Skip to content

கன்னியாஸ்திரி கற்பழிப்பு பாதிரியார் ராஜரத்தினம் போலீசில் சரண்

நவம்பர் 8, 2010
கன்னியாஸ்திரி கற்பழிப்பு    பாதிரியார், இன்று    போலீசில் சரண்
திருச்சி, நவ.8-
திருச்சி ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம்(வயது42). இவர் மீது ஆண்டிமடம், தஞ்சையன்சாவடியை சேர்ந்த கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி, கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
பாதிரியார் ராஜரத்தினம் தன்னை பலமுறை மிரட்டி கற்பழித்ததாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக பாதிரியார் மீது கோட்டை மகளிர் போலீசார், கறிபழிப்பு, கருக்கலைப்பு மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பாதியாரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை ஐ கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு ராஜரத்தினம் மனு செய்தார்.
நீதிபதி ராஜசூர்யா, கடந்த 3-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் 8-ந்தேதி(இன்று ) திருச்சி மகளிர் போலீசில் காலை 8 மணிக்கு சரணடைய வேண்டும். போலீஸ் விசாரணைக்கு பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் புதன்கிழமை முதல் (10-ந்தேதி) வரை பாதிரியார் ராஜரத்தினம் கோட்டை போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி பாதிரியார் ராஜரத்தினம் இன்று காலை 6.30 மணிக்கு கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வளர்மதியிடம் சரண் அடைந்தார். சுமார் 30 நிமிடம் அங்கு இருந்தார்.
அதன்பிறகு பாதிரியாரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், வளர்மதி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது கன்னி யாஸ்திரி பிளாரன்சுமேரி கூறிய கற்பழிப்பு புகார் கருக்கலைப்பு குறித்து துருவி, துருவி கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டை, பாதிரியார் மறுத்ததாக கூறப்படுகிறது.
விசாரணை முடிந்ததும் மீண்டும் பாதிரியாரை திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
அப்போது பாதிரியாருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் அனுமதி கேட்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் நாளை ஆண்மை பரிசோதனை நடக்கும் என்று கூறப்படுகிறது.

பாதிரியார் இன்று போலீசில் சரண் அடைந்ததால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சரண் அடையும் போது கருப்பு கலர் பேண்டும், சட்டையும் அணிந்திருந்தார். அங்கி அணியவில்லை. தன்னை யாரும் பார்தது விடக் கூடாது என்பதற்காக அதிகாலையிலேயே சரண் அடைந்ததாக கூறப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: