Skip to content

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி- பாதிரியார் ராஜரத்தினம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து… கற்பழித்து…

ஒக்ரோபர் 17, 2010


இந்த மாதம் 02-05 தேதியிட்ட நக்கீரன் இதழில்… திருச்சி மாநகர் தொடர்பான ஒரு ’”அப்படியா?’’ செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் சாரம்…’ கடவுளுக்குத் தொண்டுசெய்யும் ஸ்திரி ஒருவர்.. கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்துகொள்ள… அவர் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்குக் காரணம், மாநகரில் உள்ள புகழ்பெற்ற தேவமைந்தனின் தந்தை பெயர்கொண்ட கல்லூரியின் முதன்மைப் பொறுப்பில் உள்ளவர்தானாம்’ என்பதே. விரைவில் அம்பலத்துக்கு வரயிருந்த இந்தத் தகவலை முன்னதாகவே நாம் ஸ்மெல் செய்து மறைமுக நடையில் இப்படி எழுதியிருந்தோம். நாம் சொன்னபடியே அந்த கன்னியாஸ்திரி மூலமே விவகாரம் அம்பலத்துக்கு வர… கிறிஸ்தவ திருச்சபைகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளன.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

நாம் குறிப்பிட்ட அந்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி. அவர் இப்போது திரைமறைவிலிருந்து வெளியே வந்து…

“என்னை திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து… கற்பழித்து… எனது நிர்வாணக் கோலத்தை செல்போன் மூலம் பட மெடுத்துவிட்டார். இதை இண்டர் நெட்டில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியே தனது ஆசைகளுக்குப் பலமுறை பணியவைத்து விட் டார்...’’’என்ற ரீதியில் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வளர் மதியிடம் புகார் கொடுக்க.. காக்கிகள் அதிர்ந்து போய்விட்டார்கள். காரணம்… 156 வருட தொன் மையைப் பெற்று பிரசித்திபெற்ற கல்லூரி.

கமிஷனர் வன்னியபெருமாளுக்கு மகளிர் காக்கிகள் இந்தத் தகவலை பாஸ் பண்ண.. “புகாரை விசாரித்து உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடுங்கள்’ என ஏ.சி. சீனிவாசனுக்கு உத்தர விட்டார் கமிஷனர். 

இதைத்தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். போட்ட காக்கிகள்… புகார் கொடுத்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை… முதலாம் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்த… புகாரைக்கேட்டு திடுக்கிட்ட மாஜிஸ்திரேட் ஆபிரகாம்… பிளா ரன்ஸ் மேரி கற்பழிக் கப்பட்டிருக்கிறாரா? கர்ப்பம் கலைக்கப் பட்ட அடை யாளங்கள் தென்படுகிறதா என்றெல்லாம் முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அதனடிப் படையின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மருத்துவப் பரிசோதனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை சந்தித்து என்ன நடந்தது என்றோம். கொஞ்சம் தயக்கத்துடன் நம்மை எதிர்கொண்ட அவர், நக்கீரன் என்று அறிந்ததும்… “”நக்கீரனில் என் மனவேதனையை எப்படியோ ஸ்மெல்பண்ணி நீங்க எழுதிட்டீங்க. இதைப்பார்த்ததும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பிச்சிடுச்சி. சரி.. வர்றது வரட்டும்னு புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்துட்டேன்” என்றவர்… தனது கசப்பான அனுபவங்களை விவரிக்க ஆரம்பித்தார்.

“”எனக்கு சொந்த ஊர் ஆண்டிமடம் பக்கத்தில் இருக்கும் தஞ்சைசாவடி. என் அப்பா மலையப்பன் ஒரு விவசாயி. எனக்கு சகோதர-சகோதரிகள் எல்லாம் இருக்காங்க. சின்னவயசில் இருந்தே எனக்கு அன்னை தெரசா மாதிரி சேவை பண்ணணும், அருட்சகோதரியா மாறி கடவுள் தொண்டு புரியணும்னு ஆசை. இதுக்காக பாளையங்கோட்டை முனீர்பள்ளம் கான்வென்ட்டில் தங்கினேன். அங்கிருந்தபடியே சிஸ்டர் சுவக்கில் நர்சரி பள்ளியில் ஆசிரியையா வேலை பார்த்தேன். இயல் பாவே நல்லா பாடும் நான்… முறையா இசை படிக்கவும் ஆசைப்பட்டேன். அதனால் இசைப்பாடம் படித்து டிப்ளமோ பட்டம் வாங்கினேன். மிருதங்கம் கூட நல்லா வாசிப்பேன். இந்த சமயத்தில்தான் அங்க இருந்த கிளினஸ் சிஸ்டர் எனக்கு நெருக்கமான தோழியானாங்க. அப்ப அவரைப் பார்க்க திருச்சி புனித வளனார் கல்லூரியில் பேராசிரியரா வேலைபார்த்த ராஜ ரத்தினம் வருவார்.

அப்ப அவருக்கு என்னை அறிமுகப்படுத்திய கிளினஸ்… “உன்னைப்போலவே இவருக்கும் இசையில் நிறைய டேலண்ட் உண்டு. இவர் உன்னை உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோவார்’னு சொன்னாங்க. ராஜரத்தினமும் என்கிட்ட நல்லா பேசிபழக ஆரம்பிச்சார். 2004-2005-ல் திருச்சி கிராப்பட்டி சிறுமலர் கான்வென்ட்டில் தங்கி… அந்த நர்சரி பள்ளியில் ஆசிரியையா வேலைபார்த்தேன். 2005 ஜூனில் பேராசிரியரா இருந்த ராஜரத்தினம் புனிதவளனார் கல்லூரி முதல்வரா ஆனார். என்னை தன்னோட கல்லூரிக்கு வரச்சொன்னார். 2006 ஜனவரி 22-ந் தேதி மதியம் அவரைப் பார்க்கப்போனேன். அங்க அவருக்கு அருட்தந்தைக்குரிய வசதியான அறைகளை ஒதுக்கியிருந்தாங்க. அங்க அழைச்சிக் கிட்டுப் போனார். அங்க சாதாரணமா யாரும் உள்ளே நுழைஞ்சிட முடியாது. ரொம்பவும் அன்பா பேசிய அவர் குடிக்க கூல்டிரிங்ஸ் கொடுத்தார்.. அதைக் குடிச்சதும் மயங்கிப்போய்ட்டேன்.

நினைவு தெளிஞ்சப்ப… உடம்பே கூசிப் போயிடிச்சி. என் உடம்பில் எதுவும் இல்லை. ராஜரத்தினமோ… “இதை யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னா.. செல்போன்ல இருக்கும் உன் நிர்வாணப்படத்தை நெட்டில் போட்டுடுவேன்’னு மிரட்டி னார். அவரோட செல்வாக்கு… சபைல அவருக்கு இருக்கும் மதிப்பு.. இதை யெல்லாம் நினைச்சி வெளில சொல் லாம மனசுக்குள்ளேயே மருகினேன்.

அப்புறம் அடிக்கடி என்னைக் கூப்பிட்டு மிரட்டி பயன் படுத்திக்கிட்டார். இதில் 2008-ல் நான் கர்ப்பமானேன். இதை அவர்ட்ட சொல்லி நியாயம் கேட் டப்ப… “பயப்படாதே எனக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறேன்’னு தென்னூர்ல இருக்கும் கே.எம்.சி. மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போனார்.

இதைத் தெரிஞ்சிக்கிட்டு எங்க அக்கா மேரியும் தோழி நான்ஸியும் மருத்துவமனைக்கு வர… அவங்களை பார்த்ததும் பதட்டமான ராஜரத்தினம்… என்னை அப்படியே விட்டுட்டுப் போய்ட்டார். மாத்திரை கொடுத்து அவங்க கருவைக் கலைச்சிட்டாங்க.

நடந்ததையெல்லாம் மதுரை ஆர்.சி. சபை தலைவர் தேவதாஸிடம் முறையிட்டுப் புகார் கடிதம் கொடுத்தேன். என்னை… விசாரணைக்கு போன 29-ந் தேதி மறுபடியும் வரச்சொன்னாங்க. நான் எனக்குத் தெரிஞ்ச நாலுபேரோட போனேன். அப்ப திருச்சபைத் தலைவர் தேவதாஸ்… “உன் குற்றச்சாட்டை ராஜரத்தினம் மறுக்குறாரே’ன்னு சொன்னார். “அவரை எனக்கு நேரா விசாரிங்க. அவர் என் கண்ணைப் பார்த்து தப்பு செய்யலைன்னு சொல் லட்டும்’னு சொன்னேன். அப்ப திருச்சபைத் தலைவரோட இருந்த சேவியர் வேதம்… “இது எங்கும் நடக்காத விசயமில்லை. சாமியார், சிஸ்டர்கள் விசயம் சாதாரணமானதுதான். ராஜரத்தினம் தவிர நீ யாரிடம் படுத்தே’ன்னு அசிங்கமா பேச.. என்னோட வந்தவங்க இதைத் தட்டிக்கேட்டாங்க.

உடனே கைகலப்பு வரை ஆச்சு. இங்க நீதி கிடைக்காதுன்னு நாங்க வெளில வந்துட்டோம். அருட் சகோதரியா புனிதமா வாழ நினைச்ச என்னை… நாசப்படுத்தி நடைபிணமா ஆக்கிய ராஜரத்தினத்தை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தராம ஓயமாட்டேன்”’என்றார் நீண்ட மூச்சிரைப்போடு.

புகாருக்கு ஆளான கல்லூரி முதல்வர் அருட்தந்தை ராஜரத்தினத்திடம் இது குறித்து நாம் கேட்டபோது… “”நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு சபையில் புரமோஷன் வரப்போகுது. இதைத்தடுக்க நினைக்கும் எதிரிகள் கீ கொடுத்தபடி அந்த பிளாரன்ஸ் மேரி ஆடுகிறார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”’என்கிறார் அழுத்தமாய்.
“”அருட்தந்தை தரப்பினரோ, இதில் வேற ஒண்ணும் விஷயம் இல்லைங்க. ஒரு சமூகத்தினர் அந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்க 60 லட்சம் வரை பேரம்பேசிப் பார்த்தாங்க. ஒண்ணும் கதைக்கு ஆகலை. அதான்… அருட்தந்தை ராஜரத்தினத்தை அசிங்கமாவது படுத்தலாமேன்னு இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்காங்க. அருட்தந்தை முன்ஜாமீன் முயற்சியில் இருக்கிறார்”’என்றனர் நம்மிடம்.

அரசு மருத்துவமனையில் பிளாரன்ஸ் மேரியைப் பரிசோதனை செய்த டாக்டர் பத்மாவதி…’””மேரி உறவு கொண்டதற்கான அடையாளங்கள் இருக்கிறது. அதே சமயம் கருக்கலைப்பு செய்து கொண்டதற்கான அடை யாளங்கள் தெரியவில்லை”’ என்று தனது ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

சாதி ரீதியிலான கண் ணோட்டத்தில்தான் கமிஷனர் வன்னியபெருமாள் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றெல்லாம் மேலிடம் வரை தகவல் போக…

“ஒரு பெரிய கிறிஸ்தவ அமைப்பின் கீழ் நடக்கும்… பிரபல கல்லூரி அது. அதன் முதன்மைப் பொறுப்பாளர் மீது புகார் என்றால்… கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணவேண்டாமா? சரியான எவிடன்ஸ் இருக்கான்னு கூட பார்க்காம எப்படி எஃப்.ஐ.ஆர். போட்டீங்க? நியூட்ரலா இருக்க வேண்டாமா?’’என கமிஷனரிடம் கேள்விகள் கேட்கப்பட… திகைத்துப் போய்விட்டார் அவர்.
இதைத் தொடர்ந்து அருட் தந்தை ராஜரத்தினம் முன்ஜாமீன் மனுவை எதிர்க்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறது காவல்துறை.

இரு தரப்பும் ஆள் பலத்தோடு மோதுவதால்… விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

னர்.

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்: மறியலுக்கு முயன்ற 79 பேர் கைது

 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….

திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….

கல்லூரியில் நுழைய முயன்ற தோழர்களை போலீசார் கைது செய்கிறார்கள்

திருச்சபையின் காம ஊழல்கள் சமீப காலமாக உலகமெங்கும் நாறி வருவதை அறிவோம். இதில் அமெரிக்கா தொடங்கி வாட்டிகன் இருக்கும் ரோம் வரையில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளில் பாதிரியர்களின் பாலியல் முறைகேடுகளுக்கெதிராக  பல வழக்குகள் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவெளியில் ஒரு பாதிரியாரின் குற்றம் தெரிந்த பின்தான் திருச்சபைகள் ஏதோ பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுக்கின்றன. கூடுமானவரை குற்றம் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுவதற்கு திருச்சபையில் அதிகார வர்க்கம் எப்போதும் முயன்று வருகிறது.

திருச்சியில் பிரபலமான ஜோசப் கல்லூரியில் அப்படி ஒரு மோசடி சமீபத்தில் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில்  முதல்வராகவும், பாதிரியாராகவும் இருக்கும் ராஜரத்தினம் என்பவர் உடன் பணியாற்றும் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதை அந்த கன்னியாஸ்திரி முன்பே ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்பதற்கு திருச்சபையின் அடக்குமுறையான சூழலே காரணம்.

இப்போது வேறுவழியின்றி இந்த பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. இதை அறிந்த திருச்சி நகர ம.க.இ.க தோழர்கள் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு 13.10.2010 அன்று காலை கல்லூரி அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். இது திருச்சி நகரெங்கும் மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பத்து தோழர்கள் மட்டும் கல்லூரியில் நுழைவதற்கு முயன்றனர். அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க செயலர் தோழர் ராஜா தலைமை வகித்தார்.

இந்த உடனடி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது. இந்த குறைந்த பட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றால் திருச்சபையின் ஊழல் இன்னும் பல வடிவங்களில் வெளிவரும் என்பதாலேயே இந்த நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தால் அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்களில் அனைத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தியாக பெரும் வரவேற்பைப் பெற்றது பெருவாரியான மக்களிடம் ஆதரவை உருவாக்கியிருக்கிறது.

_____________________________________________________________

ம.க.இ.க, திருச்சி .

12 பின்னூட்டங்கள்
 1. vedaprakash permalink

  கலைக்காவேரியைப் பற்றி நண்பர்கள் பல விஷயங்களை சொல்கிறார்கள். விசரித்து அறிந்த பிறகு எழுத வேண்டும்.

 2. ARUL
  கை நிறைய பணம் பை நிறைய பாவம் இப்படித்தான் போகிறது பெரும்‘பாலன’ பாதிரிகளின் பாவ வாழ்க்கை.
  ஆன்மீக போர்வையில் ஊருக்குள் அலையும் இந்த பாவிகள்தான் பாமர மக்களுக்கு பாவசங்கீர்த்தனம் தருகிறார்கள் என்பதுதான் ஒரு வேதனையான் வேடிக்கை இந்து போலிளுக்கு காவியுடை ஒரு கவசமென்றால் இந்த கத்தோலிக்க காலிகளுக்கு வெள்ளை அங்கி ஒரு கவசம்.
  பாதிரிகளுக்கு திருச்சபை எந்த கட்டுப்பாடுகளும் விதிப்பது மாதிரி தெரியவில்லை. பல கத்தோலிக்க பாதிரிகள் இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் வாழ்கிறார்கள்.
  மாளிகை வாசம் மைனர் வாழ்க்கை என சிற்றி்ன்பபிரியர்களாக அலையும் இவர்களில் பலரது கடந்தகாலம் வறுமையும் துயரமும் நிறைந்த்தாக இருக்கும்.
  எல்லா பாதிரிகளுக்கும் வங்கி கணக்குகள் இருக்கின்றன.வெளி நாட்டு நிதியுதவிகளை தங்கள் சொந்த கணக்குகளில் பெற்று சுக போகமாய் வாழும் பல பாதிரிகளை நான் அறிவேன். வெளி நாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டதும் தனியாக டிரஸ்ட்கள் ஆரமித்து அதன் மூலமே வாழ்வை வழமாக்கிக்கொண்ட பல போலி பாதிரிகள் இருக்கிறார்கள்.
  இவர்களில் பலர் ஜாதி வெறியர்கள் உடையார் வன்னியர்,மீனவர், நாடார்,வெள்ளாளர்,தேவர் தலித்துகள் என்று இந்த தேவனின் குழந்தைகள் போடும் கூச்சல்கள் கர்த்தரின் காதுகளையே பங்சராக்கிவிடும்..
  நல்ல உணவு நாகரீகமான ஆடை பெருமளவு பணம் இவை அனைத்தும் இருந்தாலும் வேலையென்று ஒன்று இல்லாததால் இவர்களில் பலர் காமப்பித்துபிடித்து அலைகிறார்கள்.
  பாதிரிகளின் பாலியல் தொடர்புகளைப் பொறுத்த மட்டில் அவர்கள்ன் கன்னியாஸ்திரி்களோடு மட்டுமல்லாது பல குடும்ப பெண்களுடனும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர்.
  ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரோடு கடுங்கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, புதிதாக ஒரு கன்னியாஸ்திரியை பிடித்தவுடன் பழையவரை வெட்டிவிடுவது,இதெல்லாம் இவர்களுக்குள் சாதாரண விஷயம்.
  கன்னியாஸ்த்திரிகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு தனியே .கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு
  கல்லூரி முதல்வராக வேலைபார்த்து மாதம் அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் மாதம் முன்னூறு ரூபய்தான் அவர்களுக்கு கைசெலவுக்கு வழங்கப்படும்.இதில்தான் அவர்கள் எண்ணை சோப்பு முதல் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். வங்கி கணக்கு வைக்க அனுமதி ஏதும் கிடையாது.
  கான்வென்டுகளில் சீனியர்கள் ஜூனியர் கன்னியாஸ்த்திரிகளை சிறுமை படுத்துவதும் குடும்பம் குலம் கோத்திரம் பார்த்து முக்கியத்துவம் தருவதும் ரொம்ப சாதரண விஷயம்.
  பல சபைகளில் தலமை பொறுப்பில் இருக்கும் மூத்த கன்னியாஸ்த்திரிகள் தங்கள் இளம்பருவத்தில் முறைகேடான பாலியல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அல்லது இன்னும் அத்தகைய வாழ்வைத் தொடர்பவர்கள்.அதனாலேயே அவர்களால் புதிதாக வரும் கன்னியாஸ்த்திரிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதை சாதகமாக பன்படுத்தி அவர்களும் தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
  மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பல கன்னியாஸ்த்திரிகள் பாவ பாதிரிகளின் அன்பொழுகும் பேச்சில் மங்கி அவர்களிடமோ அவர்களோடு தொடர்புடைய வேளி நபர்களிடமோ தங்கள் மனதை பறி கொடுத்து விடுகிறார்கள்.
  இப்போஒது பல சபைகளில் கன்னியாஸ்த்ரீகள் செல்போன் வைக்க அனுமதிக்கப் படுகின்றனர்,இதுவே இவர்களின் காதல் சேட்டைகளுக்கு மிகவும் வசதியாகி விடுகின்றன.
  செல்போன்கள் வைத்தருக்கும் கன்னியாஸ்திரிகளில் பெரும்பான்மையோரின் செல்போன்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் என்கேஜ்டாகவே இருக்கும். அவர்கள் யாருடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கர்த்தருக்கே வெளிச்சம்
  இப்படி ஆரம்பித்து .காதல் பல பேருடன் தொடர்பு கருக்கலைப்பு என்பதெல்லாம் இவர்களில் பலருக்கும் சகஜமான விஷயம்.
  காதல் வந்து துறவைத் துறந்து கல்யாணம் கட்டி குழந்தை குட்டிகளோடு வாழும் பல கன்னியாஸ்த்திரிகளும் பாதிரிகளும் நம் ஊர்களில் வாழ்கிறார்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
  சிறுபான்மையினர் என்ற அனுதாப கவசத்தை மாட்டிக்கொண்டு நமது கவனத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கும் இந்த கபட வேடதாரிகளின் முகத்திரையையும் கிழிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது.
  அதே சமயத்தில் துறவில் உறுதியாய் இறை பணியிலும் சமுகப் பணியிலும் தங்களை முழுமையாக அற்பணித்து வாழும் பல பாதிரிகளும் கன்னியாஸ்த்திரிகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  ARUL

 3. கத்தோலி்க்கன்
  சரியா சொன்னீங்க அருள். தமிழ்நாட்டு கத்தோலிக்கர்களின் பல கால மனக்குமுறல் இது. கல்லூரி இளசுகளெல்லாம் இவங்க ரொமான்ஸுக்கு முன்னால ஒண்ணுமே இல்லை. பணம், பெண், ஜாதி வெறின்னு இவர்களுடைய எல்லாப்பக்கமும் ரொம்ப அசிங்கமானது. கத்தோலிக்கத்தை அழிக்கிறத்துக்கு வேற யாரும் வேண்டாம். இவங்களே அதை ரொம்ப சரியா பண்ணிட்டு இருக்கானுங்க.
  Reply

 4. sunapana
  கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சொன்னது இது. “இது முன்னமேயும் இருக்கத்தான் செஞ்சுது. ஆனால் அரசல் புரசலா ஃபாதர் அப்பிடி இப்பிடின்னு சில ஊர்களில் பேசிக்கிடுவாங்க. எங்க ஊர் சர்ச் கிட்டவே ஃபாதர் பங்களா இருக்கு. சில பொம்பளைங்க அடிக்கடி ஃபாதரப் போய் பாத்திட்டு வருவாங்க.. ஆனா அப்போல்லாம் சர்ச்சுக்கு வர்ர சில பொண்ணுகளே ‘இந்த மாதிரி ஃபாதருக்கும் …அந்தப் பொம்பளைக்கும் கனெக்சனாம்’னுல்லாம் சொல்வாங்க..அப்போல்லாம் ஃபாதர் மேல தப்புத்தப்பா சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தோணும். ஆனால் இப்ப யோசிச்சிப் பாத்தா எல்லாக் காலத்திலேயும் இப்படி வேசம் போட்டுக்கிட்டு பொம்பளைகளை வேட்டை ஆடுறவங்க திருச்சபைல நிறைய இருந்துருக்காங்கன்னு தோணுது.. இப்புடி ஊர் உலகத்த ஏமாத்தாம கல்யாணம் செஞ்சுகிட்டே ஃபாதர்ங்க செர்வீஸ் பண்ணலாமே.. இப்பல்லாம் நான் சர்ச்சுக்கு தனியா போகவே பயப்படுறேன். ஹஸ்பண்ட், அல்லது அப்பா துணைக்கு வந்தாதான் போறேன்.”

 5. arul
  இப்போது தன்னை தலித் என்று சொல்லும் இந்த தேவதூதன் இதற்கு முன் எப்போதாவது தன்னை தலித் என்று சொல்லியிருக்கிறாரா..?ஏழை தலித் மாணவர் எவருக்கேனும் உதவியிருக்கிறாரா..?(உறவினர்கள் தவிர!) என்பதனை வேண்டுமானால் வினவு விசாரித்து எழுதலாம்.மற்றபடி பாதிரிகளின் பாலியல் தொடர்புகள்பற்றி அக்கம் பக்கம் விசாரித்தாலே பல வண்டிகளில் கதைகள் கிடைக்கும்.திருச்சி பாதிரியார் விசயத்தில் அவர் தன்னை காத்துக்கொள்ள ஜாதியை இழுப்பது அவரது பலவீனத்தை காட்டுகிறது.எல்லா அயோக்கியர்களும் தப்பு செய்து மாட்டிக்கொள்ளும் போது ஜாதியை கேடயமாக பயன்படுத்துவது நம்மூரில் சாதரண விஷயம் தானே.திருச்சபையில் ஜாதி வெறி எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களிலேயே தெளிவாகிறது.

 6. சாலமன் பீட்டர்
  இந்த பாதிரியார் அந்த கன்யாஸ்திரியை தொடர்ந்து கற்பழிக்கவும், அந்த கற்பழிப்பை நியாயப்படுத்தவும் துணை போனது கத்தோலிக்க நிறுவனம். அந்த பெண் பலமுறை கத்தோலிக்க அமைப்புகளில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவற்றை கத்தோலிக்க மத நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.
  இப்போது அவர் புகார் கொடுத்த பின்னால், அவரை பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் புரபசர் பணியிலிருந்து எடுக்கவில்லை.
  அந்த கன்யாஸ்திரிக்கும், இது போல பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கும் கத்தோலிக்க நிறுவனம் மேற்கு நாடுகளில் மில்லியன் டாலர்கள் கணக்கில் பணத்தை கொடுத்து செட்டில் செய்கிறது. ஆனால் இந்தியாவில் எவ்வளவோ நடந்தும் (அவற்றை இங்கே விலாவாரியாக விளக்கப்போவதில்ல. நான் முன்பு கத்தோலிக்கனாக இருந்து பிறகு விலகி பெந்தகொஸ்தே கிறிஸ்துவனானவன். அதிலும் சபை சாராமல் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் கிறிஸ்துவனாக இருக்கிறேன்) இங்கே பத்திரிக்கை பலம், பண பலம் மூலமாக அமுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்துவ அமைப்புக்கும் (கத்தோலிக்க, புராடஸ்டண்டு, எவாஞ்சலிக்கல் எல்லோருக்குமே) பத்திரிக்கைகளில் ஆள் உண்டு. எல்லா பத்திரிக்கைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பொதிகை தொலைக்காட்சியிலிருந்து சன் டிவி ஜெயா டிவி, விஜய் டிவி எல்லாவற்றிலும் ஆட்கள் உண்டு. கிறிஸ்துவத்துக்கு எதிரான எந்த கருத்துக்களும் வராமல் பார்த்துகொள்வதற்காகவும், அவர்களது பிரிவு பாதிரிகள் பெயர் வெளிவராமல் பார்த்துகொள்வதற்காகவும் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் வருடந்தோறும் செலவிடப்படுகின்றன. இந்த ஊழல்களுக்கான பணம் அப்பாவி கிறிஸ்துவர்களிடமிருந்து தசமபாகம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்களாக சுரண்டப்பட்ட பணம் இன்று கோடிக்கணக்கான ரூபாய்களாக ஆகியிருக்கிறது. இது மாதிரி சுரண்டல் இந்துக்களிடமும் இல்லை. இஸ்லாமியரிடமும் இல்லை. தசமபாகம் கொடுக்காதவர்களை கொடுக்க முடியாத ஏழ்மைச்சூழலில் இருப்பவர்களை தனிமைப்படுத்துவதும் கேலி செய்வதும், கடைசி பெஞ்சில் உட்காரவைப்பதுமாக தொல்லைகளும் துன்பங்களும் ஏராளம். தசமபாகம் கொடுக்காதவர்களை இயேசு நரகத்தில் தள்ளி வதைப்பார் என்று சபையில் ஓப்பனாக பேசும் பாஸ்டர்களும் உண்டு.
  இந்த பணத்தை வைத்துகொண்டு சபைக்கு வரும் அழகான பெண்களை தள்ளிகொண்டு போவதும், சிறுமிகளை உபயோகப்படுத்திகொள்வதும் இங்கே ஏராளம். ஆனால் வெளிநாடுகளில் வெளிவந்த விஷயம், இந்த பெண்ணால் இங்கே வெளியே மெல்ல கசிகிறது. உள்ளே இருப்பது பெரிய புழுத்து நாறும் அசிங்கம்.
  கிறிஸ்துவ பிரச்னை என்றால் உடனெ வெளிச்சம் போடும் பாஜக கூட எடுத்துகொள்ளாத பிரச்னையை நீங்கள் எடுத்துகொண்டு போராடுவதில் எனக்கு சந்தோஷம். ஆனால், இந்த ஒரு பெண்ணொடு மட்டுமில்லை இந்த பிரச்னை என்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
  (இதனை பின்னூட்டத்திலிருந்து நீக்குவதாக இருந்தாலும் சரி. தெரிந்துகொள்ளுங்கள். பல ஆண் சிறுவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது கத்தோலிக்க ஹாஸ்டல்களில் மட்டுமல்ல, உதாரணமாக் திருச்சி பிஷப் ஹீபர் காலேஜ், பிஷப் ஹீபர் பள்ளி ஹாஸ்டல்களில் பிரின்ஸிபாலின் சகோதரரே ஹாஸ்டல் வார்டன். அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஹாஸ்டல் ஏழை சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம்)
  இவர்களுக்கு ஒரு நீண்ட போராட்டம் மூலமாகவும், இந்த அசிங்கங்கள் வெளியில் வருவதன் மூலம் அங்கு நடக்கக்கூடிய சீர்திருத்தம் மூலமாகவுமே கிறிஸ்துவம் நல்ல பெயரை மீண்டும் எடுக்க முடியும்.

 7. இசக்கிமுத்து
  தன் குடும்பத்தினருக்கே கூட இதுபோன்ற வல்லுறவு, பலாத்காரம் போன்றவை நிகழ்ந்தாலும் மதத்திற்காக வெளியில் சொல்லுவதில்லை. அப்படியே சொன்னாலும் மக்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை மட்டுமே குற்றம் சொல்லுவார்கள். இதுபோன்ற உண்மைச் செய்திகள் மீடியாக்களில் பரவலாக வரும்போது இப்படிப்பட்ட பாதிரிகளின் மீது மக்கள் கவனமாக இருக்கவும், மக்களின் (கிறிஸ்தவ) மதவெறி அடங்கவும் வாய்ப்புகள் உள்ளது. மக்கள் கலை இலக்கிய கழ(ல)க தோழர்களுக்கு நன்றிகள்.

 8. ஆகா சாமியார்களையும் மிஞ்சிவிட்டார்கள்….

 9. saiprabu permalink

  பெரிய மனிதர்களை காம வலையில் விழ வைத்து உறவு கொண்டு கற்பமாகி அதை கலைத்து அதை சொல்லியே அந்த பெரிய மனிதரை மிரட்டி மிரட்டி பணம் பிடுங்குவது பெண்கள் எளிமையாக கையில் எடுக்கும் வியாபாரமாக மாறி விட்டது.

Trackbacks & Pingbacks

 1. கன்னியாஸ்திரி கடிதத்தில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் அம்பலம்: மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொட
 2. கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்: மறியலுக்கு முயன்ற 79

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: