Skip to content

இளம் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து ஆபாச படம் எடுத்த சினிமா டைரக்டர், பாதிரியார் கைது

ஜூன் 20, 2010

(தினத்தந்தி)கொச்சி, ஜுன். 15, 2008-

இளம் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து, ஆபாச படம் எடுத்த சினிமா டைரக்டர், பாதிரியார் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம் பெண் கற்பழிப்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள தோப்பம் பாடி என்ற ஊரில் உள்ள லாட்ஜில், ஒரு இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து இருந்தனர். அவளை பலர் கற்பழித்ததாகவும், அந்த பெண்ணை வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த விஜயன் விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டார். அந்த பெண், “என்னை சினிமா டைரக்டர் ராஜன் சித்தாரா, பாதிரியார் குரியா கோஸ் ஆகியோர், 50 முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கி, ஆபாச சினிமா எடுத்தனர்’’ என்று வாக்குமூலம் கொடுத்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் நாராயணன், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், “எனது மகளை விபசாரத்தில் தள்ளியவர்கள் மற்றும் ஆபாச படம் எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாதிரியார் கைது

கோர்ட்டு உத்தரவு படி, இந்த வழக்கில் போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். சினிமா டைரக்டர் ராஜன் சித்தாரா, திருச்சூரில் கைது செய்யப்பட்டார். பாதிரியார் குரியா கோசை, காஞ்சிரப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் (ஜே) கட்சியின் தலைவர் ஷிபு, ஆல்வாயை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரும் கைதானார்கள்.

இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி, ஆபாச படம் எடுத்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: