Skip to content

ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பெந்தகொஸ்தே பாதிரியார்

ஜூன் 22, 2010

ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பாதிரியார்

மதுரை,​​ பிப்.​ 19:​ மதுரை தொழிலதிபரும்,​​ காங்கிரஸ் எம்.எல்.ஏ.​ உறவினருமான தங்கப்பாண்டியனை ரூ.​ 15 லட்சத்துக்காகஅவரது நண்பரான பாதிரியார் கொலை செய்து,​​ பெட்ரோல் ஊற்றி எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​ ​ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது போலீஸôருக்குக் கிடைத்த தகவல் வருமாறு:​ ​ ​ மதுரை கிரம்மர்புரத்தில் மெட்ராஸ் பெந்தகொஸ்தே சபை நடத்தி வருபவர் பாதிரியார் ஜஸ்டின் என்ற சாமுவேல் ஜஸ்டின் சக்திகுமார் ​(45).​ இவரும்,​​ கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டியனும் ​(58) நீண்டகால நண்பர்கள்.

​ ​ பாதிரியாரிடம் நம்பிக்கையின் பேரில் தங்கப்பாண்டியன் அவ்வப்போது பணம் கொடுத்து வைத்துள்ளார்.​ மேலும்,​​ தங்கப்பாண்டியனிடம் வட்டிக்கும் பணம் பெற்று வந்துள்ளார்.​ இந்த வகையில் மொத்தம் ரூ.15 லட்சம் வரை தங்கப்பாண்டியனுக்கு பாதிரியார் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.​ ​ ​ இப்பணத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காக தங்கப்பாண்டியனைக் கொலை செய்ய தனது நண்பரான தம்பி என்ற பிரபாகரன் உதவியுடன் திட்டமிட்டுள்ளார் பாதிரியார்.​ கொலை செய்யும் பொறுப்பை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த முருகன் தலைமையிலான சிலரிடம் ஒப்படைத்துள்ளார்.

​ ​ இந்நிலையில் கடந்த 15}ம் தேதி தங்கப்பாண்டியனிடமிருந்து பாதிரியார் ரூ.60 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.​ இதையடுத்து ஒரு நிலத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறி,​​ தங்கப்பாண்டியனை சிவகங்கை மாவட்டம்,​​ பூவந்தி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.​ அங்கு,​​ முருகன் தலைமையில் ஏற்கெனவே தயாராக இருந்த கூலிப்படையினர்,​​ தங்கப்பாண்டியனுக்கு காரில் வைத்தே அதிகளவில் குளோரோபார்ம் கொடுத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.

​ ​ பின்னர்,​​ நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியில் தங்கப்பாண்டியனின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பாதிரியார் மதுரை வந்துவிட்டார்.​ ​ ​ இந்த நிலையில் 16}ம் தேதி தங்கப்பாண்டியனின் மனைவி அமுதவள்ளி எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் அளித்தார்.​ இதுதொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர்.

​ ​ அதேநேரத்தில் 15}ம் தேதியில் நிலக்கோட்டை போலீஸôர் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடந்துள்ளதாகவும் வழக்குப் பதிந்துள்ளனர்.​ இதுகுறித்த தகவல் கிடைக்கவும் தங்கப்பாண்டியனின் உறவினரை அழைத்துக்கொண்டு அந்த சடலம் குறித்து விசாரித்து,​​ அது தங்கப்பாண்டியன்தான் என உறுதி ​ செய்யப்பட்டது.​​ ​ பின்னர்,​​ 15}ம் தேதி தங்கப்பாண்டியன் யாருடன் சென்றார் என்ற ரீதியில் தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் பாதிரியார் மீது சந்தேகம் ஏற்பட்டது.​ இதையடுத்து,​​ அவரிடம் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை பாதிரியார் ஒப்புக்கொண்டார்.

​ ​ இதற்காக கூலிப்படையினருக்கு ரூ.1 லட்சம் பேசி,​​ ரூ.35 ஆயிரம் முன்பணமாகக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.​ இதையடுத்து பாதிரியார் ஜஸ்டினை போலீஸôர் கைது செய்து மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

​ ​ திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்:​​ இதனிடையே இவ்வழக்கில் போலீஸôரால் தேடப்பட்டுவந்த மதுரை எஸ்.எஸ்.​ காலனியை சேர்ந்த தியாகராஜனின் மகன் ராமச்சந்திரன் என்ற குமார் ​(36) திண்டுக்கல்லில் உள்ள ஜே.எம்.​ 2}வது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: