Skip to content

கற்பழிப்பு திருச்சி பாதிரியார் ராஜரத்தினம் கன்னியாஸ்திரிக்கு கருக்கலைப்பு: மேலும் ஒரு வழக்கு; பெண் டாக்டர் மீதும் பாய்ந்தது

ஒக்ரோபர் 21, 2010
திருச்சி, அக்.21-
கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு கருக்கலைப்பு:    பாதிரியார் மீது     மேலும் ஒரு வழக்கு;    பெண் டாக்டர் மீதும் பாய்ந்ததுதிருச்சி பாதிரியார் ராஜரத்தினம் மீது கடந்த 11-ந்தேதி ஆண்டிமடம் கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி கோட்டை போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாகி விட்டார்.
பாதிரியார் ராஜரத்தினம் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கு விசாரணை வருகிற 1-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
முன்ஜாமீன் கிடைக்கும் வரை போலீஸ் கையில் சிக்க கூடாது என பாதிரியார் ராஜரத்தினம் முடிவு செய்து உள்ளார். எனவே போலீஸ் கையில் சிக்காமல் இருக்க அவர் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பெங்களூர் அல்லது மும்பைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரான்சு மேரியை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக மேலும் ஒரு வழக்கை (இ.பி.கோ313) கோட்டை போலீசார் பதிவு செய்து உள்ளனர். கற்பழிப்பு, கொலை மிரட்டல் ஆகியவற்றோடு கட்டாய கருக்கலைப்பு வழக்கும் போடப்பட்டு உள்ளதால் வழக்கு 3 பிரிவாக உயர்ந்து உள்ளது.
அதே போன்று பிளாரன்சு மேரிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த திருச்சி தென்னூர் ஆஸ்பத்திரி பெண் டாக்டரும் சிக்குகிறார். 2008ல் 2 முறை பிளாரன்சு மேரிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் ரூ.2500 வாங்கிக் கொண்டு பெண்டாக்டர் கருக்கலைப்பு செய்து மாத்திரை கொடுத்து உள்ளார்.
தற்போது கட்டாய கருக்கலைப்பு வழக்கு சேர்க்கப்பட்டு உள்ளதால் அந்த பெண் டாக்டரையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனால் பெண் டாக்டர் அதிர்ச்சியில் உள்ளார். கருக்கலைப்புக்கு சென்ற போது பிளாரன்சுமேரியுடன், அவரது சகோதரி மற்றும் தோழி ஒருவரும் சென்று உள்ளனர். பாதிரியார் வெளியில் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
எனவே பிளாரன்சுமேரியின் தோழி ,அக்காவிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அதே போன்று பிளாரன்சுமேரியை மிரட்டியதாக கூறப்படும் திண்டுக்கல் பாதிரியார், கருமாந்தூர் பாதிரியார், மதுரை பாதிரியார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
One Comment
  1. ஏசு பாவம் சுமக்க மீண்டும் வரவேண்டும் போல@!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: