Skip to content

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம் பிடித்த காதலன்

ஜூலை 13, 2010
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி அருகே உள்ள மதகொண்டபள்ளி கிரா மத்தைச் சேர்ந்தவர் மரிசாமி. இவரது மகன் சார்லஸ் (வயது 25). இவர் மதகொண்டபள்ளி அருகே தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கலப்பா. இவரது மகள் அந்தோணிமேரி என்ற ராணி (24).இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விலகி மதகொண்ட பள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிலேயே கடந்த 2 வருட மாக இருந்து வருகிறார்.

சார்லஸ் வீடும் ராணி வீடும் அருகருகே உள்ளது. இதனால் ராணிக்கு சார்லசுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இதனால் ராணி கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ள ராணி சார்லசை வற்புறுத்தியும் ஏதாவது காரணம் காட்டி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.

இதனால் ராணி தேன் கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேன்கனிக் கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் ஏட்டு நாகமணி இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர். இதையடுத்து ராணி கழுத்தில் சார்லஸ் தாலி கட்டினார்.

இத்திருமணத்தில் இரு தரப்பு பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: