Skip to content

பிணங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த பெண்

ஜூலை 10, 2010

தனது கணவரதும் இரட்டைச் கோதரியினதும் சடலங்களுடன் 11 வருடங்களாக வாழ்ந்த 91 வயது பெண்மணியொருவருக்கு, அச்சடலங்களை வீட்டில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றை நிர்மாணித்து அதில் வைத்து பராமரிக்க அமெரிக்க நீதிமன்றமொன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.

ஜீன் ஸ்டீவன்ஸ் (Jean Stevens) என்ற மேற்படி பெண்மணி தனது கணவரான ஜேம்ஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் சகோதரி ஜூன் ஸ்டீவன்ஸ் ஆகியோரின் சடலங்களை வையலூ ஸிங்கிலுள்ள (Wyalusing) அவரது வளவில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றில் வைக்கத் தவறும் பட்சத்தில், அவற்றை உரிய முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஜீன் ஸ்டீவன்ஸ் தனது கணவர் மற்றும் சகோதரியின் சடலங்களுடன் வாழ்வது கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஒரு சில மாத இடை வெளியில் உயிரிழந்த தனது கணவர் மற்றும் இரட்டைச் சகோதரியின் சடலங்கள் புதைக்கப்பட்ட பின்னர் இரவு நேரத்தில் அவற்றை தோண்டி வெளியில் எடுத்த ஜீன் ஸ்டீவன்ஸ், பென்சில்வேனியாவிலுள்ள தனது இல்லத்துக்கு எடுத்துச் சென்று பராமரிக்க ஆரம்பித்துள்ளார்.
தனது அன்புக்குரிய கணவரையும் இரட்டைச் சகோதரியையும் எப்போதும் கண்ணெதிரே வைத்துப் பார்க்க விரும்பியே அவர்களது சடலங்களை வீட்டுக்கு எடுத்து வந்ததாக ஜீன் கூறினார்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: