Skip to content

மைக்கேல் எழில்-9 வயது டியூசன் மாணவி கற்பழிப்பு

நவம்பர் 12, 2010
ஆனைமலை,  நவ. 12-
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைதுகோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகியோர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. குழந்தைகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குற்றவாளி மோகன்ராஜ் போலீஸ் அதிகாரிகளை சுட்டு விட்டு தப்ப முயன்ற போது போலீசாரின் என் கவுண்டருக்கு இரையானான். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பொது மக்கள் அமைதி அடைந்தனர். மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடினார்கள்.
கோவை பரபரப்பு அடங்குவதற்கு முன்பு ஆனைமலையில் 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பள்ளி வாசல் வீதியில் வசித்து வருபவர் அழகு. இவரது மகள் புவனேஸ்வரி (9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.இவள் அதே பகுதியில் வசிக்கும் கவிதா என்பவரிடம் டியூசன் படித்து வந்தாள். கவிதாவின் கணவர் மைக்கேல் எழில் நிர்மல் (வயது 30) கட்டிட தொழிலாளி, கவிதாவின் நிர்மலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
நேற்று முன்தினம் சிறுமி தனது அண்ணனுடன் கவிதாவின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மைக்கேல் எழில் நிர்மல் சிறுமியை நைசாக புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். அவளை கற்பழித்தார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் திடீரென அவளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவள் கற்பழிக்கப்பட்டது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இது குறித்து சிறுமியின் தந்தை அழகு கோட்டூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அஜித்திடம் தெரிவித்தார். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த மைக்கேலை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் குற்றவாளியை தாக்கவும் முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைதான மைக்கேல் எழில் நிர்மலை பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2ல் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் பொது மக்கள் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். இதனால் மைக்கேல் எழில் நிர்மலை ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்காதே… பதுக்காதே.,. குற்றவாளியை பதுக்காதே கொண்டு வா.. கொண்டு வா… குற்றவாளியை உடனே கொண்டு வா என கோஷ மிட்டனர்.
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிடு, அவனை என் கவுண்டர் செய் எனவும் பொது மக்கள் கோஷமிட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பும் பதட்டமும் உருவானது. தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி டி.எஸ்.பி. முத்தழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கைதான வாலிபர் மைக்கேல் எழில் நிர்மல் மீது கொலை முயற்சி மற்றும் சிறுவர் பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: