Skip to content

தூத்துக்குடி கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் பாதிரி-மனைவி துணையோடு 14 மாணவிகளிடம் செக்ஸ் தொல்லையில் கைது

செப்ரெம்பர் 26, 2010

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு தந்த கிறிஸ்தவ போதகர் நடத்திய காப்பகம் மூடப்பட்டது. அது, அனுமதியின்றி செயல்பட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்செந்தூர் அருகே தட்டார்மடம் அடுத்த மணிநகரில் தனியார் தோட்டத்தில், கிறிஸ்தவ மதபோதகர் சவுந்தரராஜன்(56), கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் ஜெபஸ்டின் கிறிஸ்டோபர்(25) இருந்து வருகிறார். அதனுள்ளேயே, சவுந்தரராஜன் நடத்திய காப்பகத்தில் கோவை, ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற, ஏழை மாணவர்கள் 22 பேரும், மாணவியர் 12 பேரும் தங்கியிருந்தனர்.

அவர்கள், அருகிலுள்ள பள்ளிகளில் படித்தனர். அங்கு மாணவியர் பலருக்கு, இரவு நேரத்தில் பாலியல் தொந்தரவு தரப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. அங்கு செப்., 24 இரவு போலீஸ், சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுவர், சிறுமியரை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு விடுதிக்கு அனுப்பினர்.

தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலர் முத்துநாயகம், புகாரில், மதபோதகர் சவுந்தரராஜன், மகன் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டனர். மாணவியரை கட்டாயப்படுத்தி, இயற்கைக்கு மாறான வழியில் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாகவும், அதை வெளியே சொல்லக் கூடாது என, மிரட்டியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலமளித்தனர். தலைமறைவாக உள்ள சவுந்தரராஜனின் மற்றொரு மகன் உதய பால ஜெபசிங்கை போலீசார் தேடுகின்றனர்.

காப்பகம் மூடல்: இதுகுறித்து, தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 72 தனியார் காப்பகங்கள் உள்ளது தெரிந்துள்ளது. அவற்றில், 35 காப்பகங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளன. மேலும், சில அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. ஆனால், பாலியல் புகாரில் இருவர் கைது செய்யப்பட்ட அந்த காப்பகம் அனுமதி பெறாமல் நடந்துவந்துள்ளது.

அந்த காப்பகம் மூடப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, காப்பகங்களின் உரிமையாளர் யார், அதில் எத்தனை பேர் உள்ளனர் என்பன போன்ற முழுவிவரங்கள் அடங்கிய தகவல் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சேகரித்து வைக்கப்படும். இதற்காக வருவாய்த்துறை,சமூகநலத்துறை, போலீஸ்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்

Orphanage manager, son held for sexually abusing minor

TNN, Sep 26, 2010, 03.28am IST

Read more: Orphanage manager, son held for sexually abusing minor – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Orphanage-manager-son-held-for-sexually-abusing-minor/articleshow/6628135.cms#ixzz10bmgyab3

MADURAI: The manager and his son, running an orphanage in Saathankulam in Thoothukudi district, have been arrested for allegedly sexually harassing child inmates and getting one of the minor girls pregnant. The Elsadi Jebathottam orphanage, run by Soundararajan, 56, and his sons, Sebastian, 26, and Udhayabalan, 24, has 34 children, including 12 girls, hailing from various places in Tamil Nadu including Erode, Hosur, Krishnagiri and Kaliakavilai in Kanyakumari district.

A 15-year-old girl, one of the inmates of the orphanage hailing from Bhavani in Erode district, had gone to stay with some of her relatives saying she was sick. When her relatives took her to the doctor, they found to their shock that she was pregnant. Her relative Durairaj lodged a complaint with the Thoothukudi police, based on which a police team led by the Saathankulam DSP Stanley and including the RDO Packiam Thevakirubai and other officials, raided the orphanage on Friday.

Thoothukudi SP Kapilkumar C Saratkar told TOI that they had taken action against the orphanage based on a complaint from district social welfare officer Muthunayagam. Soundararajan and his eldest son Sebastian were arrested. Cases have been booked against them under IPC Sections 377, 342 and 354 and section IV of the Women Harassment Act and 23 of Juvenile Justice Care and Protection of Children Act of 2006.

Police sealed the orphanage and shifted the girls to the Annai Sathya Government Children’s Home in Srivaikundam and the boys to a home in Adaikalapuram in Thoothukudi district.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: