Skip to content

காமவெறி மேரி மகனை கூறு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தாள்!

ஜூலை 19, 2010

மகனை கூறு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தாள்!
காமத்துக்கு இரையான பெண்ணின் கொடூரம்

Bala.jpg

ஜூலை 29-ம் தேதி புதன் கிழமை காலை பத்து மணியளவில் மதுரை எல்லீஸ் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு.

காமவெறிக்காக பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த மகனையே கொலை செய்திருக்கிறார் ஒரு பெண் என்பதுதான் அந்தப் பரபரப்பு. கொலை நடந்த தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளான மேரி, பாட்ஷா, ராஜா என்ற ஆண்டனியைக் கைது செய்தார் திலகர் திடல் உதவி கமிஷனர் கணேசன்.

Bala%202.jpg“கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமில்லை, காமவெறி பிடிச்சு அலைஞ்சாளே.. மேரி அவளோட மகன்தான். மீனாட்சி நகர்லதான் வாடகை வீட்டுல குடியிருக்கிறாள். பாட்ஷாங்கிறவனுக்கும் இவளுக்கும் கள்ள உறவு. அடிக்கடி இங்கே வந்து மேரியோட வீட்டுல தங்கிட்டு போவான். மேரிக்கு பழங்காநத்தத்தில் இருக்கிற காதிகிராப்ட்ல வேலை. கைநிறைய சம்பளம். பாட்ஷாவுக்கு மேரி பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பாள். அந்தப் பணத்தை வைத்துதான் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த பாட்ஷா சொந்தமாகவே எலக்ட்ரிக்கல் கடையை ஆரம்பிச்சுருக்கான்.

அடிக்கடி பணம் கேட்டு மேரியை கிருஷ்ண-மூர்த்தியும் சண்டை பிடிப்பான். இருந்தாலும் உடம்பு சுகத்துக்காக பெத்த புள்ளையை கொன்னுருக்காளே இவளை மாதிரி கல் நெஞ்சுக்காரி வேறு யாரும் பிறக்காம இருக்குற அளவுக்கு போலீஸ் தண்டனை வாங்கிக் கொடுக்கனும்” என்கிறார்கள் மீனாட்சி நகர் மக்கள்.

‘கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று நாட்களாக ஆளைக் காணவில்லை. மேரி வீட்ல இருந்து பிணவாடை அடிக்குது’ என்று மக்கள் முணுமுணுத்த வேளையில்தான், புதன்கிழமை காலையில் எல்லீஸ் நகர் பகுதியில் கை, கால், தலை, முண்டமும் மூன்று இடங்களில் பொட்டலமாகக் கிடப்பதாகச் செய்தி கிடைக்கவும் எல்லீஸ் நகர் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் பறந்தது.

Bala%203.jpgநடந்த சம்பவத்தை லைவ்வாக விளக்கினார் திலகர் திடல் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன்.

“மேரியும் பாட்ஷாவும், கள்ளத்- தொடர்பு வைத்திருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்கல. பல முறை கண்டித்தும் மேரி, பாட்ஷாவின் தொடர்பு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டேபோயிருக்கு. மேரியிடம் அடிக்கடி இந்தக் கள்ள உறவை கண்டிச்சிட்டு, பணம் கேட்டு ரகளை செய்வாராம். மேரியும் பயந்துக்கிட்டு பணம் கொடுக்கறது. இப்படியே இருந்திருக்கு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கனும்னு பாட்ஷாவும், மேரியும் திட்டம் தீட்டி கிருஷ்ணமூர்த்தி தூங்கிட்டு இருக்கும்போது தலையணையை முகத்தில் அழுத்தி கொலை பண்ணிட்டாங்க.

இது நடந்தது ஜூலை 25-ம் தேதி. திங்கட்கிழமை வேலைக்குப் போயிட்டு வந்து கழுத்தை அறுத்த பிறகு கை, கால் எல்லாத்தையும் அறுவா மனையில் வெட்டி எடுத்து வீட்ல உள்ள ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறாள் மேரி. செவ்வாய்க்கிழமையன்று பாட்ஷா, அவரது நண்பர் ராஜா என்ற ஜோசப்பு ஆண்டனியும் கையும், தலையும் எல்லீஸ் நகர் கிருதுமால் நதியில் போட்டுட்டானுங்க.

மேரியிடம் பேசினோம்.

“டெய்லி அவனுக்கு தண்ணி, கஞ்சா அடிக்க இருநூறு ரூபாய் கொடுக்கனும். இல்லாட்டி என்னை அடிப்பான். என்னை கொலை பண்ணினாலும் பண்ணிடுவான்னு நினைத்து, நாங்க அவனை தீர்த்துத் கட்டிட்டோம். இதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது” என எந்தக் கலக்கமும் இல்லாமல் பேசினாள் மேரி.

காதலுக்குக் கண் இல்லை. அதிலும் கள்ளக்காதல் வேறு. கண் இருந்திருக்குமா?

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: