Skip to content

கட்டாய மதமாற்றம்-மக்கள் ஈரோட்டில் துணை தாசில்தாரை சிறை பிடித்தனர்

ஜூன் 21, 2010

Important incidents and happenings in and around the world ஈரோடு:கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த தால், ஈரோடு அருகே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் நேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்றனர். அவரது வீட்டில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து, ‘மக்களாட்சி முடிவுறப் போகிறது; இனி தெய்வ ஆட்சி நடக்க உள்ளது.ஏசுவை பின்பற்றுபவர் மட்டுமே உலகில் நிலைத்திருப்பர்’ என்றனர்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கேசவன், ‘பிரச்னை எதற்கு செய்கிறீர்கள்; ஊருக்குள் சென்றால் பிரச்னையாகி விடும், திரும்பச் செல்லுங்கள்’ என்றார்.

கேவலமான பிரச்சாரம்: அதற்குள் மற்றொரு குழுவினர் ஊருக்குள் சென்றனர். குழுவைச் சேர்ந்த திருச்செங்கோடு தனியார் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன்(38), வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ்(65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம்(61), யெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி கவுசல்யா(28), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன் ஆகியோர் பிரசாரத்தை துவக்கினர். அப்பகுதி மக்கள், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அவர்களை சிறை வைத்தனர்.

2012 மாதிரியிலான பிரச்சாரம்: மேலும், அவர்கள் வந்த ஆம்னி வேன் பின் டயர் காற்றை இறக்கிவிட்டனர். சொட்டையம் பாளையம் ஜெயந்தி கூறுகையில்,”ஏசுவை கும்பிடு வோர் இந்த உலகத்தில் இருப்பர்; மற்றவர்கள் அழிந்து விடுவர்‘ என்று கூறி பயத்தை ஏற்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அவர்களை சிறை வைத்தோம்,” என்றார்.  ஒன்பதாம் வகுப்பு மாணவி நிவேதா கூறுகையில், எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், சாமியார்கள் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. ஏசு ஒருவர் தான் உலகை ரட்சிப்பவர்; ஏசுவை கும்பிட்டால் எந்த பிரச்னையும் வராது’ என்று கூறி பிரசாரம் செய்தனர்,” என்றார் [பாவம், கிருத்துவர்கள் சென்னையிலேயே எத்தனைப் பெண்களை கற்பழித்தனர், பாலியல் கொடுமை செய்துள்ளனர், ஊட்டி பாதிரியில் சல்லாபங்கள் இவற்றையெல்லாம் ஏன் சொல்லவில்லை?]. கவுரி சங்கர் என்பவர் கூறுகையில், நான் முதலில் ஏதோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் என்று நினைத்தேன். இறுதியாக துண்டு பிரசுரம் கொடுத்த போது தான், மதப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிந்தது.

மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது: அந்த துண்டு பிரசுரத்தில், மற்ற மதத்தினர் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டு, கிறிஸ்துவ மதத்தில் சேரும் படி இடம் பெற்றிருந்தன,” என்றார்.பைபிள் மாணாக்கர் குழுவினர் கூறுகையில், ‘இந்த உலகம் நிலையற்றது. கடவுளால் அழிக்கப்படும். ஏசுவை நம்புவோர் கைவிடப்படமாட்டார். எல்லா வேதங்களும் இதையே கூறுகின்றன என்று தான் கூறினோம். யாரையும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை‘ என்றனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ் பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது எனக் கூறிய போலீசார், அவர் களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். அதனால், அப்பகுதி மக்கள் சற்று சமாதானமாயினர்.

மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது: தனி துணை தாசில்தார் ஜான்சன் கூறுகையில், நான் இடம் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு வேண் டப்பட்டவர்களை பிடித்து வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்கும்படி கூறினேன். என்னையும் பிடித்துக் கொண்ட னர். இன்று நடக்கும் மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது,” என்றார்

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: