Skip to content

கருணாநிதி தான் கிறிஸ்து-தி.மு.க எம்.எல்.ஏ.அப்பாவு

ஓகஸ்ட் 4, 2010

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அப்பாவு, சமீபத்தில் தனியார் “டிவி’க்கு அளித்த பேட்டியில், இயேசுநாதரும் முதல்வர் கருணாநிதியும் ஒன்றுதான். எனவே, இயேசுவின் பெற்றோருக்கு வழங்கப்படும் மரியாதையைப்போல, நாம் முதல்வர் கருணாநிதியின் பெற்றோருக்கும் வழங்கவேண்டும். அதனால்தான், முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை ராதாபுரம் பஸ்ஸ்டாண்டில் உள்ளது என்றார்நெல்லை மாவட்டம் ராதாபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அப்பாவு, சமீபத்தில் தனியார் “டிவி’க்கு அளித்த பேட்டியில், இயேசுநாதரும் முதல்வர் கருணாநிதியும் ஒன்றுதான். எனவே, இயேசுவின் பெற்றோருக்கு வழங்கப்படும் மரியாதையைப்போல, நாம் முதல்வர் கருணாநிதியின் பெற்றோருக்கும் வழங்கவேண்டும். அதனால்தான், முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை ராதாபுரம் பஸ்ஸ்டாண்டில் உள்ளது என்றார்.

அப்பாவு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மீனவர்கள் மனு

திருநெல்வேலி, ஆக. 2: ராதாபுரம் எம்.எல்.ஏ. மு. அப்பாவு தொலைக்காட்சி பேட்டியில்  தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ மக்கள் கட்சியினர் திரண்டு வந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், அப்பாவு எம்.எல்.ஏ.வை கண்டித்து இம் மாதம் 9ஆம் தேதி ராதாபுரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் தலைவர் வி. அலங்கார பரதர்  தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஏராளமான வாகனங்களில் திரண்டு வந்திருந்த மீனவ  மக்கள் கட்சியினர் சார்பில் அதன் தலைவர் அலங்கார பரதர், ஆட்சியரிடம் அளித்த  மனு விவரம்:

அப்பாவு எம்.எல்.ஏ. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில்,  முதல்வர் கருணாநிதியின் பெற்றோரை இயேசு கிறிஸ்துவின் பெற்றோருடன்  ஒப்பிட்டும், முதல்வரை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்துள்ளார்.   இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அவரது இந்தக் கருத்து கிறிஸ்தவ மக்கள் மனதை  புண்படுத்தி உள்ளது. எனவே, அப்பாவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அப்பாவு எம்.எல்.ஏ.வை கண்டித்து இம் மாதம் 9ஆம் தேதி ராதாபுரம்  பஸ்நிலையம் முன்பு மீனவ மக்கள் கட்சி சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.

இதில் மீனவ மக்கள் திரளாக கலந்துகொள்வார்கள் என்றார்.

சுவரொட்டிகள்: இதனிடையே, அப்பாவு எம்.எல்.ஏ.வை கண்டித்து திருநெல்வேலி,  தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  அப்பாவு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கும்வரை அவருக்கு எதிராக தொடர்  போராட்டங்களை நடத்த மீனவர் அமைப்புகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.  மேலும், கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துவது குறித்து சில  அரசியல் கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன

Christians, fishermen seek action against Appavu

TIRUNELVELI: Christians from Uvari area and Meenava Makkal Katchi members presented a complaint to the District Collector against the ruling party MLA Appavu who referred to Chief Minister M Karunanidhi as Jesus Christ in a TV programme.

Alangara Bharathar alleged that last month in a TV programme – Puhaar Tamizagam — in connection with Chief Minister’s parents statues at Radhapuram bus stand, Appavu MLA said Chief Minister’s parents should be considered as Jesus Christ’s parents and they should been given due respect as given to the parents of Jesus Christ.

When the anchor asked whether Chief Minister and Jesus Christ were same, the MLA replied ‘yes’.

Alangara Bharathar said that they had the CD of his speech. “Appavu’s speech had affected the sentiments of Christians.

Condemning the MLA we would stage a demonstration on August 9 at Radhapuram bus stand.

The MLA should be arrested and removed from the party for his remark on Jesus Christ

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: