Skip to content

கிறிஸ்தவ மதத்துக்கு ஐம்பது குடும்பத்தை மதம் மாற்றினால் ஒரு வீடு இலவசம்!

ஜூலை 5, 2010

விருதுநகரில் திரளும் கலவர மேகம்

Viruthu.jpg

நான்கு வாரங்களுக்கு முன் வேப்பங்குளம் கிராம சாதிக் கலவரப் பிரச்னை தொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்தபோது… ‘விருதுநகர் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இருப்பது உண்மைதான்’ என அந்த மாவட்ட கலெக்டரான சிஜிதாமஸ் ஒப்புக்கொண்டார்.

இப்போது அதே விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய மதமாற்ற சர்ச்சை வெடித்திருக்கிறது.

Viruthu%201.jpgவிருது நகரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சந்திரகிரிபுரம். இந்தக் கிராமத்தில் கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை, ‘செவன்த் டே ஆராதனை கிறிஸ்துவ சபை’ சார்பில் வருகையின் எழுப்புதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம்தான் மதமாற்ற சர்ச்சையையும் எழுப்பிவிட்டிருக்கிறது.

இந்த ஜெபக் கூட்டத்துக்கு… சந்திரகிரிபுரம் மக்கள் மட்டுமின்றி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், நமச்சிவாயபுரம், எல்கைபட்டி, பாவாலி, மத்தியசேனை, செங்குன்றாபுரம், அம்மாபட்டி, அழகாபுரி என மாவட்டத்திலுள்ள பல கிராம மக்களும் பேருந்தில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். கமகமக்கும் பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என இந்து அமைப்புகளும், பொது மக்களும் வெடிக்கிறார்கள்.

இது தொடர்பாக சந்திரகிரிபுரத்தில் வசிக்கும் நம்மகோடியைச் சந்தித்தோம்.

“எங்க கிராமத்துக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றவுங்க மாதிரிதான் வந்தாங்க இந்த செவன்த் டே காரங்க. விலையப் பற்றி கவலைப்படாம இடங்களை வாங்கி பன்னிரண்டு வீடுகளைக் கட்டினாங்க. சரி, வீடுகட்டி விக்கப் போறாங்கன்னு நினைச்சோம். ஆனா, போனமாசம் எங்க ஏரியாவுக்கு வீடு வீடா வந்தவங்க… ‘புதுவீடுகள்ல ஜெபக் கூட்டம் நடக்குது. அதுல கலந்துக்கிட்டா உங்க கஷ்டமெல்லாம் தீரும். அதோட தினமும் கறி பிரியாணி விருந்தும் இருக்கு. வந்துடுங்க’ன்னு கூப்பிட்டாங்க.

Viruthu%203.jpgகூட்டத்துல என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க, நாங்களும் போனோம். அங்க பேசினவங்க, ‘நீங்க இப்ப கும்பிடற சாமியெல்லாம் சாத்தான். அதையெல்லாம் கும்பிட்டா நல்லது நடக்காது. ஏசப்பாவ மட்டும் கும்பிடுங்க. எல்லாம் நல்லதா நடக்கும்’னு திரும்பத் திரும்பச் சத்தமா சொன்னாங்க. நாங்க எல்லாம் ஜக்கம்மா சாமி கும்பிடுறவுங்க. எங்க சாமிய சாத்தான்னு சொன்னா பொறுத்துக்குவோமா? மதக் கலவரம் வரக் கூடாதுன்னு நினைச்சு கொஞ்சம் சத்தம் போட்டுட்டு வந்துட்டோம். ஆனா இந்த கிறிஸ்தவக்காரங்களுக்குத் துணையா எங்க ஊரு பஞ்சாயத்துத் தலைவர் புலிநாயக்கரு இருக்காராம். அவங்களுக்காக மறைமுகமாக ஆளை சேர்த்து விடுறதாகவும் சொல்லிக்கிறாங்க. இந்த சபையில ஐம்பது குடும்பத்துக்கு மேல கிறிஸ்தவ மதத்துக்குச் சேர்த்துவிட்டா ஒரு வீடு கட்டித் தர்றாங்களாம். இதுக்காகவே பக்கத்து கிராமத்துல போட்டி போட்டுக்கிட்டு ஆள சேர்த்துக்கிட்டு இருக்காங்க” என்றார் ஆதங்கம் குறையாமல்.

இதைத் தொடர்ந்து சந்திரகிரிபுரம் அருகேயுள்ள பாவாலி கிராமத்திற்குச் சென்று விசாரித்தோம். ஊர்க்காரரான மணிமாறன் நம்மிடம்,

“எங்க ஊர் மக்கள் சாமான்யமா ஏமாறமாட்டாங்க. ஆனா, இந்த செவன்த் டே காரங்க என்ன சொக்குப்பொடி போட்டாங்களோ தெரியல. ஊருல ஜெபக் கூட்டம் முடிஞ்ச உடனே முப்பது குடும்பத்துக்கு மேல கிறிஸ்தவ மதத்துல சேர்ந்துட்டாங்க” என்றார்.

இதைத் தொடர்ந்து சந்திரகிரிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் புலிநாயக்கரைச் சந்தித்து அவர் மீதான புகார் பற்றி கேட்டோம்.

“ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் பொய். நான் அந்தக் கிறிஸ்தவ சபைக்கு கல், மண், ஜல்லி வாங்கிக் கொடுக்குறேன். அவ்வளவுதான். ஜனங்களை கிறிஸ்தவ மதத்துல சேருங்கன்னு நான் சொல்லல. அவங்க விருப்பப்பட்டு போறாங்க. இதுல எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல” என மறுத்தார்.

இப்பகுதியில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகச் சொல்லி போராட்டத்தில் இறங்கியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜனை சந்தித்தோம்.

“இந்த மதமாற்றத்துக்குக் காரணமே செவன்த் டே ஆராதனை சபையில் இருக்கிற பாபு என்பவர்தான். இவர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் தம்பியாம். அந்த அதிகாரியின் சொந்த ஊரான சந்திரகிரிபுரத்தை மையமாக வைத்துதான் கட்டாய மதமாற்றம் நடக்கிறது. அண்ணன் போலீஸ் உயரதிகாரியாக இருக்கிற தைரியத்தில், தன்னை சட்டம் எதுவும் செய்யாது என இப்படிச் செயல்படுகிறார்.

பன்னிரண்டு வீடுகள் எதற்கு? என கேட்டால், மருத்துவ மையம் அமைக்க எனப் பொய் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மருத்துவச் சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்கிறார்கள். பக்கத்தில் இருக்கிற கேரள உயர்நீதிமன்றம், மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லியிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும். இல்லையென்றால் மதக் கலவரம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிடும். தீண்டாமை விவகாரத்தில் நீதிமன்றம் வரை சென்ற விருதுநகர் கலெக்டரம்மா, இந்த விஷயத்தில் கவனமாகச் செயல்படவேண்டும். இல்லையென்றால், இந்தப் பிரச்னையிலும் நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அரசு இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தவில்லை என்றால், மதமாற்றத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக.

Viruthu%202.jpgகட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகள் குறித்து ‘செவன்த் டே’ ஆராதனை சபையைச் சேர்ந்த பாபுவைச் சந்திக்க பலமுறை சென்றோம். சந்திக்க முடியாது என சொல்லிவிட்டனர். அவரை போனில் தொடர்பு கொண்டபோதும் நம்மிடம் பேசவில்லை. பதிலாக அந்த சபையிலிருந்து குமார் என அறிமுகப்படுத்திக்கொண்டு நம்மிடம் பேசியவர், “பத்திரிகைகெல்லாம் எங்க அய்யா பதில் சொல்ல மாட்டாரு. அதுக்கு அவசியமும் இல்லை” என்றார். இந்தப் பிரச்னை பற்றி விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் கவனத்துக்குக் கொண்டு போனோம்.

“விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களா? நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன். டிசம்பர் 27-ம் தேதி விருதுநகர் வருகிறேன். வந்தவுடன் என் முதல் வேலையே இதுபற்றிய நடவடிக்கைகளில் இறங்குவதுதான்” என்றார் பொறுப்போடு.

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: