Skip to content

கிறித்தவ ஜெபம் செய்தால் உயிர் பிழைப்பார் -இறந்த உடலுடன் 60 நாள்கள் வாழ்ந்த குடும்பம்

ஜூலை 2, 2010

கிறித்தவ பாதிரியார் கைது : ஜெபம் செய்தால் பிணியாளி உயிர் பிழைப்பார் ? இறந்த உடலுடன் 60 நாள்கள் வாழ்ந்த குடும்பம்.

பைபிள்: யாக்கோபு 5 அதிகாரம்14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர் (பாதிரி)களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக் கடவர்கள்.

5. அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
——————————————————————
மூடத்தனம் உலகத்திற்கே சொந்தம்

பூஜை செய்தால் உயிர் பிழைப்பார் என்று இறந்த பெண்ணின் உடலுடன் 60 நாள்கள் வாழ்ந்த குடும்பம் பாதிரி கைது செய்யப்பட்டார்

மேடிசன், மே 11- அறிவியல் தொழில்நுட்பத்தில் மிக வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில்தான் மூடப் பழக்க வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

இறந்த பெண்ணின் உடலுடன் அவரின் மகள் குடும்பத்தினர் 2 மாதம் வாழ்ந்திருக்கின்றனர்.

மேடிசன் நகரைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி மிடில்ஸ் வொர்த் தனது மகள் டாமி லூயிஸ் மற்றும் அவரின் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். 2 மாதங்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

தாயின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மகள் டாமிலூயிஸ் இருந்தார். அவ ருக்கு ஆறுதல் கூறிய ஆலன்புசி என்ற கிறித்தவ பாதிரியார் மிடில்ஸ்வொர்த் உடலுக்கு சில நாள்கள் வழிபாடு நடத்தினால் அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று கூறினார்.

அதை நம்பிய டாமிலூயிஸ் தனது தாயார் மிடில்ஸ் வொர்த்தின் உடலைக் குளியலறையில் கிடத்த அந்த உடலுக்கு நாள்தோறும் வழிபாடு நடத்தி வந்தார்.

அவரின் 15 வயது மகன், 12 வயது மகன் ஆகியோரையும் வழிபாடு நடத்தும்படி கட்டாயப்படுத்தினார்.

இறந்த உடலிலிருந்து துர் நாற்றம் வீசுவதைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழுத போதும் அவர்களை வெளியே விட, டாமி லூயிஸ் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் மிடில்ஸ் வொர்த் உயிருடன் உள்ளாரா என்பதை உறுதி செய்யும்படி அவரின் சகோதரி அப்பகுதி செரீப்பிடம் முறையீடு செய்தார். அதன்படி அதிகாரி ஒருவர் மிடில்ஸ்வொர்த்தின் வீட்டிற்கு ஆய்வு செய்யச் சென்றபோது அவரை வீட்டிற்குள் விட, டாமிலூயிஸ் மறுத்து விட்டார்.

எனினும் தீவிர முயற்சிக்குப் பிறகு வீட்டிற்குள் நுழைந்த அதிகாரி பிணத்தைச் சுற்றிக் குடும்பமே அமர்ந்து வழிபாடு செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இறந்தவரின் உடலிலிருந்து வீசிய துர்நாற்றம் அப் பகுதியை நாறடித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து 60 நாள்களாக இறந்தவரின் உடலுக்கு அருகிலேயே இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் குழந்தைகள் இருவரும் மனநிலை குன்றியவர்களைப் போல் காணப்பட்டனர்.

உடனடியாக 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவத்திற்கு அனுப்பிய அதிகாரிகள், டாமி லூயிசையும் அவருக்கு ஆலோசனை வழங்கிய ( BISHOP )பேராயரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
viduthalai.com

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: