Skip to content

குளோரி சந்திரா கிறிஸ்தவ பள்ளர்-தனி தொகுதி எம்.எல்.ஏ

செப்ரெம்பர் 9, 2010

ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 2, 2008, 15:19[IST]

சென்னை: அதிமுக சார்பில் ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மு.சந்திரா, திமுக சார்பில் வி.பி.ராஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரா 58,320 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.

அதிமுக எம்.எல்.ஏ. சந்திராவின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கிறிஸ்தவ பள்ளர் சமுதாயத்தை சார்ந்தவர் சந்திரா. ஆனால் அவர் தன்னை இந்து பள்ளர் என்று கூறி போலியான ஆதாரங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

அவரது இயற்பெயர் குளோரி சந்திரா. அவரது குடும்பம் பாரம்பரியமான கிறிஸ்தவ குடும்பம். ஆனால் இவர் தன்னை இந்து பள்ளர் என்று உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார்.

எனவே சந்திராவின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்த தங்கமுத்து, சந்திரா, கிறிஸ்தவ பள்ளர் என்பதற்கான 29 ஆதார ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கை நீதிபதி நாகப்பன் விசாரித்தார்.

இந்த வழக்கில் சந்திரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 1994ம் ஆண்டே நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். எனது கணவர் பெயர் முருகன். நான் தேவேந்திரகுல வேளாளர் சமுகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன்.

இந்து கோவில்கள் கட்டுவதற்கு நன்கொடைகள் வழங்கி உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்திரா தரப்பு வாதங்களை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், இந்து பள்ளர் என்பதற்கான ஆதாரத்தை சந்திரா தாக்கல் செய்யவில்லை. அவரது கணவர் பெயர் சூசை மாணிக்கம் என்பதற்கான ஆதாரம் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து கோவில்கள் கட்ட நன்கொடை வழங்கியிருப்பதாக சந்திரா கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்து பள்ளர் என்று கூறி சந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், சந்திராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் வந்த திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் நீதிமன்றத்தை வேண்டியுள்ளார். அவ்வாறு அறிவிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பான மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்தியா

ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம்

First Published : 08 Sep 2010 02:32:29 AM IST

புது தில்லி, செப். 7: ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரா, தேர்தலில் வெற்றிபெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம் பேரவைத் தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரா 58320 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஹிந்து மதத்தை தழுவாததால் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் போட்டியிட்டதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையில் சந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தான் ஹிந்து மதத்தை பின்பற்றிவருவதால் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இந்நிலையில் மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனர்

From → Uncategorized

2 பின்னூட்டங்கள்
  1. சூசை மற்றும் இந்திய அரசு[9] – 1986 AIR 733; 1985 SCR Sup. (3) 242: இந்த உச்சநீதி மன்றம், கிருத்துவர்களுக்கு பேரிடியாக இருந்தது. ஏனெனில், எஸ்.சி என்றாலே இந்துக்கள்தாம், ஆக இந்துக்களுக்கான உரிமைகளை, சலுகைகளை, எஸ்.சிக்கள் மற்ற மதங்களைத் தழுவினால், அச்சலுகைகள், உரிமைகள் போய் விடும் என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு அதனை சுற்றி வளைக்க, மீறிவர பல வேலைகளை கிருத்துவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர்[10]. இருப்பினும் சட்டரீதியாக ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் என்று இப்படி வந்து விட்டால், கிருத்துவர்கல் இப்படி இரட்டைவேடம் போட வேண்டியிருக்கிறது. அரசு அலுவலகங்களில் லட்சக்கணக்காக இப்படி கிருத்துவர்கள், உண்மையான எஸ்.சிக்களின் சலுகைகளைப் பறித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அங்கு சக-ஊழியர்கள் ஒருவேளை போனால் போகட்டும் என்று விட்டுவிடுன்றனர் போலும். ஆனால், இங்கு தேர்தலில், கோடிகளில் புழலும் விஷயம் என்றதால் கோர்ட்டுக்கு வந்து விடுகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: