Skip to content

திருவொற்றியூர் தமிழ் லூத்தரன் சர்ச் சர்ச்சை

ஜூன் 22, 2010

திருவொற்றியூர் சர்ச் சர்ச்சை பின்னணியில் பணம், பதவி, அதிகாரம்தினமலர் ஆகஸ்ட் 27,2008,00:00

ISThttp://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=5752&cls=row3&ncat= TN

சென்னை: பணம், பதவி, அதிகாரத்தால் இரண்டு கோஷ்டியாகப் பிரிந்து திருவொற்றியூர் சர்ச்சில் ஏற்பட்டுவரும் சர்ச்சையால், அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கொதித்துப் போயுள்ளனர். சென்னையை அடுத்த திருவொற்றியூரில் தமிழ் லூத்தரன் கிறிஸ்தவ ஆலயம் (டி.இ.எல்.சி.,) உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்த சர்ச், தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு கல்வி, மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐந்து மாநிலங்களில் 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 136 குருசேகரங்களாக ஓர் ஆயர், ஒரு மறை மாவட்டத்திற்கும் ஒரு மறைமாவட்டத் தலைவர், தலைமைப் பேராயர் மற்றும் ஆலோசனை வழங்க எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழு என நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த சபையின் கீழ் நான்காயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் இருக்கின்றன.

திருச்சபையின் சட்ட விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதோடு, சங்க விதிகளின்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் ஆயர்களுக்கு சம்பளம், வைப்பு நிதி, சேமநல நிதி என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு, முறையாக வழங்கப்பட்டும் வந்தது. சமீப காலங்களில் பதவி, அதிகாரத்திற்கு வர, தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டதால், கோஷ்டிகள் உருவாகி பிரச்னைகள் வலுத்தது. அந்த வகையில் திருவொற்றியூர் சர்ச்சும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது.

இதுகுறித்து தற்போது அங்கு ஆயராக இருக்கும் செல்வராஜ் கூறியதாவது: ஆன்மிகப் பணி செய்யவேண்டிய ஆயர்கள் அரசியல்வாதிகளாகி விட்டனர். நீதி,நேர்மை, உண்மை என்று செயல்பட வேண்டியவர்கள் தொந்தரவு தரத் துவங்கியுள்ளனர். பேராயர் அருள்தாஸ், ஆலோசனைக் குழு செயலர் ரவீந்திரன் இணைந்து திருச்சபை சொத்துக்களை விற்க முயற்சிக்கின்றனர். இரு கோஷ்டிகளாக செயல்பட்டுவரும் நிலையில், ஆயராக வருபவர் எந்த ஒரு கோஷ்டியிலாவது சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படி சேராமல் நடுநிலை வகிக்கும் ஆயரை, இருகோஷ்டிகளும் இணைந்து வேறிடத்திற்கு இடமாற்றம் செய்துவிடுகின்றனர். பத்தாண்டுகளாக எல்லா குருசேகரங்களிலும் இந்த அவலநிலை உருவாகியுள்ளது.

ஆயர்களின் நிலையும் பரிதாபமாகி வருகிறது. திருவொற்றியூரில் பிரச்னை பெரிதானபோது, வால்பாறையில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை தொலைபேசியில் அழைத்து இங்கு மாற்றலாகி வரும்படியும், இங்குள்ள பிரச்னையைத் தீர்க்க நான் தான் பொருத்தமானவர் என்றும் கூறி பேராயரும், சங்க உறுப்பினர் தானியேல் ஜெயராஜும் அழைத்தனர். 2003ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று இங்கு வரும் மக்களின் ஆதரவோடு வரவு-செலவு கணக்குகளை சரிவர பராமரித்து வருகிறோம்.

வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு தற்போது பிரச்னை பெரிதாகி உள்ளது. தேர்தலே நடத்தாமல் இருகோஷ்டியும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். ஆண்டு சந்தாவைக் கணக்கில் காட்டாமல் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று பல வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளது. 2010ல் ஓய்வு பெறப்போகும் எனக்கு ஐந்து மாதங்களாக சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். எனது வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குப் பதில் சொல்லாமல் “ஏ’ கிரேடில் பணிபுரியும் என்னை “சி’ கிரேடு சர்ச்சுக்கு பணிமாற்றம் செய்வது, சட்ட விதிகளுக்கு முரணானது. இங்கு யார் பணிபுரிய வேண்டும் என்பதை, இங்கு வரும் மக்களிடம் விட்டு விட்டு, முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும். இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: