Skip to content

மலேசியாவில் குழந்தையை மனைவியிடம் ஒப்படைக்கும்படி மதம் மாறிய கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

ஜூன் 21, 2010

http://www.dailythanthi.com/article.asp?NewsID=553225&disdate=3/14/2010

கோலாலம்பூர், மார்ச்.14-

குழந்தையை மனைவியிடம் ஒப்படைக்கும்படி மதம் மாறிய கணவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் மலேசியாவில் நடந்து உள்ளது. மலேசியா நாட்டில் வசிப்பவர் இந்திரா காந்தி. 35 வயதான இவர் கணவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார். அவர் பெயர் முகமது ரிட்சுவான் அப்துல்லா. இவர் மதம் மாறியதோடு தன் குழந்தைகளையும் தன் மனைவிக்கு தெரியாமல் மதம் மாற்றி விட்டார் என்று இந்திரா காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.

அவர் மதம் மாறியதால், கணவரை விட்டு இந்திராகாந்தி பிரிந்து விட்டார். இந்த நிலையில் பிறந்து 22 மாதங்களேயான கடைசிக் குழந்தையை கணவர் அப்துல்லா தன்னுடன் எடுத்துச்சென்று விட்டார். இதை எதிர்த்து இந்திரா காந்தி ஈப்போ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு குÖந்தை பிரசானா தீக்சாவை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்திராகாந்தியின் வக்கீல் குலசேகரன் கூறுகையில், குழந்தையின் நலனை முன்னிட்டு அதை தாயாரிடம் ஒப்படைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: