Skip to content

தூத்துக்குடி மோசடி :பாதிரியார் மீது வழக்கு

ஜூன் 21, 2010

Wednesday, 03 June 2009

தூத்துக்குடி, திருமண்டலப் பணத்தைக் கையாடல் செய்ததாகப் பாதிரியார் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடிநாசரேத் திருமண்டல உறுப்பினரான சோப்பார் ஜோதிபால் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் திருமண்டலப் பணம் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் புகார் மனு கொடுத்தார். குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தூத்துக்குடிமாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாருககு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பெயரில் தூத்துக்குடிநாசரேத் திருமண்டலப் பொருளாளர் பாதிரியார் சாமுவேல் செல்வராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் தலைவர் பாதிரியார் லர்து ராஜ்ஜெபசிங், பள்ளி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடிநாசரேத் திருமண்டலப் பணம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கையாடல் செய்துள்ளதாக தூத்துக்குடிமாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் செல்லப்பா வழக்குப் பதிவு செய்து பாதிரியார் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கையாடல் செய்த ரூ.20 லட்சத்தை முள்ளக்காடு சர்வே எண்.664/4, 664/6 ல் 4.18 ஏக்கர் இடத்தை 2 கோடி ரூபாய்க்கு விலைபேசி முன்பணம் செலுத்தியுள்ளதாகவும், குற்றப்பதிவு செய்யப்பட்டு மேலும் யாராவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: