Skip to content

பாலியல் துஷ்பிரயோக புகைப்படங்களை எனது பூனையே பதிவிறக்கம் செய்தது

ஜூன் 22, 2010

கணினியில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், தான் அப்புகைப் படங்களை பதிவிறக்கம் செய்யவில்லை, தனது செல்லப் பிராணியான பூனையொன்றே அவற்றை பதிவிறக்கம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தை திகைக்க வைத்த விசித்திர சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது தனிப்பட்ட கணினியில் 1000க்கு மேற்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோக புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஜென்ஸன் பீச் எனும் இடத்தைச் சேர்ந்த கெய்த் கிறிப்பின் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் இணையத்தளத்திலிருந்து பாடல்களை மட்டுமே கணினிக்கு பதிவிறக்கம் செய்ததாகவும், தான் அறையை விட்டுச் சென்றபோது தனது பூனை கணினி விசைப் பலகையில் துள்ளி விளையாடி மேற்படி புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும் கிறிப்பின் கூறினார்.

எனினும், நீதிமன்றம் கெய்த் கிறிப்பினுக்கு எதிரான குற்றச்சாட்டை நீக்க மறுத்துள்ளது. அவர் தற்போது மார்ட்டின் நகர சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த பூனைக்கு எதிராக என்ன குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து நீதிபதி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை என மேற்படி செய்தியை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

http://mrishan.blogspot.com/2009/08/blog-post_20.html

One Comment
  1. karuppaiah permalink

    This man can become a Pope and help Catholic church prepare similar defense.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: