Skip to content

தூத்துக்குடி சி.எஸ்.ஐ நாசரேத் டயோசிஸ் முறைகேடு

ஜூலை 5, 2010

“கர்த்தர்தான் காப்பாற்ற வேண்டும்!”
– நாசரேத் டயோசிஸ்ஸின் ஆதங்ககுரல்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டயோசிஸ்ஸில் அத்தனை லட்சம் முறைகேடு; அவர்மீது வழக்கு, இத்தனை லட்சம் முறைகேடு; இவர்மீது வழக்கு என்று பத்திரிகைகளில் திடீர் திடீர் என்று செய்திகள் வந்து கொண்டிருப்பது திருச்சபை மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் நடந்தது? என்றுவிசாரித்தோம்.

“தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸ்ஸின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகளில் இருபது லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதற்குக் காரணமான நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் லூர்துராஜ் ஜெபசிங், முதல்வர் சுரேஷ் தங்கராஜ் மற்றும் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் பாலிடெக்னிக் கல்லூரி பணம் மூன்று லட்சத்து 50ஆயிரம் ரூபாயை 31.07.08 அன்று வங்கியில் இருந்து காசோலை மூலம் எடுத்துள்ளனர். இந்தப் பணம் எடுத்தது குறித்து டயோசிஸ்ஸின் கணக்கில் பதிவு செய்யவில்லை.

இதேபோல், நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் புனித லூக்கா நர்சிங் கல்லூரி அமைக்க பொது மக்களிடம் பதினாறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதற்காக ஆழ்வார் திருநகரி இந்தியன் வங்கியில் கணக்குத் தொடங்கினர். இதற்கும் மேற்கண்ட மூன்று பேரும் தான் பொறுப்பாளர்கள். இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி இருபது லட்ச ரூபாயை இவர்கள் மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து முறைகேடு செய்ததோடு சிலருடன் சேர்ந்து தூத்துக்குடி புறநகர்ப் பகுதியில் இடம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சொல்லி கடந்த மார்ச் 8-ம் தேதி எஸ்.பி யிடம் புகார் செய்தார் தென்னிந்திய திருச்சபை ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் நல சங்க அமைப்பு செயலாளர் ஜோபர் ஜோதிபால்.

ஆனால் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மதுரை ஐகோர்ட் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். புகார் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தும்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேர்மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்ற செய்தி, திருச்சபை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சூட்டோடு சூடாகத் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் வழக்கறிஞர் மூலம் பத்திரிகையில் தெளிவாக மறுப்பு அறிவித்தார்.

இப்பிரச்னையை கிளப்பிய ஜோபர் ஜோதிபாலை சந்தித்தோம். “திருநெல்வேலி டயோசிஸ்ஸில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு பிரிந்து தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸ் செயல்படத் தொடங்-கியது. டயோசிஸ்ஸில் இரு-நூறுக்-கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பொறியி-யல் கல்லூரி-கள், பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரிகள் என்று பல ஆயிரம் கோடிக்குச் சொத்து உள்ளது. இதை நிர்வகிப்பதில்தான் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த முறைகேடு. இந்தக் கையாடல் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி லூர்துராஜ் ஜெபசிங், சுரேஷ்தங்கராஜ், சாமுவேல் செல்வராஜ் ஆகியோரின் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருந்த போதும் இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட-வில்லை. பணத்தையும் செல்வாக்கையும் பயன்-படுத்தி அவர்கள் தப்பி வருகின்றனர். திருமண்டலத்தில் நடைபெறும் முறை-கேட்டைத் தடுக்க நீதிமன்றம் மூலம் சிலகாலம் நிர்வாகத்தை நடத்தி முறைகேடுகளை சீர்செய்த பின்பு உரிய நிர்வாகிகளிடம் ஒப்படைப்பதுதான் தீர்வு” என்றார் நம்மிடம்.

தொடர்ந்து திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜை சந்தித்தோம். “இந்த வழக்கு போலியான வழக்கு. ஜோபர் ஜோதிபால் என்பவர் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வரும் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் இடமாற்றம் செய்தது.

ஆனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் போய் பணி செய்யவில்லை. பின்னர் இவரை திருமண்டல நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இதற்குப் பழிவாங்கவே இவர் இவ்வாறான போலி வழக்குகளை பதிவு செய்து வருகிறார்” என்றார் சாமுவேல் செல்வராஜ்.

இரு தரப்பினரையும் சந்தித்த பின்பு திருமண்டல திருச்சபை சீர்திருத்த மறுவடி வமைப்பு இயக்க நிறுவனர் டாக்டர் சாலமன் ஜார்ஜை சந்தித்தோம். “டயோசிஸ்ஸில் முறைகேடு நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்தக் கையாடல், விஞ்ஞான பூர்வமாக நடை-பெறுகிறது. டயோசிஸ்ஸின் முறை-கேட்டை பற்றி நான் புத்தகமே வெளி-யிட்டிருக்கிறேன். டயோசிஸ்ஸின் முறைகேட்டைத் தவிர்க்க ஒரே வழி, மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.

“கர்த்தர்தான் இந்த டயோ-சிஸ்ஸை காப்பாற்ற வேண்டும்!” என்ற குரல் நாசரேத் முழுக்க ஒலிக்கிறது.

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: