Skip to content

குழந்தைகள் காமுகவெறியில் பாலியல் பாலியல் தொல்லை -அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்-கன்னியாகுமரி

ஜூலை 5, 2010

நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம், பூஜைப்புரைவிளை பகுதியில் ‘அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல் பட்டு வந்தது. இதை ஜஸ்டின் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 3 முதல் 16 வயது வரை உள்ள 40 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகள் சித்ரவதை செய்யப் படுவதாக சைல்டு ஹெல்ப்லைனுக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் செயல் பட்டது தெரியவந்தது.
அதிகாரிகள் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் காப்பக நிர்வாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 32 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களில் 18 பேர் பெண்கள். மற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றிருப்பதாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எல்லா குழந்தைகளையும் காப்பகத்துக்கு வந்து அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பலர் நேற்று மாலை காப்பகத்துக்கு வந்தனர். சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், வந்திருந்த பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது காப்பக நிர்வாகி மீது பாலி யல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் குழந்தைகள் 32 பேரும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். காப்பகம் சீல் வைக்கப்பட்டது. விசாரணைக்காக ஜஸ்டினை போலீசார் அழைத்துச் சென்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜஸ்டின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 3 போலி காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளது.


Kumari orphanage raided, 32 rescued
NAGERCOIL: Based on a complaint that children were being sexually harassed in an orphanage near Anjugramam in Nagercoil, the Child Welfare Committee along with the Department of Social Welfare raided the orphanage and rescued 32 children.
Justine of Anjugramam is running the Arumai Packiam Manuel Orphanage Home at Poojapirai Junction. The Child Help Line (1098) received a complaint on June 28, saying that the children in the home were being illtreated.
Based on the complaint, the helpline members went to the school and enquired with the children, after which the members presented a report to the District Collector.
The next day, a Social Welfare Department team and the members of the helpline went to the orphanage and enquired with the children present.
Meanwhile, two boys from the home went to the Thamaraikulam police station on Saturday and lodged a complaint against Justine. After that, the AntiHuman Trafficking Wing police went to the spot and reported to the Child Welfare Committee in Tirunelveli.
On Sunday, Child Welfare Committee members Nalan, Subbammal, Superintendent of Government Observatory Home Shakeela Banu, Kanyakumari District Social Welfare Officer Uma Maheswari and others went to the orphanage.

Nalan, a member of Child Welfare Committee member, told Express, “there are 32 children aged between 3 and 13 years in this orphanage, mostly from Kanyakumari district but some are from Thoothukudi, Tirunelveli, Dindigul, Chidambaram and Karur districts. The 14 boys, during interrogation, admitted that they were sexually harassed and the 18 girls also made similar charges.“There are three lady wardens at the home and after the Social Welfare officials went to enquire, Justine had beaten the two wardens brutally and they both escaped.

Police sources also said that Justine is an accused in a rape case, which was filed in the Kanyakumari police station in 2002. He was charged with abducting a 13yearold girl and attempting to rape her.
feedback@expressbuzz.com

One Comment
  1. மதன் permalink

    இந்து ஆசிரமங்களில் இதை விட மோசமான அளவில் செக்ஸ் விவகாரங்கள் நடக்கிறது அது போக இந்து மதத்தில் நிலவும் ஜாதிக் கொடுமை மூடநம்பிக்கைகளை பார்க்கும் போது நான் மதத்தை விட்டு வெளியேறி பகுத்தறிவு பாசறைக்குள் நுழைந்து விடலாமென தோன்றுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: