Skip to content

கற்பழிப்பு பாதிரியாருக்கு முன்ஜாமீன் கூடாது-ஐகோர்ட்ல் ஆட்சேபம்.

நவம்பர் 2, 2010

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் கூடாது : ஐகோர்ட் கிளையில் ஆட்சேபம்.

மதுரை : திருச்சியில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை கற்பழித்த வழக்கில் சாட்சிகளை கலைக்கும் அபாயம் இருப்பதால், செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினத்திற்கு முன்ஜாமீன் கூடாது என, மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக இருந்தவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் மீது, கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்படி போலீசார், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

முன்ஜாமீன் மனு: முன்ஜாமீன் கோரிய ராஜரத்தினம் மனு, நேற்று நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. பிளாரன்ஸ் மேரி தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்யப்பட்டது. அவரும் நேற்று ஆஜரானார். அவரது சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன், வக்கீல் வெங்கடேசன் வாதிடுகையில், “ராஜரத்தினம் மீதான குற்றச்சாட்டு சமுதாயத்திற்கு எதிரானது. புகார்தாரரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து, மொபைல் போனில் படமெடுத்து மிரட்டியுள்ளார். கன்னியாஸ்திரி சபை தலைவருக்கு புகார்தாரர் கடிதம் எழுதியுள்ளார். 2008ல் கருக்கலைப்பு செய்த பின், புகார்தாரர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். “ராஜரத்தினத்தை கைது செய்து விசாரித்தால், உண்மை தெரியும். முதல் தகவல் அறிக்கை தாமதமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. ராஜரத்தினத்தை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சாதாரண கற்பழிப்பு வழக்காக எடுக்கக்கூடாது. புகார்தாரரை மிரட்டுகின்றனர். அவருக்கு பாதுகாப்பு இல்லை. மருத்துவச் சாட்சிகள், ஆதாரங்களைக் கலைக்க வாய்ப்புகள் உள்ளன. முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது’ என்றனர்.

பாதுகாப்புக்கு உத்தரவு: பிளாரன்ஸ் மேரிக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு வக்கீல் அன்புநிதி, “”பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜரத்தினம் சார்பில் ஆஜரான சேவியர் ரஜினி, “”மூத்த வக்கீல் ஆஜராக, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,” என்றார். இதையடுத்து, விசாரணையை நவ., 3ம் தேதிக்கு நீதிபதி ராஜசூர்யா தள்ளிவைத்தார்.

உயிருக்கு பாதுகாப்பு இல்லை: பிளாரன்ஸ் மேரி: ஐகோர்ட் கிளையில் பிளாரன்ஸ் மேரி கூறியதாவது: பாதிரியார் ராஜரத்தினம் மீது புகார் கொடுத்த நான், சபையில் இருந்து வெளியில் உள்ளேன். அவரை கைது செய்ய தயங்குகின்றனர். அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் உள்ளனர். வெளியில் சொல்ல பயப்படுகின்றனர். புகார் கொடுத்ததால், தொடர்ந்து மிரட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன், 10 பேர் என் தந்தை, தாயாரிடம், புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளனர். நாங்கள் இதற்கு பயந்து ஒவ்வொரு ஊராகச் சென்று வருகிறோம். உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் மூலம் மிரட்டல் விடப்பட்டது. எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். ராஜரத்தினத்திற்கு அரசியல், அதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதால், என் புகார் மீது உரிய நடவடிக்கை இல்லை. குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்; கோர்ட்டில் நீதி கிடைக்கும் என்றார்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: