Skip to content

குளச்சல் ‘ஜீசஸ் வேர்ல்டு’ காப்பகத்தில் சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர்

ஜூலை 1, 2010



குமரி மாவட்டம் –
குளச்சல் அருகே உள்ள ‘ஜீசஸ் வேர்டு’ காப்பகத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.
அவர்களில் 14 வயது சிறுமி ஒருத்தி காப்பக நிர்வாகி தன்னை பாலியல் தொந்தரவு
செய்வதாக தனது தாயிடம் கூறினார். இதுபற்றி அவரது தாய் குளச்சல் காவல்
நிலையத்தில் புகார் செய்தார். ஜீசஸ் வேர்டு’ காப்பக நிர்வாகியிடம் போலீசார் பேச்சு
நடத்தி அந்த சிறுமியையும அவரது தங்கையையும் மீட்டுஇ தாயிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக அனைத்து மனித உரிமை
மீறல் மற்றும் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு எதிரான கண்காணிப்பு
குழு(ஏஎச்பியூ) விசாரணை நடத்தியது.
இதன்பின் காப்பக நிர்வாகி ஞானதாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஜீசஸ் வேர்டு’ –இதில் அறக்கட்டளை நடத்த அனுமதி பெற்றுக்கொண்டுஇ காப்பகம் நடத்தியது தெரியவந்தது. இதேபோ செரியாவட்டத்தில்
5 சிறுவர்இ 2 சிறுமிகளுடன் அனுமதியின்றி செயல்பட்ட மற்றொரு காப்பக நிர்வாகி
அந்தோணிராஜிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் இது குறித்து கலெக்டர்
மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். இதற்கிடையே
இந்த 2 போலி காப்பகங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த 16 குழந்தைகளை காப்பக
நிர்வாகிகள் நேற்று முன்தினம் திடீரென அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அரசு நடவடிக்கைக்கு பயந்தே குழந்தைகளை ஒப்படைத்ததாக  தெரிகிறது.
புதுச்சேரி் கிருஷ்ணகிரி குழந்தைகள் கடத்தல் வழக்கில் புதுச்சேரி லலிதா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவின்பேரில் புதுச்சேரியில் உள்ள 54 காப்பகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். காப்பகங்களின் அனுமதி மற்றும் செயல்பாடு தங்கியிருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேக ரிக்க உள்ளனர். சமூக நலத்துறை இயக்குனர் உத்தமன் கூறுகையில் ‘புதுச்சேரியில் இயங்கும் தனியார் காப்பகங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: