Skip to content

சங்கணாச்சேரி பாதிரியாரின் குழந்தை எங்கே?

ஜூன் 20, 2010

திருவனந்தபுரம், மார்ச் 2

கேரளாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பாதிரியார் அருட்தந்தை, சிரியாக் கார்த்திகாப்பள்ளி, அங்குள்ள 16 வயதுக்ககுட்பட்ட ஒரு பெண்ணுடன் முறை தவறிய உறவு வைத்திருந்ததன் விளைவாக அப்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கேரள திருச்சபையையே அதிரவைத்த “சங்கணாச் சேரி பாலியல் குற்றச்சாட்டின் மீது இருந்த கவனம் தற்போது அந்தக் குழந்தையின் மீது திசை திரும்பியிருக்கிறது. கேரள மாநில மனித உரிமைக் கழகம் தற்போது அந்தக் குழந்தை எங்கேயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

சங்கணாச் சேரியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் அந்தப் பெண் பாதிரியாருக்கு எதிராக எந்தப் புகாரும் தன்னிடம் இல்லையென்றும், தன்னுடன் அவர் பாலியல் உறவு வைத்துக் கொண்டது தன்னுடைய சம்மதத்தின் பேரிலேயே என்றும் கூறியதையடுத்து, அவர்மீது வழக்குப் பதிவு செய்வது தீவிரமிழந்து வருகிறது. ஆயினும், அந்தப் பெண் சிறுபெண்ணாக இருந்த போதே அவளுடன் இவர் பாலியல் உறவு ஏதுவும் வைத்திருந்தாரா என்று உறுதிப் படுத்த காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இந்த விஷயத்தில் இதை ஒரு கற்பழிப்பு வழக்காக எடுத்துக் கொண்டால், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

காவல்துறையினர் அந்தப் பெண்ணின் வயது பற்றி இருவிதமான கருத்துக்களைப் கொண்டிருக்கின்றனர். பாதிரியாருக்கும், அந்த இளம்பெண்ணிற்கும் முதன்முதலாக பாலியல் தொடர்பு ஏற்பட்டபோது, அவளுக்கு வயது 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என்று பள்ளி ஆவணங்களும், 16 ஆண்டுகள் 4 மாதங்கள் என்று பஞ்சாயத்து ஆவணங்களும் காட்டுகின்றன.

நீதிமன்றம் பஞ்சாயத்து ஆவணங்களை ஏற்றுக் கொண்டால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும். பாதிரியாரைக் காப்பாற்ற பஞ்சாயத்து ஆவணங்களில் ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டனவா எனக் கண்டறிய இந்த வழக்கை விசாரித்து வரும் குழு ஆராய்ந்து வருகிறது.

1995 ஆகஸ்ட் மாதத்திலிருந்தே பாதிரியாருடன் கொண்ட முறை தவறிய உறவின் விளைவால் பிறந்த அந்த பெண் குழந்தை எங்கிருக்கிறது என்று இவ்வழக்கோடு தொடர்புக் கொண்ட யாருமே சொல்ல முன் வராததால், கிறித்துவ சமூகத்தின் சில பிரிவினரால் இவ்வழக்கை தொடர அமைக்கப்பட்ட போராட்ட குழுவினரின் கவனம் இந்த வழக்கிலிருந்து தற்போது அந்தக் குழந்தையை நோக்கி திசை திரும்பியிருக்கிறது.

அந்தக் குழந்தை உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று கண்டு பிடிக்க இப்போராட்டக் குழுவினர் கேரள மாநில மனித உரிமைக் கழகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தக் கழகத்தின் தலைவர் நீதிபதி எம் எம் பரீத் பிள்ளை, கழகத்தின் தலைமை விசாரணை அதிகாரியான ரமேஷ் சந்திர பானுவிடம் அந்தக் குழந்தை உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்பது பற்றியும்,அந்தக் குழந்தையின் பிறப்பு அந்தக் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கண்டறியுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், அக்குழந்தையின் தாய், தந்தையின் பெயர்களும் அலுவலகக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா எனவும் இந்த விசாரணை கண்டறியும் என போராட்டக் குழுவின் அமைப்பாளர் ஜோமன் புத்தன்புராக்கால் கூறினார்.

ரீடிஃப்.காமிடம் அவர் கூறியபோது, பாதிரியாருக்கும், அந்தப் பெண்ணிற்கும் தேவைப்படாத அந்தக் குழந்தையை அழிப்பதற்கு எல்லா சாத்தியமும் இருக்கிறது எனத் தெரிவித்தார். இந்த வழக்கை ஆராய்ந்த சங்கணச் சேரி தலைமை மறைமாவட்டத்தின் சமய நீதிமன்றம், அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோதே, அவளும் பாதிரியாரும் அந்தக் கருவைக் கலைத்துவிட முயற்சி செய்தனர் எனக் கூறியிருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் கருவைக் கலைப்பது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அந்த முயற்சி கைவிடப்பட்டது எனக் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

அந்த இருவருமே குழந்தையை விரும்பவில்லை என்பதை இந்த முயற்சி காட்டுவதால், அது பிறந்தவுடன், அதை அவர்கள் அழித்திருக்கக் கூடும் என்றும் ஜோமன் கூறினார். சங்கணாச் சேரி தலைமைப் பேராயரின் கீழ் பாதிரியாராக தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் சிரியாக்கினால் அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார். அந்தப் பெண்ணும் பெங்களூரில் தன்னுடைய படிப்பைத் தொடர்வதாக கூறப்படுவதால், அவளுக்கும், குழந்தையைப் பார்த்துக் கொள்வது முடியாத காரியம்.

அந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது, நாட்டுக் குடிமகன் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்றும் அவர் கூறினார். இதற்கு பஞ்சாயத்து மற்றும் தேவாலய ஆவணங்களில் அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிவது அவசியமாகிறது. இப்படிப்பட்ட ஒரு கடுமையான குற்றத்தைப் புரிந்த பின்னும் அவரை தண்டிக்காமல் விட்டுவிட திருச்சபையின் மீது மாநிலத்தின் கிறித்துவ சமூகம் கோபம் கொண்டுதுள்ளது. அவர்களில் ஒரு பிரிவினர், குருத்துவப் பணியிலிருந்து பாதிரியாருக்கு விலக அனுமதி கொடுத்திருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பாதிரியார், அந்தப் பெண்ணை மணந்து கொண்டு அவளையும், அந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

அந்தப் பெண்ணின் தந்தையிடமிருந்து புகார் வந்ததையடுத்து சங்கணாச் சேரி பேராயர் ஜோசப் பொவாதில்ஆல் அமைக்கப்பட்ட திருச்சபை சார்ந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு தேவாலயத்தில் பங்கு குருவின் கடமைகளை ஆற்ற அனுமதிக்காமல், ஆனால் ஒரு பாதிரியாராகத் தொடர சிரியாக்கை அனுமதிக்க திருச்சபையின் நீதிமன்றம் முடிவு செய்தது.

மத விதிப்படி இந்த நீதிமன்றம் இந்த விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது எனவும் இதற்கு அப்பால் தான் எதையுமே செய்ய முடியாதென்றும் பேராயர் கூறிவிட்டார். மனநிறைவில்லாத ஒரு பிரிவினரால் தான் திருச்சபையின் மதிப்பைக் கெடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு கிளறப்பட்டு வருகிறது என பேராயருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: