Skip to content

கிறிஸ்தவ திருமணங்கள் பதிவில் சட்ட வரையறைகளை நீக்க வேண்டும்

நவம்பர் 8, 2010

கிறிஸ்தவ ஒன்றிப்பு கோரிக்கை

மதுரை : கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்வதில், தேவையற்ற சட்ட வரையறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, மதுரையில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் கிறிஸ்துவ ஒன்றிப்பு சார்பில், எடின்பரோ மாநாடு நூற்றாண்டை முன்னிட்டு, கலந்தாய்வு நரிமேடு சி.எஸ்.ஐ., கதீட்ரல் சர்ச்சில் நடந்தது. டி.இ.எல்.சி., பிஷப் மாட்டீன் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., திருமண்டில துணை தலைவர் ஆப்ரகாம் ரொனால்ட் தலைமை வகித்தார். ரோமன் கத்தோலிக்க பிஷப் பீட்டர் பெர்ணான்டோ கலந்தாய்வை துவக்கி வைத்தார். தலித் ஆதார மைய இயக்குனர் துரைராஜ், மரியன்னை சர்ச் நெறியாளர் ஜெபமாலை ராஜா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் அந்தோணி, இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம், சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் பேசினர்.

 

தீர்மானங்கள் குறித்து ஆப்ரகாம் ரொனால்ட் கூறியதாவது: சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைந்து வருகின்றன. தேவையானவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சர்ச், கல்லறைகள், நிலங்களை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கல்லறைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பெரியகுளத்தில் போராட்டத்திற்கு பின், கல்லறை திரும்ப பெறப்பட்டது. கல்லறைக்கு கூடுதல் இடங்களை அரசு ஒதுக்கித்தர வேண்டும். தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிறைவேற்ற, நீதிபதி மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

கிறிஸ்தவ ஆதரவற்றவர்களுக்கான நிறுவனங்கள் மீது பொய் புகார் சுமத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ திருமணங்களை ஆயர்கள் பதிவு செய்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பதிவு துறையினருக்கு அனுப்புகின்றனர். தற்போது அரசு பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இரு முறை புதுமண தம்பதிகளும், சாட்சிகளும் சர்ச் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்வதில் ஏற்படும் சட்ட வரையறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.

 

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: