Skip to content

நெல்லை வண்ணார்பேட்டை புனித சேவியர் பள்ளி முதல்வர் மாணவன் அஜய் கிரேட்டஸ் வீட்டின் மாடியில் தற்கொலை

ஜூலை 4, 2010

Nellai.jpg

பள்ளிக்கூடங்களா, பலி பீடங்களா? இந்தக் கேள்வியை மீண்டும் கேட்க வைத்திருக்கிறது நெல்லையில் நடந்த வேதனைச் சம்பம். நெல்லையின் புகழ்பெற்ற ஸ்காட் குழுமத்தினரால் வண்ணார்பேட்டை பகுதியில் புனித சேவியர் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. 10-வது வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லாததால் பள்ளியின் முதல்வர் மெனன்டஸின் வீட்டின் மாடியில் மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அப்படிப் படித்துவந்த ப்ளஸ் ஒன் மாணவன் அஜய் கிரேட்டஸ், கடந்த ஜனவரி 22ம் தேதி தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சக மாணவர்கள் மூலம் பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்ட அஜய்… தூக்கில் தொங்கியதை அன்று மதியம் அந்த அறையைச் சுத்தப்படுத்திய வேலைக்காரப் பெண்தான் பார்த்துப் பதறி பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

புத்திர சோகத்தில் இருந்த அஜய் கிரேட்டஸின் தந்தை அருள் ஜோசப்ராஜிடம் பேசினோம்.

‘‘கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இரவுகூட அவனிடம் பேசினோம். அவன் வளர்க்கும், ‘லவ் பேர்ட்ஸ்’ பற்றியெல்லாம் விசாரித்தான். சம்பவம் நடந்த அன்று நான் நெல்லையில்தான் இருந்தேன். மதியம் 2.20 மணிக்கு பையனை அந்தப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த பங்குத் தந்தை ஜெர்ரி என்னிடம் பேசினார். ‘பையனுக்கு உடம்பு சரியில்லை. பள்ளிக்குச் சென்று பாருங்கள்’ என்று கூறினார். மாலையில்தான் போகப் போகிறோமே என்று இருந்தேன். மறுபடி மாலை 4 மணிக்குப் பள்ளியிலிருந்து போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு சென்றபோது எங்கள் பையன் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் பள்ளி முதல்வர், தாளாளர் அவரது மனைவி ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அஜயைப் பார்த்து நான் அழுது துடித்தபோது அங்கிருந்த ஒருவர், ‘சத்தமாக அழாதீர்கள். எல்லோரும் கூடிவிடுவார்கள்’ என்றார். அந்த அறை கழுவி விடப்பட்டிருந்தது. என்னோட அஜய் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவன் மரணத்தில் மர்மம் உள்ளது’’ என தழுதழுத்தார் ஜோசப்ராஜ்.
Nellai%202.jpg
அஜய்யின் நெருங்கிய உறவினர்களோ, ‘‘பையன் மதியமே இறந்தபோதும், பெற்றோருக்கு நான்கு மணிக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் என்று மாதம் 2 ஆயிரத்து 150 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், ஹாஸ்டலே கிடையாது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘சேலத்தில் இருந்து சார் பேசினார். பார்த்து முடிக்கச் சொன்னார்’ என்று பக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியானால் பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மூலம் பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறதா?’’ என்று கேட்கிறார்கள்.

பள்ளியின் இயக்குனர் பார்த்திபனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘‘மாணவர் அஜய் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயற்சித்தபோது, அங்கிருந்த வாளியில் உள்ள தண்ணீர் கொட்டிவிட்டது. அதனால்தான் அறை, ஈரமாக இருந்தது. காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நன்கு படிக்கிற மாணவனின் இழப்பு பள்ளிக்கும் பெரிய இழப்புதான்’’ என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன் நம்மிடம், ‘‘முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

எப்படியோ ஓர் இளம் உயிர் போய்விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எப்போது அமல்படுத்தப் போகிறார்களோ?

படங்கள்: ஏ.எஸ்.அருண்


Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: