Skip to content

“செக்ஸ்” ஆசை காட்டி “கல்லூரி மாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்” கைதான தொண்டு ஊழியர் முகமது அனிபா வாக்குமூலம்

ஒக்ரோபர் 12, 2010

நாகர்கோவில், அக். 11-

அஞ்சுகிராமத்தை அடுத்த சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா(31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இங்கு வேன் டிரைவராக இருந்தவர் முகமது அனிபா(28). திருவிதாங் கோட்டை சேர்ந்த இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார்.
 
வேலை விசயமாக ஜெயா வெளியிடங்களுக்கு செல்லும் போது அவரை முகமது அனிபா வேனில் அழைத்துச் செல்வார். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.
 
இதில் ஜெயாவிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினார். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானார்.
 
இதை அறிந்த ஜெயாவின் கணவர் ஸ்டீபன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவியை முகமது அனிபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நகை பணத்துடன் கடந்த 17-ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.
 
போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் திண்டுக்கல் சென்று முகமது அனிபாவையும், அவரோடு இருந்த ஜெயாவையும் மீட்டு அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர்.
 
போலீஸ் நிலையத்தில் அவர்கள் முகமது அனிபா விடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயாவை கடத்தியது போல் கல்லூரி மாணவி உள்பட 10 பேரை செக்ஸ் ஆசை காட்டி மயக்கி வெளியூருக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களின் நகை பணத்தையும் அபேஷ் செய்து இருப்பது தெரிய வந்தது.
 
அதன்பின்பு அந்த பெண் கள் ஊருக்கு வந்து குடும்ப மானத்திற்கு பயந்து போலீசில் சொல்லாமல் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அனிபாவின் பகீர் பின்னணியை கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதா வது:-
 
திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷகிலா பானு என்பவரை பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினாலும் எனக்கு அழகானபெண்களை பார்த்தால் ஆசை வரும். அதிலும் கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். நான் திருமணமானவன் என்பதை முதலிலேயே அவர்களிடம் சொல்லி விடுவதால் அந்த பெண்களும் என்னிடம் தாராளமாக பழகுவார்கள். அப்போது அவர்களின் மன ஏக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஆறுதலாக பேசுவேன். இதில் “செக்ஸ்” கலந்து இருக்கும். இந்த பேச்சுக்கு மயங்கும் பெண்களை தனிமையில் சந்தித்து பேச ஏற்பாடு செய்வேன்.
 
அப்போது அவர்களிடம் சின்ன சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டு செக்ஸ் ஆசையை தூண்டுவேன். எனது செயலுக்கு உடன்படும் பெண்களை உல்லாசமாக வாழலாம், வா என்று அழைப்பேன். அப்படி வரும் பெண்களை வீட்டில் இருக்கும் நகை, பணத்தையும் எடுத்து வரும் படி கூறுவேன்.

 
அந்த பெண்களை வெளி யூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதோடு, அவர்களிடம் இருக்கும் நகை பணத்தையும் பறித்து கொள்வேன். பணம் காலியானதும் பெண்களை அம்போ என விட்டு விடுவேன்.

 
எனது இந்த பழக்கம் மனை விக்கு தெரிய வந்தது. எனவே அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதோடு தக்கலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் என் மீது புகார் கொடுத்தார்.

 
மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றது எனக்கு மேலும் வசதியானது. என்னை தேடி வரும் பெண்களை அவர்கள் திருப்தியாகும் அளவுக்கு கவனித்து கொள் வேன். இதில் ஒரு கல்லூரி மாணவி, குடும்ப பெண் உள்பட பலரும் என்னோடு வந்துள்ளனர். அவர்கள் யாரும் என் மீது பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை.

 
அந்த துணிச்சலில் ஜெயாவை கடத்தினேன். ஆனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என் மீது நேரடியாக புகார் கொடுத் ததால் சிக்கிக் கொண் டேன்.

 
இவ்வாறு முகமது அனிபா கூறினார்.
 
முகமது அனிபாவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட ஜெயா கூறும் போது, அவரை பற்றி தெரியாமல் குடும்பத்தை மறந்து ஓடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வீட்டார். போலீசார் ஜெயாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
 
இதற்கிடையே, முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகி றார்கள். முதற்கட்ட விசார ணையிலேயே இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் விபரம் கிடைத்துள்ளது.
 
அவர்கள் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முகமது அனிபாவின் நடவடிக்கைகளுக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் துணை போனது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. முகமது அனிபா பெண்களிடம் இருந்து பறித்து வரும் நகைகளை அவர்கள் விற்று பணமாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 
இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: