Skip to content

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் – நரபலிக்காக கடத்தலா?

ஜூலை 28, 2010

மதுரையில் 2010 ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ஆம் தேதியன்று முதல் நாணியை காணவில்லை. ஜூலை 19ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் “வி’ வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வலை வீசி தேடுகின்றனர். மேலும் ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும்(13) ஜூலை 21ஆம் தேதி மாயமானார்.

இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்ற தகவல் வெளியாகியுள்ளது.. வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர். இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. சமீபகாலமாக “காணாமல் போனவர்கள் குறித்து’ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்கமதுரை மாநகர் முழுவதும் அந்தந்தகாவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: