Skip to content

கோவை சி.எஸ்.ஐ. சர்ச் பிஷப் மாணிக்கம் துரை ஊழல் சபை கலைக்கப்பட்டது

ஜூலை 4, 2010

Top world news stories and headlines detail

ஊழல், கொலை மிரட்டல் புகார்கள்: இதோ இன்னொரு பிஷப்!

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1213&rid=66

செல்வத்தின் மீதான ஆசையே அனைத்து தீமைகளுக்கும் வேராக இருக்கிறது’ – இது பைபிள் வாசகம்.

இந்தப் புனித வாசகத்தை ஊருக்கு உபதேசம் சொல்லிக்கொண்டே… மோசடி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு என சிக்கியிருக்கிறார் ஒரு பிஷப். ஆமாம்… சர்ச்சுகளை விட சர்ச்சைகளால் அடையாளப்படும் பிஷப்புகளில் இப்போதைய பரபரா கோவை சி.எஸ்.ஐ. பிஷப்பான மாணிக்கம் துரை.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகிறார் மாணிக்கம் துரை.

இந்தத் திருமண்டலத்தின் கீழ்வரும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் அனாதை விடுதிகள் போன்றவற்றின் வருமானத்தில் இருந்து மூன்று கோடி ரூபாய் வரை பிஷப் ஊழல் செய்துவிட்டதாக புகார்கள் எழ, சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் தலைமறைவான பிஷப், முன் ஜாமீன் கிடைத்த பின்னரே நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் வழக்கில் பிஷப் கைதாகியுள்ளதால் சர்ச் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

முதன்முதலில் பிஷப் மாணிக்கம் துரை மீது மோசடி வழக்கு தொடர்ந்த கோவையைச் சேர்ந்த பிரேம்குமாரை சந்தித்து பேசினோம்.

‘‘கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல அதிகாரத்தின் கீழ் 120 ஆலயங்கள், நூற்றுக்கும் அதிகமான பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், மருத்துவமனைகள், அனாதை விடுதிகள் உள்ளன. இவற்றின் மூலம் மட்டும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அந்த பணத்தில்தான் தொடர்ந்து கைவைத்து வந்திருக்கிறார் பிஷப் மாணிக்கம் துரை.

குறிப்பாக நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கிடைத்த நன்கொடைப் பணத்தில் அதிகம் விளையாடியிருக்கிறார் பிஷப். 2005-06ம் கல்வி ஆண்டில் 10 கோடி ரூபாய், 2006-07 கல்வி ஆண்டில் 12 கோடி ரூபாய், 2007-08 கல்வி ஆண்டில் 16 கோடி ரூபாய், 2008-09 கல்வி ஆண்டில் 20 கோடி ரூபாய் என அவர் செய்த மோசடி விவரங்கள் எங்களிடம் உள்ளன.

கல்விக்காக மாணவர்கள் கட்டிய தொகையை இப்படி சூறையாடியிருக்கும் பிஷப், அதைவிட கொடுமையாக அனாதை மற்றும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்காகவும், மேம்பாட்டுக்காகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான பணத்தையும் அபகரித்துவிட்டார்.

வெளிநாட்டு நன்கொடைகளை நிர்வகித்து வருபவர் பிஷப்பின் மனைவி சுடர்மணி துரை. 2005-06ம் ஆண்டில் 3 கோடியே 56 லட்சம், 2006-07ம் ஆண்டில் 3 கோடியே 70 லட்சம், 2007-08ம் ஆண்டில் 3 கோடியே 54 லட்சம், 2008-09ம் ஆண்டில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் என பல கோடி ரூபாய்களை பிஷப்பும் அவரது மனைவியும் ஏப்பம் விட்டுள்ளனர். அதனால் ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து நன்கொடைகளே வருவதில்லை.

மேலும் கோவை திருமண்டலத்துக்கு உட்பட்ட ஆலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் பி.எஃப். பாண்டு பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து மூன்று கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளார் பிஷப். இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

அதேபோல் திருமண்டலத்துக்கு உட்பட்ட பல ஏக்கர் நிலங்களை வேண்டப்பட்டவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கியதற்காக பல லட்ச ரூபாய் பணத்தை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் வரவு செலவு கணக்கில் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கட்டடங்கள் கட்டியதிலும் பல கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார்’’ என பிஷப் மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியல் போட்ட பிரேம்குமார் தொடர்ந்தார்.

‘‘இதெல்லாம் தெரிந்து பதினைந்து முறை அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் பிஷப் பதில் கொடுக்கவில்லை. அதன்பின் கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி.பிரமோத்குமாரிடம் புகார் செய்தோம். அவர் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்ய… அப்போதைய கமிஷனர் மாஹாளி, வழக்கை மாநகர குற்றப் பிரிவுக்கு மாற்றினார். மேலும் இந்த விவகாரம் பற்றி லீகல் ஒப்பீனியன் கேட்கப்பட்டபோது, பிஷப் நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று தெரியவந்ததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த ஜூலை மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து பிஷப் தலைமறைவானார். அதன் பின் முன் ஜாமீன் கிடைத்த பிறகே மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்தார் பிஷப்’’ என முடித்தார் பிரேம்குமார்.

பிஷப் மாணிக்கம் துரையிடமிருந்த அனைத்து பொறுப்புகளும் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீனில் வெளியில் இருக்கும் பிஷப் மாணிக்கம் துரையை கூடலூர் போலீஸார் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘கடந்த ஆண்டு பிஷப் மீது மோசடி புகார்கள் எழுந்தபோது, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தின் போதகர் கவிராஜ் ஜார்ஜ் என்பவர் பிஷப்புக்கு எதிராக மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனை அறிந்த பிஷப் மாணிக்கம் துரை, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தேவர் சோலை போலீசில் கவிராஜ் புகார் கொடுத்ததையடுத்து பிஷப் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது கூடலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு சம்பந்தமாக நேரில் ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பிஷப் ஆஜராகாததால், அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும் போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றனர் போலீஸார்.

இப்பிரச்னையில் மேலும் ஒரு திருப்பமாக பிஷப் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக திரும்பிய தகவலும் வெளிவந்துள்ளது. ‘‘பிஷப்புடன் சேர்த்து 31 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பிஷப், அவரது சகோதரர்கள் மூர்த்தி, தனபாலன், மற்றும் அமிர்தம், பேராசிரியர் மனேசன் ஆகிய ஐந்து பேர் மட்டும்தான் கைதாகி ஜாமீனில் உள்ளனர். மற்ற 26 பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள்தான் பிஷப்பை மாட்டிவிடுவதற்காக தற்போது செயல்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். கடந்த மாதம் 18-ம் தேதியே கூடலூர் நீதிமன்றம் பிஷப்புக்கு பிடிவாரன்ட் கொடுத்துவிட்டது. ஆனால் இந்தத் தகவலை அவர்கள் பிஷப்புக்கு கொண்டுபோகவே இல்லை. பிடிவாரன்ட் பற்றிய தகவல் தெரியாமல் இருந்ததால்தான் அவர் கைதானார். இந்த மறைப்பு விவகாரத்தில் பிஷப்பின் வழக்கு விவகாரங்களை கவனிப்பவர்களின் பங்கும் இல்லாமல் இல்லை’’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

புகார்கள் பற்றியெல்லாம் பிஷப் தரப்பு வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘பிஷப் வெளியில் வந்து எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்வார்’’ என்று சொல்லி முடித்துக்கொண்டனர்.

இந்த கொடுமைக்கிடையே, துபாயில் இருக்கும் பிஷப்பின் மனைவி சுடர்மணி,கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவரது கையெழுத்தை வேறு யாரோ போட்டிருப்பதாகக் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதிலும் மோசடியா?

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: