Skip to content

செக்ஸ் வீடியோ கலாசாரம்

ஓகஸ்ட் 20, 2010

அமெரிக்காவில் சமீபகாலமாக செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது.
இன்டர்நெட் “கபே’யில் “சாட்’ செய்யும் இளம் பெண்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை பயன்படுத்தி, அவர்களது புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட
போவதாக கூறி, மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இளம் பெண்களுக்கு இன்டர்நெட் மீது தணியாத மோகம் உண்டு. வீட்டுக்கு தெரியாமல், சுதந்திரமாக இன்டர்நெட் மூலம் நண்பர்களுக்கு, “சாட்’ செய்வதற்காகவும், மெயில் அனுப்புவதற்காகவும்
ஏராளமான நவீன இன்டர்நெட் “கபே’க்கள் அங்கு உள்ளன. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில இளம் பெண்களுக்கு, தங்களது வீடுகளை விட, இன்டர்நெட்
“கபே’க்களுக்கு செல்வது தான் விருப்பம் அதிகம்.

இதுபோல், சமீபத்தின் இன்டியானா போலீஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இன்டர்நெட் “கபே’க்கு மூன்று இளம் பெண்கள் சென்றனர். தங்களுடன் வெப் கேமராவையும் கொண்டு சென்றனர். பின்னர், தங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட் மூலமாக, “சாட்’ செய்தனர். தங்களின் மார்பழகை வெப் கேமரா முன்பாக காட்டி மகிழ்ந்தனர். பின்னர், தங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர். ஒரு
வாரத்துக்கு பின், இன்டர்நெட் “கபே’க்கு சென்ற இளம் பெண்களில் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவன், போன் மூலம் தொடர்பு கொண்டான். அவன், “இன்டர்நெட்
“கபே’யில் வெப் கேமரா முன், உன் அழகை காட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை என் நண்பர்களுக்கு இன்டர்நெட்டில் வெளியிட உள்ளேன்.

இதை தவிர்க்க வேண்டுமானால், உன் அழகை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் எனக்கு வேண்டும் என்றான். வீட்டிலும் இதை கூற முடியாமல், போலீசாரிடம் கூற முடியாமல் அந்த பெண் மிரண்டு போனார். வேறு வழியின்றி, அந்த மர்ம நபர் கூறியபடி, மேலும் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார். இரண்டு முறை அந்த நபர் இவ்வாறு மிரட்டல் விடுத்தார். இறுதியாக அந்த பெண், போலீசாரின் உதவியை நாடினார். போலீசார் விரித்த வலையில் அந்த
நபர் வசமாக சிக்கினான். விசாரணையில், அவன் மேரிலாண்ட் பகுதியை சேர்ந்தவன் என்பதும், இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே செய்து வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில், “சமீபகாலமாக இது போன்ற ஆன்-லைன் செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள், பொழுதுபோக்கு, மகிழ்ச்சி என்ற பெயரில் தடம் மாறிச் செல்கின்றனர். இதை அவர்களது பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்’ என்றனர்

From → Uncategorized

2 பின்னூட்டங்கள்
  1. எல்லாத்தையும் தொரந்து காமிச்சுட்டு ஐயயோ புகைப்படம் எடுத்துட்டான். விடியோ எடுத்துட்டான்னு சொல்லறது வேடிக்கையாதான் இருக்கு.

    அமெரிக்காவுல மட்டுமில்ல, தமிழ்நாட்டுலையும்தான்.

    என்னோட பக்கத்து அப்பார்ட்மென்ட்டுல மாடியில ஒரு பொண்ணு பாவாடையை லேப் டாப் முன்னாடி தூக்கி காமிச்சுக்கு இருக்கும்போது, எங்க அப்பார்ட்மென்ட் மாடியில வாக்கிங் போன பாட்டிகள் பார்த்து சத்தம் போட, அந்தப்பொண்ணு ஓடிப்போச்சு.

  2. மதன் permalink

    என்னது பெண்கள் தெரியாமல் செய்யும் தவறுகளா!,..

    ரொம்ப ஓவரா சப்போட் பண்ணுரூங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: