Skip to content

புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

ஜூலை 3, 2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=30361

திருச்சி:”மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் படி கணவரும், அவரது குடும்பத்தாரும் வற்புறுத்துகின்றனர்’ என, திருச்சி போலீஸ் கமிஷனரிடம், புதிதாக திருமணமான பெண், புகார் அளித்துள்ளார்.திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்த லாசர் – ஷீலா தம்பதியின் மகள் பாரதி என்ற எஸ்தர்(20). இவருக்கும் போடிநாயக்கனூர் குலாளர்பாளையம் பங்காரு நாயக்கர் தெருவைச் சேர்ந்த, எஸ்தரின் மாமா மகன் பாலாஜி என்ற மனோவாவுக்கும், பிப்ரவரி 24ம் தேதி, போடிநாயக்கனூர் மாரநாதா சபையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

See full size imageதிருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, “உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை, போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆபாச படங்களை, “டிவி’யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார்.ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், “மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, “அட்ஜஸ்ட்’ செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது’ என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார்.இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். “50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்’ என்று கூறியுள்ளார்.விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார்.உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.எஸ்தர் கூறியதாவது:என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: