Skip to content

பரங்கிமலை தோமையார் ஆலயம் தேசிய தலமாகிறது

ஜனவரி 4, 2011

பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது

8-ந் தேதி நடைபெறும் விழாவில்-மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

ஆலந்தூர், ஜன.4-

போப் வாயாலேயே பொய்த்துப் போன

புனித தோமா-தோமோ-தோமையார் -யார் 

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

http://devapriyaji.wordpress.com/saint-thomas/

பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது. இதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பழமையான ஆலயம்
சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கி.பி. 52-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது தமிழக திருத்தலமாக உள்ளது. இதை தேசிய திருத்தலமாக மாற்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவு செய்து உள்ளது.
இது பற்றி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஏ.நீதிநாதன் நேற்று பரங்கிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏசுநாதரின் சீடர்
ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தோமையார் மயிலை பகுதியில் நற்செயல்களை செய்து வந்தார். அவர் இந்த மலையில் கொல்லப்பட்டதால் புனித தோமையார் மலை என அழைக்கப்படுகிறது. இங்கு புனித இறைவனின் தாய் அன்னை மரியாள் ஓவியம் கண்டு எடுக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஏசு மற்றும் 12 சீடர்களின் ஓவியங்கள் உள்ளன. கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த ஆலயம் தமிழக திருத்தலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. புனிதம்மிக்க இந்த ஆலயம் தேசிய திருத்தலமாக மாற்றப்பட உள்ளது. அகில இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. அப்போது தேசிய ஆலயமாக்கி ஆணை வழங்கப்பட உள்ளது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இதற்கான விழா 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பரங்கிமலை புனித தோமையார் ஆலயத்தில் நடக்க உள்ளது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வதோர் பெனாக்கியோ தலைமையில் 120 ஆயர்கள் கலந்து கொண்டு அறிவிக்க உள்ளனர்.
இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய திருத்தலமாக மாற்றப்படும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பரங்கிமலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புனிதமிக்க இந்த பரங்கிமலையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார்.
அப்போது திருத்தலதந்தை பாக்கியரெஜிஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், பங்குத்தந்தைகள் அன்பு ரோஸ், லூயிஸ்ராயர், சிரில்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: