசனம் கூற ஆரம்பித்தார்.

இதன் ஆரம்பம் பரிசுத்த ஆவியானவரை தவறாக வியாக்கியானம் செய்து பொய்யின் ஆவியை பெற்றுகொண்டதே இந்த பாவங்களுக்கு காரணமாகும். அதனால்தான் பெனிஹின் எழுதிய எல்லாரையும் கெடுத்த புத்தமாகிய Good Morning Holy Spirit, பால் யாங்கிசோவின் 4th Dimention என்ற புத்தகங்களை பாஸ்டரும், பிஷப்புமான K.P.யோகன்னான் அவர்கள் தன் வேதாகம கல்லூரியில் அந்த புத்தகத்தை யாரும் வாசிக்ககூடாது. அந்த புத்தகம் லைப்ரரியில் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் என்று அறிந்தேன். அப்படி கட்டளையிட்ட அவரை வாழ்த்துகிறேன்.

star2.gifமுதலாவது பெனிஹின் ஆரம்ப காலங்களில் கூறிய சாட்சியின்படி தனக்குள் தன் குருவான கேத்தரின் குல்மாரின் செத்துப்போன ஆவி (என்ற பெயரில் புகுந்த பிசாசின் ஆவி) உள்ளில் இறங்கியது என்று கூறியது.

star2.gifபேசிய பொய்யான அந்நியபாஷை

star2.gifபொய்யான தீர்க்கதரிசனம், ஜெபத்தில் பெயர் அழைப்பது

star2.gifதன் மனைவி வீட்டைவிட்டு பிரிந்துப்போனது தனக்கு தெரியாது என்றும், என் பிள்ளைகளுக்கும் பிரிந்துப்போன காரணம் தெரியாது என்றதும் நூற்றுக்குநூறு பொய்.

star2.gifதன் மனைவி ஏன் பிரிந்துபோனார் என்று இதுவரை எனக்கு தெரியாது என்று பத்திரிக்கை நிருபர்களிடம் கூறின பொய்.

star2.gifவிவாகரத்து நோட்டீஸ் தன் மனைவி அனுப்பிய பின்னும் அவருடைய பிரிவுக்கு காரணம் தெரியாது என்றது. இமாலய பொய். காரணம் காண்பிக்காமல் யாராவது விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்களா? எத்தனை துணிகரமான பொய்.

Miss.Paula White Benny Hinn

star2.gifஇந்த பொய்தான் பால் ஒயிட் என்ற வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைக்க தைரியம் கொடுத்தது. இப்போது பத்திரிக்கை நிருபர்கள் அந்த பெண்ணையும் பெனிஹினையும் ஒரு தனி அறையில் கையும்களவுமாக பிடித்தார்கள். அப்போது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? அந்த பெண்ணை தனிமையில் நான் என் அறைக்குள் வைத்து கொண்டது. மணிக்கணக்கில் நேரம் கடத்தியது. நான் செய்த முட்டாள்தனம் என்கிறார்.

star2.gifபாவம் படிப்படியாக எப்படி உலக பிரசித்திப்பெற்ற ஊழியரின் வாழ்க்கைக்குள் பிரவேசித்ததை கண்டீர்களாக.

star2.gifஅபிஷேகம் என்ற மயக்கவார்த்தை, அந்நியபாஷை, கர்த்தர் பேசினார், கர்த்தர் காட்டினார், தீர்க்கதரிசனம் இப்படி பாவத்தோடு பாவம் கைக்கோர்த்துக் கொண்டது. பாருங்கள்.

star2.gifஇந்திய நாட்டு ஊழியர்கள் பலர் பள்ளிக்கூடத்தில் காப்பியடித்து பரீட்சை எழுதியதைபோல பெனிஹினையும், அவர் ஊழிய மாதிரியையும் அதோடு அவர் பேசும் பொய்யையும், மாய்மாலத்தையும் காப்பியடித்தார்களே, அவர்கள் அனைவரும் பொய்யர்கள் என்றும், மக்களை இத்தனைகாலம் ஏமாற்றினார்கள் என்றும் இனிமேலாவது உணர்ந்து திருந்துங்கள். கிறிஸ்தவர்களும் கண்மூடித்தனமாக இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை காணிக்கை கொடுத்து நகைகளை அள்ளிக்கொடுத்து ஏமார்ந்ததுபோதும். இனிமேலாவது இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையாக இருங்கள். ஜாக்கிரதையாக இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

Advertisements
5 பின்னூட்டங்கள்
 1. Dana eswar permalink

  nithyanadavai vidava ivanga perusa pannitanga

  Jeyantravai vidava perisa pannitanga

  Paul tackare-vai vidava perisa pannitanga

 2. chemistry permalink

  The great india is also no1 in prostitutes (1crore)

 3. மிஸ்டர் கெமி்ஸ்ட்ரி
  உமக்கு உலக நிலவரம் சரியாக தெரியவில்லை. கிறிஸ்தவ நாடுகளில் தான் விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கிறது. விபச்சாரத்திற்கு பெயர்போன நாடு தாய்லாந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடனே பாய்பிரண்டுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவின் 100 கோடி ஜனத்தொகையில் எத்தனை சதவீதம் விபச்சாரம் உள்ளது. அமெரிக்க, பிரிட்டன் ஜனத்தொகையில் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டு
  பாருங்கள். இந்தியா மோசம் இல்லை என்று புரியும்.

 4. DAVIDSOLOMON permalink

  Neengal Devanukku Thooramanavargal Alla…………… Kadavulai Parungal…. Avar peyarai solli eamatrubavargalai parthu mosam Pohathirungal.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: