Skip to content

மதுரை கல்லூரிஆபாச மாணவி சி.டி.

ஜூலை 5, 2010

கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.!

Thanks-Reporter shockan.blogspot.com

பூமிகாவின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பகீர் கதையைக் கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் மதுரைக் காரர்கள். மதுரையின் பிரபல கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள் பூமிகா. வீட்டின் செல்ல மகளாய் துருதுருவென வளைய வந்துகொண்டிருந்த அவளுக்கு காதல் வடிவில் விபரீதம் வந்தது. அந்த விபரீதம் வெளிப்பட்ட இடம் ஜெய்ஹிந்த்புரத்தில் இருக்கும் அந்த புரோட்டாக் கடை.

ராஜா ஷெரிப் என்கிற பப்லு, தன் நண்பர் களான மணிகண்டன், ஜெகதீசனுடன் டாஸ்மாக் பாருக்குப் போய்விட்டு… தள்ளாட்டமாய் அந்த புரோட்டா கடைக்கு வந்து சாப்பிட உட்கார்ந் தான். “”புரோட்டா இல்லைண்ணே தோசை போடவா?”’’ என சப்ளையர் கேட்க…. ’””டேய் என்னங்கடா புரோட்டா இல்லைங்கிறீங்க?”’என நண்பர்களுடன் பப்லு தகராறு பண்ண … பக்கத்தில் இருக்கும் “டைபி’ அலுவலகத்தில் இருந்த நாகராஜன் போன்ற தோழர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த னர்.’’எதுக்குப்பா தகராறு?’’ என பப்லு டீமை விலக்கி விட்டனர். அப்போது பப்லுவுக்குத் தெரியவில்லை தன் செல்ஃபோன் கீழே விழுந்தது. செல்ஃபோன் ஒருவர் கண்ணில் பட… யாருடையதாக இருக்கும் என அலுவலகத்தில் வைத்து சோதித்தார். அப்போது… செல்ஃபோனில் பூமிகாவின் அப்பட்டமான நிர்வாணப் படம் மானிட்டரில் ஓட…. ’அய்யோ… இது நம்ம நண்பரின் காலேஜ் படிக்கும் தங்கச்சியாச்சே…’’என்று பதற, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சி விலகாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு ஓடினார்கள்.

அங்கிருந்த காக்கிகள் அந்த போனை மேலும் சோதித்துத் திகைத்ததோடு … செல்ஃபோனுக்குச் சொந்தக்காரனான பப்லுவை மடக்கினர். “””ஐயோ அடிக்காதீங்க. நானும் மணிகண்டனும் ஜெகதீசனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணினோம்”’என்று பப்லு அலற… அவர்களையும் அள்ளிவந்தனர். மணிகண்டனும் ஜெகதீசனும், “”’பப்லுவின் அண்ணன் கார்த்திக்தான் இந்த விசயத்தில் குருநாதர். அவன் எடுத்த படங்களைப் பார்த்துதான் நாங்களும் பல மாணவிகளை வளைச்சி.. ஆசை தீர அனுபவிச்சி… படம் எடுத்தோம்”’என்று தங்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியலை ஒப்பித்தார்கள்.

இந்த தகவல் பப்லு வீட்டுக்குப்போக… பதறிப்போனார் பப்லுவின் அப்பா நாசர். தனது ஆளும்கட்சி நண்பர்கள் மூலம் காக்கிகளை அணுக... இதன்பின் ஜெய்ஹிந்த்புர காக்கிகளின் போக்கு அப்படியே மாறியது. இங்கு நீதி கிடைக்காது என தெரிந்து கொண்ட தோழர்கள்… ஏ.சி. வெள்ளதுரையிடம் ஓடினார்கள். தகவல் அறிந்து திடுக்கிட்ட பூமிகா… தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாள். காப்பாற்றப்பட்டாள்.

“கல்லூரி மாணவியை இப்படிப் படம் பிடிச்சிருக்கானுங்களா?’’என பற்களைக் கடித்த ஏ.சி.வெள்ளதுரை… பூமிகா இருக்கும் இடத்துக்கே விரைந்தார்.’ “”பயப்படாம நடந்ததை எல்லாம் அப்படியே சொல்லும்மா?” என அவர் கேட்க… கண்ணீரும் கம்பலையுமாக… தான் ஏமாந்த கதையை விவரிக்க ஆரம்பித்தாள் பூமிகா.

“”முதல்ல பப்லுவின் அண்ணன் கார்த்திக் தான் என்னைக் காதலிப்பதா சொல்லித் துரத்தி னான். ஒரு கட்டத்தில் அவன் மீது இரக்கப்பட்டு நான் சம்மதித்தேன். சினிமா, பார்க்குன்னு என் னோடு சுத்தியவன்… ஒருநாள் தன் நண்பன் மணி கண்டனின் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். அங்க அவன் கூல்டிரிங்ஸ் கொடுத்தான். அதில் தூக்க மாத்திரை கலந்தது எனக்குத் தெரியாது. அதைக் குடிச்சிட்டு மயங்கிய என்னை…. சூறை யாடிட்டான். அப்ப எனக்குத் தெரியாமலே என்னை அப்பட்டமா அவன் படம்பிடிச்சிருக்கான். அந்த சம்ப வத்துக்குப் பின் சென்னைல வேலை கிடைச்சிருக் குன்னு போனவன்… என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவன் கொடுத்துட்டுப்போன செல்ஃபோனில் என் படத் தைப் பார்த்த அவன் தம்பி பப்லு… ஒரு நாள் என் னைத் தேடி காலேஜுக்கு வந்தான். “எங்க அண்ண னோட நீ இருக்கும் படம் செல்ஃபோன்ல இருக்கு. நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வரலைன்னா இதை உன் பிரண்டுக்கெல்லாம் அனுப்பி வச்சிடுவேன்’னு மிரட்டி… என்னை அதே மணிகண்டன் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். “எங்க அண்ணன் கைவிட்ட உன்னை… நான் கைவிட மாட்டேன். காரணம் உன்னை காதலிக்கிறேன்’னு சத்தியம் பண்ணினான். தயங்கிய என்னை பப்லு பலவந்தமா கற்பழிச்சான். அப்புறம் என் கண் எதிரில்.. அவன் அண்ணன் எடுத்த படத்தை பப்லு அழிச்சான். ஆனால் அவனும் படம் எடுத்து விட்டான். பிறகு, தன்னோட நண்பர்களும் என் படத்தைப் பார்த்துட்டதாச் சொல்லி… அவங்க அதை வெளியே சொல்லாம இருக்க… அவங்களுக்கும் நான் விருந்தாகணும்னு மிரட்டி… மணிகண்டனையும் ஜெகதீசனையும் என்னை வேட்டையாட வச்சான்அதோட இப்படி பல பெண்களை ஏமாத்தி எடுத்த படங் களையும் என்னிடம் பப்லு காட்டினான். அதில் எங்க தெரு பிள்ளைகளும் இருந்தாங்க. இப்படிப்பட்ட பாவிகளை சும்மா விடாதீங்க சார்”’என கதறினாள்.

பூமிகாவுக்கு தைரியம் சொல்லிவிட்டு வெள்ளதுரை புறப்பட… அதற்குள் ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் பல சித்துவேலைகளை நடத்திவிட்டார்கள். அது என்ன?

சி.பி.எம்., மா.செ. அண்ணாதுரையே சொல்கிறார் “””நிறைய பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் கல்லூரி மாணவி களையும் இந்தப் பயல்கள் காதலில் வீழ்த்தி… அசிங்கமா படம் எடுத்திருக்கானுங்க. அந்தப் படங்களை ஆபாச இணையதளங் களுக்கு அவனுங்க வித்திருக்கலாம்ங்கிறது எங்க யூகம். காரணம் பப்லுவின் அண்ணன் சென்னைல ஒரு இணையதள அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான். இந்த விவகாரத்தை போலீஸ் தீவிரமா விசாரிப்பதை பார்த்த பப்லுவின் அப்பா நாசர், தன் நண்பரான தி.மு.க. கவுன்சிலர் கேபிள் கண்ணன் மூலம் இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை சரிபண்ணிட்டார். உடனே ஆபாசப்படங்கள் இருந்த பப்லுவின் செல்ஃபோன் மெமரி கார்டையே மாத்திட்டாங்க. இப்பஆபாச படமே எடுக்கலைன்னு சொல்லி… அவனுங்க மேல் ஈவ் டீஸிங் கேஸை மட்டும் போட்டு… சப் ஜெயிலுக்கு அனுப்பிவச்சிட்டாங்க. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கியிருக்கும் இந்த ஆபாசப் படக் கும்பலை தி.மு.க. ஆட்கள் காப்பாத்தறது மகா கொடுமை. இதை நாங்க சும்மாவிடமாட்டோம். அந்தப் பயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காட்டி…. போலீஸைக் கண்டித்து… எங்க மாதர் சங்கம் பொது மக்களைத் திரட்டி… பெரிய போராட்டத்தை நடத்தும்” என்றார் கொந்தளிப்பாய்.

மதுரை போலீஸ் கடு மையான நடவடிக்கையில் இறங்குமா?

ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின்…

“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து அவர்களின் கற்பை சூறையாடிய கார்த்திக், பப்லு, மணிகண்டன், ஜெகதீசன் ஆகிய மன்மத வில்லன்கள் குறித்தும் அவர்களைத் தப்பவைக்கப் படாதபாடுபடும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் குறித்தும் விரிவாக எழுதியிருந்தோம்.

“”இன்னும் பல விவகாரங்களை காவல்துறை மறைக்கிறது. இந்த மன்மத வில்லன்கள் ஏகப்பட்ட பெண்களை கெடுத்து ஆபாசப்படம் எடுத்திருக் கிறார்கள்.

அவர்கள் வசம் இருக்கும் ஆபாசப் படங்களை மீட்பதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி 17-ந் தேதி மதுரை கட்டபொம்மன் சிலை முன்பு எங்கள் சி.பி.எம். கட்சியினரும், ஜனநாயக மாதர் சங்கத்தினரும், டைபி தோழர்களும் மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தி யிருக்கிறோம்” என்கிறார் சி.பி.எம்., மா.செ.வான அண்ணாதுரை.

போலீஸ் அப்படி என்ன மாதிரியான விவகாரங்களை மறைக்கிறது?’’ என நாம் விசாரித்த போது தலை கிறுகிறுக்கும் அள விற்கு திகீர் பகீர் தகவல்கள் கிடைத்தன.

“”பப்லுவின் செல்போனை ஆராய்ந்தபோது… அதில் பூமிகா உள்ளிட்ட 11 பெண்களின் ஆபாசப் படங்கள் இருப்பதை நாங்கள் பார்த்து அதிர்ந்து போனோம். அதில் இருந்த பெண்களில் ஒருவர்… இந்தப் பகுதி யில் செல்வாக்காக இருக்கும் ஒரு அரசியல்கட்சிப் பிரமுகரின் மனைவி. இதன்பிறகு அந்த செல்போனை இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியிடம் ஒப்படைத்து… பப்லு டீம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் போலீஸோ… அந்த செல்போனில் இருந்த மெமரி கார்டை அப்படியே மாற்றிவிட்டு… வெறுமையான ஒரு மெமெரி கார்டைப் போட்டு… பப்லு டீம் ஈவ்டீஸிங் மட்டும் செய்ததுபோல் ஒரு செட்டப்பை செய்துவிட்டது. நக்கீரனில் செய்தி வந்த பிறகே பெண் கொடுமை வழக்கை இவர்கள் மீது போட்டிருக்கிறார்கள்”’என்றார் ஒரு டைபி தோழர்.
இந்த நீலப்படக் கும்பலிடம் சிக்கிய அரசியல் புள்ளியின் மனைவி யார்? அவர் எப்படி சிக்கினார்? என விசாரித்தபோது…

“அந்த அரசியல் புள்ளியின் பெயரோ கட்சியோ வேண்டாம். இந்த வில்லன்கள் டீம் முதலில் அந்த அரசியல் புள்ளியின் கல்லூரி போகும் மகளைத்தான் காதல் வலையில் வீழ்த்தியது. பின்னர் போதை மாத்திரை யைக் கொடுத்து அவளை ஆபாசப்படம் எடுத்தது. பிறகு அந்த மாணவியின் வீட்டுக்கு… கேபிள் டி.வி. ஆட்கள் போல அடிக்கடி போய்… அந்த மாணவியின் அம்மாவிடம் நல்ல பரிச்சயத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். புதுப்படங்களின் சி.டி.க்களைக் கொடுப்பதன் மூலம்… அந்த ஆண்ட்டியை வளைத்தவர்கள்… அவருக்கும் போதை மாத்திரைகளைக் கொடுத்து… ஆபாசப் படம் எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆண்ட்டி.. முழுசா போஸ் தரமாட்டேன்னு பிடிவாதமா இருந்ததால்… கிளுகிளுப்பா படம் எடுத்திருக்கானுங்க. இப்படி படம் எடுத்த கில்லாடிப் பயல்கள்… அம்மாவின் கிளுகிளு படங்களையும் அவங்க மகளின் அப்பட்டமான படங்களையும் தன் நண்பர்கள்ட்டயும் கல்லூரி மாணவர்கள்ட்டயும் 500 ரூபா வீதம் சி.டி.போட்டு வித்திருக்கானுங்க. இந்த விசயம் அந்த அரசியல் புள்ளியின் காதுக்குப் போக… அதிர்ந்துபோன அவர்… தன் ஆளுங்களை சப்-ஜெயிலுக்கு அனுப்பி… பப்லு டீம்கிட்ட பேச வச்சி… அந்தப் படங்கள் யார் யார்ட்ட இருக்குன்னு சொல்லுங்க. உங்களை விட்றச் சொல்றோம்னு கூலாப்பேசி… தகவல் கறந்து… சிலர்ட்ட இருந்த படங்களை கைப்பற்றி யிருக்காங்க’’ -இதை நம் காதில் கிசுகிசுத்தவர் ஒரு காக்கிதான்.

டைபி தோழர் களில் சிலர் பாதிக் கப்பட்ட பெண்களை சந்தித்து… அவர்களின் பாதிப்பு கள் குறித்து தகவல் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சந்தித்த இளம் பெண்களில் ஒருவர்… ரைஸ் மில்லில் வேலைபார்த்து வருகிறார். அவர் தன் பாதிப்பைச் சொல்லும் போது…. ’””பப்லு அடிக்கடி டூவீலர்ல வந்து சைட்டடிப்பான். என்னை உண்மையாக காதலிப்பதா டயலாக் அடிச்சான். அதை நம்பி அவனோடு சுத்தினேன். அப்புறம் ஒருநாள் என்னை ஒரு வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போய்… அவனது ஆசைக்கு பயன்படுத்திக்கிட்டான். பிறகு அவனோட நண்பர்களுக்கும் நான் வேணும்னு கேட்டான். நான் கோபப் பட்டபோது… என் ஆபாசப் படத்தை செல்போன்ல காட்டி… “இந்தப் படம் என் பிரண்டுங்கக்கிட்ட எல்லாம் இருக்கு’ன்னு சொல்லி… அவங்கக்கிட்டயும் கூட்டிட்டுப் போனான். அப்பதான் அவன் என்னை அப்படி படம் எடுத்ததே தெரியும். இது தப்பில்லையான்னு நான் கேட்டப்ப… உன்னை மட்டுமா இப்படி எடுத்திருக் கேன்னு.. மேலும் சிலரோட அந்த மாதிரியான படத்தைக் காட்டினான். 

அதில் 2 முஸ்லிம் பொண்ணுக படங்களும் இருந்தது. இவங்களை எப்ப டிடா எடுத்தேன்னு கேட்டேன். அதுக்கு… அவன்… “எங்க அப்பா முஸ்லிம். அம்மா தேவர். அப்பாவின் சொந்தக்காரங்க மூலம்… இந்தப் பிள்ளைகளை காதல்ல விழவச்சி விதவிதமா படம் எடுத்தேன். இவங்க படத்துக்குதான் ஏரியாவில் ஏக கிராக்கி. நிறையபேர்ட்ட வித்திருக்கேன்’னு சொன்னான். அதேபோல அந்தப் பள்ளி மாணவிகளையும் அவன் வளைச்சிருக்கான். (பள்ளி பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இந்த டீமிடம் ஒரு மாலைப் பத்திரிகை நிருபரின் சொந்தக்காரப் பொண்ணும் மாட்டியிருக்கு. இந்தக் கும்பல் கிட்ட சிக்கி சின்னாபின்னப்பட்டுக்கிட்டு இருந் தேன். அவனுங்களை சும்மா விடக்கூடாது” என்று விரிவாகச் சொல்லி அழுதிருக்கிறார்.

“””நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியுது. ஆனா எங்கள்லயே சிலர் சரியா இல்லையே.. எங்க ஸ்டேஷனுக்கு திங்கட் கிழமை அதிரடியாக வந்த டி.சி. தேன் மொழியம்மா… இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை கூப்பிட்டு… “அக்யூஸ்ட்டுகளுக்கு சப்போர்ட்டா பண்றீங்க? நக்கீ ரன்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் போடறாங்க. ஆனா நீங்க எவிடன்ஸே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்’னு டோஸ் விட்டாங்க. இன்ஸ் பெக்டரோ அவங்க மாடலிங் படத்தைப் போட்டிருக்காங் கன்னு சமாளிக்க…. டி.சி.யோ அது ஒரிஜினல் படம்ன்னு எனக்குத் தெரியும். ஜாக்கிரதைன்னு எச்சரித்துவிட்டுக் கிளம்பினார். அதேபோல் பாதிக்கப்பட்ட பூமிகா வீட்டுக்குப்போய் ஜெய்ஹிந்த்புரம் எஸ்.ஐ.அரிமுத்து மிரட்ட… அந்தப் பெண் ஏ.சி.யைத் தொடர்புகொண்டு முறையிட்டார். இதைத்தொடர்ந்து ஏ.சி. அந்த எஸ்.ஐ.யை காய்ச்சி எடுத்துவிட்டார்” என்கிறார் ஜெய்ஹிந்த்புரம் காக்கி ஒருவரே.

இந்த நிலையில்… மதுரை ஏ.சி. வெள்ளதுரை அனுப்பிய போலீஸ் டீம் சென்னை நந்தனத்தில் இருந்த நீலப்பட கும்பல் தலைவனான கார்த்திக்கை வளைத்திருக்கிறது. அவன் வாய் திறந்தால்.. இன்னும் பல பகீர் பூதங்கள் கிளம்பலாம் என்ற எதிர்பார்ப்பு மதுரைவாசிகள் மத்தியில் இருக்கிறது. தானாக போஸ் கொடுத்த பெண்ணைத்தான் படம் எடுத்தேன் என முழுதாக வாய் திறக்க மறுத்தான் கார்த்திக். அவனை போலீஸ் ஊமையாக்குமா? பேச வைக்குமா? பொறுத் திருந்து பார்ப்போ

Advertisements

From → Uncategorized

2 பின்னூட்டங்கள்
  1. Pavitra permalink

    Shocking and culprits must be killed by Stoning in Public

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: